ஏப்ரலில் கார் நிறுவனங்கள் வழங்கும் சலுகைகள், தள்ளுபடிகள் - முழு விவரங்கள்

Written By:

நீங்கள் புதிய கார் வாங்க விரும்புகிறீர்களா? எந்த கார் வாங்கலாம் என்ற குழப்பத்தில் உள்ளீர்களா?

இந்த ஏப்ரல் மாதத்தில் பல்வேறு கார் நிறுவனங்கள் ஏராளமான சலுகைகளையும், தள்ளுபடிகளையும் வழங்கி வருகின்றன.

எந்த நிறுவனங்கள் எந்த கார் மாடல்கள் மீது என்ன சலுகைகள் வழங்குகின்றன என வரும் ஸ்லைடரில் விவரமாக தெரிந்து கொள்ளலாம்.

ஃபியட் புன்ட்டோ எவோ

ஃபியட் புன்ட்டோ எவோ

ஃபியட் நிறுவனம், தங்களின் ஃபியட் புன்ட்டோ எவோ ஹேட்ச்பேக் மாடலின் மீது, அவை வாங்கபடும் ஷோரூம்களை பொருத்து 65,000 ரூபாய் முதல் 85,000 ரூபாய் வரையிலான தள்ளுபடிகள் வழங்கபடுகிறது.

ஃபியட் புன்ட்டோ எவோ

ஃபியட் புன்ட்டோ எவோ

ஃபியட் புன்ட்டோ எவோ ஹேட்ச்பேக் மீது வழங்கபடும் சலுகைகள், பெட்ரோல் மாடல் மற்றும் டீசல் மாடல் ஆகிய இரண்டின் மீது கிடைக்கும்.

நிஸான் மைக்ரா;

நிஸான் மைக்ரா;

நிஸான் நிறுவனம் வழங்கும் நிஸான் மைக்ரா ஹேட்ச்பேக் மீது 70,000 ரூபாய் மதிப்பிலான ஆதாயங்கள் வழங்கபடுகிறது.

நிஸான் மைக்ரா;

நிஸான் மைக்ரா;

நிஸான் மைக்ரா ஹேட்ச்பேக், நல்ல ஹேண்ட்லிங் வசதி கொண்டுள்ள மாடல் ஆகும். பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் டீசல் இஞ்ஜின் உடைய 2 மாடல்கள் மீதும் இந்த சலுகைகள் கிடைக்கிறது. நிஸான் மைக்ரா, தேர்வு முறையிலான சிவிடி கியர்பாக்ஸ் வசதிட்யுடனும் கிடைக்கிறது.

மாருதி வேகன் ஆர் ஸ்ட்ரிங்ரே;

மாருதி வேகன் ஆர் ஸ்ட்ரிங்ரே;

மாருதி சுஸுகி நிறுவனம், தங்களின் வேகன் ஆர் மாடலின் குளுமையான வடிவம் கொண்ட ஸ்ட்ரிங்ரே காரின் மீது, சில இடங்களில் 70,000 ரூபாய் வரையிலான தள்ளுபடிகளை வழங்குகின்றனர்.

மாருதி வேகன் ஆர் ஸ்ட்ரிங்ரே;

மாருதி வேகன் ஆர் ஸ்ட்ரிங்ரே;

மாருதி வேகன் ஆர் ஸ்ட்ரிங்ரே, அடிப்படையில் அதே வேகன் ஆர் கார் ஆகும். ஆனால், இளம் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இதன் தோற்றம் சற்று மறுவடிவமைக்கபட்டுள்ளது.

மாருதி ஆல்ட்டோ 800;

மாருதி ஆல்ட்டோ 800;

இந்தியாவில் மிக அதிகம் விற்பனை ஆகும் மாடலான மாருதி ஆல்ட்டோ மீது 55,000 ரூபாய் வரையிலான ஆதாயங்கள் வழங்கபடுகிறது.

மாருதி ஆல்ட்டோ 800;

மாருதி ஆல்ட்டோ 800;

இந்த விலை குறைப்பிற்கு மிக முக்கிய காரணமாக விளங்குவது, மாதம் தோறும் அதிகரித்து கொண்டே இருக்கும் ரெனோ க்விட் மாடலின் விற்பனை தான் என தெரிகிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி500;

மஹிந்திரா எக்ஸ்யூவி500;

மஹிந்திரா நிறுவனத்தின் மிக முக்கியமான மாடலாக விளங்கும் மஹிந்திரா எக்ஸ்யூவி500 மீதும் தள்ளுபடிகள் வழங்கபடுகிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 மாடலின் சில தேர்ந்தெடுக்கபட்ட வேரியண்ட்கள் மீது 75,000 ரூபாய் வரையிலான சலுகைகள் கிடைக்கிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி500;

மஹிந்திரா எக்ஸ்யூவி500;

மஹிந்திரா எக்ஸ்யூவி500 காரும், சமீபத்தில் சில மேம்பாடுகளுக்கு உட்படுத்தபட்டது. இதன் தேர்ந்தெடுக்கபட்ட வேரியண்ட்களுக்கு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கபட்டுள்ளது.

நிஸான் டெர்ரானோ;

நிஸான் டெர்ரானோ;

ரெனோ டஸ்ட்டரை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கபட்ட நிஸான் டெர்ரானோ மீது 65,000 ரூபாய் வரை மதிப்பு கொண்ட ஆதாயங்கள் வழங்கபடுகிறது. இந்த சலுகைகள், ஸ்டாக் உள்ளவரை மட்டுமே கிடைக்கும்.

நிஸான் டெர்ரானோ;

நிஸான் டெர்ரானோ;

ரெனோ டஸ்ட்டர் மாடலில் உள்ளது இஞ்ஜினே தான், நிஸான் டெர்ரானோ மாடலின் பெட்ரோல் மாடல் மற்றும் டீசல் மாடலுக்கும் வழங்கபட்டுள்ளது.

ஆனால், நிஸான் டெர்ரானோ மாடலில் ஆல்-வீல் டிரைவ் சிஸ்டம் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆகிய வசதிகள் வழங்கபடவில்லை.

ரெனோ லாட்ஜி;

ரெனோ லாட்ஜி;

ரெனோ லாட்ஜி மீது 2,00,000 ரூபாய் வரையிலான தள்ளுபடி வழங்கபடுகிறது. சில நகரங்களில் இலக்கு விற்பனையை அடைவதற்காக ரெனோ நிறுவனம் இத்தகைய சலுகைகளை வழங்குகிறது.

ரெனோ லாட்ஜி;

ரெனோ லாட்ஜி;

ரெனோ லாட்ஜி எம்பிவி ஏராளமான எதிர்பார்ப்புகளை உருவாக்கி, இந்திய வாகன சந்தைகளில் அறிமுகம் செய்யபட்டது. ஆனால், இந்த வாகனம் அவ்வளவாக ஷோபிக்க முடியவில்லை.

ரெனோ லாட்ஜி எம்பிவி சிறந்த இட வசதி கொண்டுள்ளது. ரெனோ டஸ்ட்டர் மாடலில் உபயோகிக்கபடும் அதே டீசல் இஞ்ஜின் தான், இந்த ரெனோ லாட்ஜி மாடலிலும் பொருத்தபட்டுள்ளது.

ஃபியட் லீனியா;

ஃபியட் லீனியா;

ஃபியட் நிறுவனம் வழங்கும் கார்களில், ஃபியட் லீனியா மாடலும் குறைந்த அளவில் விற்பனையாகும் மாடல் ஆகும்.

இதன் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில், சில இடங்களில் ஃபியட் லீனியா மீது 1.25 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆதாயங்கள் வழங்கபடுகிற

ஃபியட் லீனியா;

ஃபியட் லீனியா;

தன் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில், சில இடங்களில் ஃபியட் லீனியா மீது 1.25 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆதாயங்கள் வழங்கபடுகிறது.

ஃபியட் லீனியா, பெட்ரோல் வேரியண்ட் மற்றும் டீசல் வேரியண்ட் ஆகிய இரண்டிலும் கிடைக்கிறது. அப்படி இருந்தும் அதன் விற்பனைக்கு அதிகமாக கை கொடுக்கவில்லை.

ரெனோ ஸ்காலா;

ரெனோ ஸ்காலா;

ரெனோ ஸ்காலா மீது 85,000 ரூபாய் மீது 85,000 ரூபாய் தள்ளுபடி வழங்கபடுகிறது.

ரெனோ ஸ்காலா;

ரெனோ ஸ்காலா;

ரெனோ ஸ்காலா இந்திய சந்தைகளில் அவ்வளவாக விற்பனை ஆவதில்லை. ரெனோ நிறுவனம், இதன் விற்பனையை கூட்ட தங்களால் ஆன அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

நிஸான் சன்னி;

நிஸான் சன்னி;

நிஸான் சன்னி மீது, வாடிக்கையாளர்கள் தேர்தெடுக்கும் வேரியண்ட்டை பொருத்தும், இடத்தை பொருத்தும் 75,000 ரூபாய் வரையிலான கேஷ் டிஸ்கவுண்ட் (தள்ளுபடி) வழங்கபடுகிறது.

நிஸான் சன்னி;

நிஸான் சன்னி;

நிஸான் சன்னி, ரெனோ ஸ்காலா காரை போன்றதாகும். நிஸான் சன்னி மிக குறைந்த அளவிலேயே விற்பனையாகி கொண்டிருக்கிறது.

இது மிக அதிக அளவிலான இண்டீரியர் இட வசதி கொண்டுள்ளது.

மாருதி சுஸுகி டிசையர்;

மாருதி சுஸுகி டிசையர்;

மாருதி நிறுவனம் வழங்கும் மாருதி சுஸுகி டிசையர் காம்பேக்ட் செடான் தான், இந்தியாவில் இரண்டாவது அதிகம் விற்பனையாகும் காராக உள்ளது.

கடந்த சில மாதங்களாக இதன் விற்பனை குறைந்து கொண்டிருக்கிறது. அப்படி இருந்தும் இதன் சந்தை ஆதிக்கம் குறையவில்லை.

மாருதி சுஸுகி டிசையர்;

மாருதி சுஸுகி டிசையர்;

மாருதி நிறுவனம், இந்த மாருதி சுஸுகி டிசையர் மீது குறைந்தபட்சமாக 15,000 ரூபாய் தள்ளுபடி வழங்குகிறது. மேலும், 35,000 ரூபாய் வரையிலான எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கிறது.

சில இடங்களில் இதன் ஏஎம்டி வெர்ஷன் மீதும், டிசையர் டூர் மீது, 25,000 ரூபாய் வரையிலான சலுகைகள் வழங்கபடுகிறது.

ஃபியட் அவென்ச்சுரா;

ஃபியட் அவென்ச்சுரா;

ஃபியட் நிறுவனம் வழங்கும், ஃபியட் அவென்ச்சுரா மீது 30,000 ரூபாய் மதிப்பிலான ஆதாயங்கள் கிடைக்கிறது.

ஃபியட் லீனியா கிளாசிக்;

ஃபியட் லீனியா கிளாசிக்;

ஃபியட் நிறுவனம் வழங்கும் ஃபியட் லீனியா கிளாசிக் மீது, 1,00,000 ரூபாய் வரையிலான ஆதாயங்கள் வழங்கபடுகிறது.

இந்த அனைத்து சலுகைகளும், ஸ்கீம்களும் தேர்ந்தெடுக்கபட்ட வேரியண்ட்கள் மீதும், ஸ்டாக் உள்ளவரை மட்டுமே கிடைக்கும்.

இயான்;

இயான்;

ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் வழங்கும் இயான் மாடல் மீது 38,000 ரூபாய் வரையிலான ஆதாயங்கள் வழங்கபடுகிறது. இந்த ஆதாயங்கள் பெட்ரொல் மற்றும் எல்பிஜி ஆகிய 2 வேரியண்ட்களிலும் கிடைக்கிறது.

ஐ10;

ஐ10;

ஹூண்டாய் ஐ10 மீது 45,000 ரூபாய் தள்ளுபடி வழங்கபடுகிறது. மீண்டும், இந்த ஹூண்டாய் ஐ10 ஹேட்ச்பேக் மீது வழங்கபடும் சலுகைகள், பெட்ரொல் மற்றும் எல்பிஜி ஆகிய 2 வேரியண்ட்களிலும் கிடைக்கிறது.

எக்ஸ்சென்ட்;

எக்ஸ்சென்ட்;

ஹூண்டாய் எக்ஸ்சென்ட் காம்பேக்ட் செடானின் பெட்ரோல் மாடல் மீது 45,000 ரூபாய் வரையிலான ஆதாயம் கிடைக்கிறது.

ஹூண்டாய் எக்ஸ்சென்ட்டின் டீசல் மாடல் மீது 50,000 ரூபாய் வரையிலான ஆதாயம் கிடைக்கிறது.

எலைட் ஐ20;

எலைட் ஐ20;

ஹூண்டாய் எலைட் ஐ20 பிரிமியம் ஹேட்ச்பேக்கின் டீசல் வேரியண்ட் மீது மட்டும் 10,000 ரூபாய்க்கான தள்ளுபடி வழங்கபடுகிறது.

கிராண்ட் ஐ10;

கிராண்ட் ஐ10;

ஹூண்டாய் நிறுவனம் வழங்கும் கிராண்ட் ஐ10 மாடலின் பெட்ரோல் வேரியண்டின் மீது 58,000 ரூபாய் வரையிலான ஆதாயம் கிடைக்கிறது.

கிராண்ட் ஐ10 மாடலின் டீசல் வேரியண்டின் மீது 68,000 ரூபாய் வரையிலான ஆதாயம் கிடைக்கிறது.

வெர்னா;

வெர்னா;

ஹூண்டாய் நிறுவனம் தங்களின் வெர்னா செடானின் பெட்ரோல் வேரியண்ட் மற்றும் டீசல் வேரியண்ட் ஆகிய இரண்டின் மீதும் 60,000 ரூபாய் வரையிலான ஆதாயம் வழங்குகிறது.

எலன்ட்ரா;

எலன்ட்ரா;

ஹூண்டாய் எலன்ட்ரா பிரிமியம் செடானின் பெட்ரோல் வேரியண்ட் மற்றும் டீசல் வேரியண்ட் ஆகிய இரண்டின் மீதும் 80,000 ரூபாய் வரையிலான ஆதாயம் கிடைக்கிறது.

சான்ட்டா பீ;

சான்ட்டா பீ;

அதிகப்படியாக, ஹூண்டாய் சான்ட்டா பீ எஸ்யூவி மீது 1,00,000 ரூபாய் வரையிலான மதிப்பு கொண்ட ஆதாயங்கள் வழங்கபடுகிறது.

ஹூண்டா மோட்டார்ஸ் நிறுவனம் வழங்கும் அனைத்து சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள், கேஷ் டிஸ்கவுண்ட், எக்ஸ்சேஞ்ச் போனஸ், லாயல்டி போனஸ், கார்ப்பரேட் டிஸ்கவுண்ட் ஆகிய வடிவங்களில் வழங்கபடுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

நிஸான் தொடர்புடைய செய்திகள்

ரெனோ தொடர்புடைய செய்திகள்

ஃபியட் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
Are you planning to buy New Car? There are lots of choices and confused, which one to choose? Here are the list of Cars that are presented with lots of Offers and discounts to choose from. There are lots of offers from firms like Renault, Nissan, Fiat, Hyundai and so on. To know, which car makers give what kinds of offers and discounts, on which variants, check here...

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more