பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் சொகுசு காரின் ஹைபிரிட் மாடல் வெளியீடு

Written By:

சொகுசு கார்கள் என்றாலே மைலேஜ் பற்றி பேசுவது கவுரவ குறைச்சல் என்ற மனோபாவம் இருப்பது இயற்கை. ஆனால், வாகனங்களால் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டு வரும் பெரும் தீங்கு காரணமாக, எரிபொருளில் சிக்கனமான கார்களையும், மாற்று எரிபொருள் வாகனங்களையும் தயாரிப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கு சொகுசு கார்களும் விதிவிலக்கல்ல. எதிர்கால சந்தையையும், அரசு விதிமுறைகளையும் கருத்தில்கொண்டு சிறந்த எரிபொருள் சிக்கனம் தர வல்ல மாடல்களை பிஎம்டபிள்யூ நிறுவனம் உருவாக்கி வருகிறது. அந்த வகையில், அந்த நிறுவனத்தின் மிக உயரிய சொகுசு கார் மாடலான 7 சீரிஸ் சொகுசு காரில் ஹைபிரிட் சிஸ்டத்தை கொடுத்து களமிறக்க உள்ளது. இந்த காரின் மைலேஜ்தான் தற்போது கோடீஸ்வர வாடிக்கையாளர்கள் மட்டுமல்ல, பிற கார் தயாரிப்பு நிறுவனங்களின் கவனத்தையும் தன்பால் ஈர்த்துள்ளது.

புதிய பிராண்டு

புதிய பிராண்டு

தனது புதிய ஹைபிரிட் மாடல்களை ஐ-பெர்ஃபார்மென்ஸ் என்ற புதிய பிராண்டில் பிஎம்டபிள்யூ நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த மாடல்கள் 2017 பிஎம்டபிள்யூ 704e என்ற குடும்ப வரிசையில் வெளியிடப்பட உள்ளன. இந்த வரிசையில் 740e ஐ- பெர்பார்மென்ஸ், 740Le ஐ- பெர்ஃபார்மென்ஸ் மற்றும் 740Le xDrive ஆகிய மூன்று வேரியண்ட்டுகளில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

ஹைபிரிட் சிஸ்டம்

ஹைபிரிட் சிஸ்டம்

புதிய பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் ஹைபிரிட் காரில் 4 சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் எஞ்சின் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் கொடுக்கப்பட்டிருக்கும். இரண்டும் சேர்ந்து அதிகபட்சமாக 326 எச்பி பவரை அளிக்கும். இந்த காரில் இருக்கும் இ-ட்ரைவ் என்ற பட்டனை தட்டினால், கார் முழுவதுமாக மின் மோட்டாரில் இயங்கும். பெட்ரோல் எஞ்சின் அணைந்துவிடும்.

செயல்திறன்

செயல்திறன்

இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை 5.5 வினாடிகளில் எட்டிவிடும். அதிகபட்சமாக மணிக்கு 250 கிமீ வேகம் வரை செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

ரேஞ்ச்

ரேஞ்ச்

பேட்டரியில் இயங்கும்போது 740e வேரியண்ட் 40 கிமீ தூரமும், 740Le வேரியண்ட்டும், ஆல் வீல் டிரைவ் மாடலும் அதிகபட்சமாக 37 கிமீ தூரமும் செல்லும். நகர்ப்புறத்தில் தினசரி பயன்பாட்டிற்கு இது மிகச்சிறந்ததாக இருக்கும்.

மைலேஜ்

மைலேஜ்

ஹைபிரிட் கார்களுக்கான கணக்கீடுகளின்படி, 100 கிமீ தூரம் செல்வதற்கு இந்த கார் 2.1 லிட்டர் முதல் 2.3 லிட்டர் வரை எரிபொருளை செலவிடும். அதாவது, லிட்டருக்கு 47.61 கிமீ மைலேஜ் தரும் என்று பிஎம்டபிள்யூ தெரிவிக்கிறது.

கார்பன் புகை

கார்பன் புகை

மைலேஜில் மட்டுமல்ல, மிக குறைவான கரியமில வாயுவை வெளியிடும் காராகவும் இருக்கும். ஒரு கிலோமீட்டருக்கு 49 கிராம் மட்டுமே கார்பனை வெளியிடுமாம்.

பேட்டரி சார்ஜ்

பேட்டரி சார்ஜ்

இந்த காரில் கொடுக்கப்பட்டிருக்கும் 9.2 kWh பேட்டரியை சார்ஜ் செய்வதற்கு 4 மணி நேரம் பிடிக்கும். பிஎம்டபிள்யூ ஐ வால்பாக்ஸ் மூலமாக வெறும் 3 மணி நேரத்தில் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்துவிடலாம்.

டிரைவிங் ஆப்ஷன்

டிரைவிங் ஆப்ஷன்

2017 பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரில் Eco, Pro, Comfort மற்றும் Sport ஆகிய நான்குவிதமான டிரைவிங் மோடுகளில் இயங்கும் வசதி கொடுக்கப்பட்டிருக்கிறது.

 அறிமுகம்

அறிமுகம்

தற்போது இந்த காரின் சில முக்கிய விபரங்களையும், படங்களையும் ஆன்லைனில் பிஎம்டபிள்யூ வெளியிட்டு இருக்கிறது. இந்தநிலையில், அடுத்த மாதம் ஜெனீவா மோட்டார் ஷோவில் இந்த கார் முறைப்படி, பார்வைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அப்போது, இந்த காரின் முழுமையான விபரங்கள் வெளியிடப்பட உள்ளன.

 
English summary
German luxury car maker BMW has revealed the new M760Li xDrive and 740e Plug-in hybrid models online based on the G11 7-Series.
Story first published: Monday, February 15, 2016, 10:31 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark