ஆகஸ்ட் மாதத்தில் கார் நிறுவனங்களின் அசத்தலான தள்ளுபடிகள் - முழு விவரம்

Written By:

இந்திய வாகன சந்தைகளில் ஏராளமான கார் நிறுவனங்கள் பல்வேறு அசத்தலான சலுகைகளையும், தள்ளுபடிகளையும் அள்ளி தருகின்றனர். இந்த மாதத்தில் சுதந்திர தினம் உள்ளிட்ட பல்வேறு கொண்டாட்டங்களின் பெயரில் பல சலுகைகள் அளிக்கப்படுகிறது.

இந்த ஆகஸ்ட் மாதத்தில் அதிகப்படியாக, 5.5 லட்சம் ரூபாய் வரையிலான தள்ளுபடிகள் கிடைக்கிறது. நீங்கள் புதிய கார் வாங்க ஆர்வமாக இருந்தால், வாங்குவதற்கு முன், இந்த பட்டியலை ஒரு முறை பார்த்துவிட்டு பின்னர் முடிவு செய்யவும்.

இந்த பட்டியல் உங்களுக்கும் நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.

எந்த நிறுவனங்கள் எவ்வளவு தள்ளுபடிகள் வழங்குகின்றன என வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

மாருதி சுஸுகி வேகன்ஆர் ஸ்டிங்ரே;

மாருதி சுஸுகி வேகன்ஆர் ஸ்டிங்ரே;

மாருதி சுஸுகி வேகன்ஆர் ஸ்டிங்ரே, மாருதி நிறுவனம் வழங்கும் மாடல்களில் தொடர்ந்து நல்ல முறையில் விற்பனையாகும் மாடல்களில் ஒன்றாக உள்ளது. வேகன்ஆர் ஸ்டிங்ரே மாடலுக்கு ஸ்டைலிஷான கவனிப்பு வழங்கப்பட்டுள்ளது.

வேகன்ஆர் ஸ்டிங்ரே மாடலின் அனைத்து வேரியன்ட்கள் மீதும் 70,000 ரூபாய் மதிப்பிலான தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது.

மாருதி சுஸுகி வேகன்ஆர் ஸ்டிங்ரே, 998 சிசி பெட்ரோல் இஞ்ஜின் கொண்டுள்ளது. இந்த இஞ்ஜின் 67 பிஹெச்பியையும், 90 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாகும். வேகன்ஆர் ஸ்டிங்ரே, 5 ஸ்பீட் மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10;

ஹூண்டாய் கிராண்ட் ஐ10;

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 ஹேட்ச்பேக், ஹூண்டாய் நிறுவனம் வழங்கும் மாடல்களில் மிகவும் புகழ்பெற்ற மாடலாக உள்ளது. ஹூண்டாய் கிராண்ட் ஐ10 ஹேட்ச்பேக்கின் சில வேரியன்ட்கள் மீது 45,000 ரூபாய் வரை தள்ளுபடி கொடுக்கப்படுகிறது.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10, 1.2 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் 1.1 லிட்டர் டீசல் இஞ்ஜின் ஆகிய இஞ்ஜின் தேர்வுகளுடன் வெளியாகிறது.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 ஹேட்ச்பேக்கின் பெட்ரோல் வேரியன்ட், 5-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாஸ் தேர்வுகளுடன் கிடைக்கும். ஆனால், டீசல் இஞ்ஜின், மேனுவல் கியர்பார்க்ஸ் தேர்வுடன் மட்டுமே கிடைக்கும்.

ஃபோக்ஸ்வேகன் போலோ;

ஃபோக்ஸ்வேகன் போலோ;

ஃபோக்ஸ்வேகனின் சில தேர்ந்தெடுக்கப்பட்ட டீலர்ஷிப்களில், ஃபோக்ஸ்வேகன் போலோ 35,000 ரூபாய் மதிப்பிலான தள்ளுபடிகள் அளிக்கப்படுகிறது.

ஸ்போர்ட்டியான ஃபோக்ஸ்வேகன் போலோ, 3 சிலிண்டர்கள் உடைய 1.2 லிட்டர் இஞ்ஜின் தேர்விலும், 1.5 லிட்டர் டீசல் இஞ்ஜின் தேர்விலும் கிடைக்கிறது.

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம், இந்த போலோ-வை ஜிடி வடிவத்தில் வழங்குகின்றனர். டீஸ்ஐ வேரியன்ட்டை சேர்ந்த இது, ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டுள்ளதால், சிறந்த பவர் அளிக்கிறது.

ஃபியட் அவென்ச்சுரா;

ஃபியட் அவென்ச்சுரா;

ஹேட்ச்பேக் ஹேண்ட்லிங் வசதிகளுடனான எஸ்யூவி தான் உங்கள் தேடல் என்றால், ஃபியட் அவென்ச்சுரா உங்களுக்கு சிறந்த தேர்வாகும். ஃபியட் அவென்ச்சுரா மாடல், புன்ட்டோ ரேஞ்ச்சில் ஃபியட் நிறுவனம் வழங்கும் கிராஸ்ஓவர் ஆகும்.

ஃபியட் நிறுவனம், அவென்ச்சுரா மாடல் மீது 65,000 வரையிலான தள்ளுபடிகளை அளிக்கிறது.

ஃபியட் அவென்ச்சுரா, பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் டீசல் இஞ்ஜின் என 2 இஞ்ஜின் தேர்வுகளில் கிடைக்கிறது. இதன், 1.4-லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின், 89 பிஹெச்பியையும், 115 என் எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாகும்.

இதன் 1.3 லிட்டர் மல்டி-ஜெட் டீசல் இஞ்ஜின், 75 பிஹெச்பியையும், 197 என்எம் வெளிப்படுத்தும் உடையதாக உள்ளது.

பிஎம்டபுள்யூ எக்ஸ்5;

பிஎம்டபுள்யூ எக்ஸ்5;

ஜெர்மானிய சொகுசு ஸ்போர்ட்ஸ் கார் உற்பத்தி செய்யும் நிறுவனமான பிஎம்டபுள்யூ, தங்களின் பிஎம்டபுள்யூ எக்ஸ்5 மாடல் மீது கிட்டத்தட்ட 5.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான தள்ளுபடிகள் வழங்குகின்றது.

பிஎம்டபுள்யூ எக்ஸ்5 சொகுசு கார், 3.0 லிட்டர் இஞ்ஜின் கொண்டுள்ளது. இந்த பிஎம்டபுள்யூ எக்ஸ்5, மெர்சிடிஸ் ஜிஎல்இ மற்றும் ஜிஎல்எஸ் ஆகிய மாடல்களுடன் போட்டி போட வேண்டியுள்ளது.

ரெனோ டஸ்ட்டர் எம்டி;

ரெனோ டஸ்ட்டர் எம்டி;

ஃபிரான்ஸ் நாட்டை மையமாக கொண்டு இயங்கும் ரெனோ நிறுவனம், இந்தியாவில் முதல் முறையாக காம்பேக்ட் எஸ்யூவியை அறிமுகம் செய்தது. இதனைஉஅடுத்து பிற நிறுவனங்களும் காம்பேக்ட் எஸ்யூவிக்களை அறிமுகம் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளபட்டனர்.

எனினும் சமீபகாலமாக ரெனோ நிறுவனம், அதன் போட்டி நிறுவனங்களிடம் இருந்து கடுமையான போட்டியை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ரெனோ நிறுவனம், மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட ரெனோ டஸ்ட்டர் காம்பேக்ட் எஸ்யூவி மீது 70,000 ரூபாய் வரையிலான தள்ளுபடிகளை அளிக்கின்றனர்.

இந்த ரெனோ டஸ்ட்டர் காம்பேக்ட் எஸ்யூவி பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் டீசல் இஞ்ஜின் ஆகிய 2 இஞ்ஜின் தேர்வுகளில் கிடைக்கும். டீசல் இஞ்ஜின் கொண்ட வேரியன்ட், மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் என 2 தேர்வுகளிலும் கிடைக்கும்.

எனினும், இந்த 70,000 ரூபாய் வரையிலான தள்ளுபடிகள், மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட மாடல் மீது மட்டுமே கிடைக்கும்.

மெர்சிடிஸ்-பென்ஸ் சி200;

மெர்சிடிஸ்-பென்ஸ் சி200;

மெர்சிடிஸ்-பென்ஸ் சி200 மாடல் மீது, இன்சூரன்ஸுடன் சேர்த்து 4,00,000 ரூபாய் தள்ளுபடி அளிக்கப்படுகிறது. ஆனால், இந்த தள்ளுபடியானது மாநிலத்திற்கு மாநிலம் வேறுபட வாய்ப்புகள் உள்ளன.

மெர்சிடிஸ்-பென்ஸ் சி200, ஆடி ஏ4, பிஎம்டபுள்யூ 3-சீரிஸ் மற்றும் ஜாகுவார் எக்ஸ்இ ஆகிய மாடல்களுடன் கடுமையாக போட்டி போட வேண்டியுள்ளது.

ஸ்கோடா ரேபிட்;

ஸ்கோடா ரேபிட்;

இந்தியாவில், ஸ்கோடா ரேபிட் செடான், நல்ல திறன்மிக்க மிட்-சைஸ் செடானாக உள்ளது. இதன் மேம்படுத்தப்பட்ட வடிவம் இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இதனால், ஸ்டாக் கிளியர் செய்யும் நோக்கில், தற்போதைய ஸ்கோடா ரேபிட் மீது 1.10 லட்சம் ரூபாய் தள்ளுபடி கிடைக்கிறது. ஸ்கோடா ரேபிட் செடான், பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் டீசல் இஞ்ஜின் என 2 இஞ்ஜின் தேர்வுகளில் வெளியாகிறது.

ஸ்கோடா ரேபிட் செடானின் 1.6 லிட்டர் எம்பிஐ பெட்ரோல் இஞ்ஜின் கொண்ட வேரியன்ட், 103 பிஹெச்பியையும், 153 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாகும்.

ஸ்கோடா ரேபிட் செடானின் 1.5 லிட்டர் டீசல் இஞ்ஜின் கொண்ட வேரியன்ட், 103 பிஹெச்பியையும், 250 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாக உள்ளது.

ஹோண்டா அமேஸ் (ப்ரீ-ஃபேஸ்லிஃப்ட் மாடல்);

ஹோண்டா அமேஸ் (ப்ரீ-ஃபேஸ்லிஃப்ட் மாடல்);

ஹோண்டா நிறுவனம், பொலிவு கூட்டப்பட்ட ஹோண்டா அமேஸ் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளனர். ஆனால், இன்னுமும் கிளியர் செய்யப்படாத ஸ்டாக்குகள் கொஞ்சம் உள்ளது. இதை கிளியர் செய்யும் நோக்கில், ஜப்பானின் ஹோண்டா நிறுவனம், இருக்கும் ஸ்டாக்கை பொருத்து, ப்ரீ-ஃபேஸ்லிஃப்ட் மாடல் எனப்படும் பொலிவு கூட்டப்பதுவதற்கு முந்தைய மாடல் மீது 1 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி அளிக்கின்றனர்.

ஹோண்டா அமேஸ், பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் டீசல் இஞ்ஜின் என 2 இஞ்ஜின் தேர்வுகளிலும் வெளியாகிறது.

மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட 1.2 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின், 87 பிஹெச்பியை வெளிப்படுத்தும் திறன்மிக்கது. சிவிடி கியர்பாக்ஸ் உடைய 1.2 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் 89 பிஹெச்பியை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

ஹோண்டா அமேஸின் 1.5 லிட்டர் டீசல் இஞ்ஜின், 99 பிஹெச்பியையும், 200 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாக உள்ளது. இதன் இஞ்ஜின், 5-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கும்.

நிஸான் சன்னி;

நிஸான் சன்னி;

ஜப்பானை சேர்ந்த நிஸான் நிறுவனம் வழங்கும் நிஸான் சன்னி, பின் இருக்கையில் உள்ள பயணியர்களுக்கு, சவுகரியமான லெக்ரூம் ஸ்பேஸ் கொண்டுள்ளது. நிஸான் சன்னி மீது 90,000 ரூபாய் வரையிலான தள்ளுபடிகள் அளிக்கப்படுகிறது.

நிஸான் சன்னி, 1.5 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இஞ்ஜின் ஆகிய 2 இஞ்ஜின் தேர்வுகளில் கிடைக்கிறது.

நிஸான் சன்னியின் 1.5 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின், 98 பிஹெச்பியையும், 134 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையது. நிஸான் சன்னியின் 1.5 லிட்டர் டீசல் இஞ்ஜின், 85 பிஹெச்பி பவரையும், 200 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாகும்.

ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ;

ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ;

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம், தங்களின் வென்ட்டோ பிரிமியம் செடான் மீது 75,000 ரூபாய் வரையிலான தள்ளுபடியினை சில தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் மட்டும் அளிக்கிறது.

ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ, ஹோண்டா சிட்டி மற்றும் மாருதி சியாஸ் ஆகிய மாடல்களுடன் போட்டி போட வேண்டியுள்ளது. ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோவின் 1.6 லிட்டர் எம்பிஐ பெட்ரோல் இஞ்ஜின், 104 பிஹெச்பி பவரையும், 153 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இதன் திறன்மிக்க 1.2 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் இஞ்ஜின், 104 பிஹெச்பியையும், 175 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோவின் 1.5 லிட்டர் டிடிஐ இஞ்ஜின், 104 பிஹெச்பியையும், 250 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது.

கியர்பாக்ஸ் பொருத்த வரை, 1.5 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் 5-ஸ்பீட் கியர்பாக்ஸுடனும், இதன் 1.2 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டிடிஐ இஞ்ஜின், 7-ஸ்பீட் டியூவல் கிளட்ச் கியர்பாக்ஸுடனும் இணைக்கப்பட்டிருக்கும்.

மாருதி சியாஸ்;

மாருதி சியாஸ்;

செடான் செக்மென்ட்டிலேயே மாருதி சியாஸ் தான் சிறந்த முறையில் விற்பனையாகும் செடானாக உள்ளது. இது ஹோண்டா சிட்டியின் விற்பனையை முறியடிக்கும் நோக்கில் போட்டி போடுகிறது.

மாருதி சியாஸ் செடானின் தேர்ந்தெடுக்கப்பட்ட வேரியன்ட்கள் மீது மாருதி நிறுவனம், 45,000 ரூபாய் வரையிலான தள்ளுபடி அளிக்கப்படுகிறது. எனினும், ஸ்போர்ட்டியான ஆர்எஸ் வேரியன்ட் மீது எந்த விதமான தள்ளுபடிகளும் வழங்கப்படவில்லை.

இறுதி கருத்து;

இறுதி கருத்து;

நீங்கள் புதிய கார் வாங்க முடிவு செய்தால், தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் பார்ப்பது ஒரு பக்கம் இருந்தாலும், நீங்கள் வாங்கும் காரின் தரம் மற்றும் செயல்திறன் குறித்த அம்சங்களில் அதிக கவனம் செலுத்தினால் நெடுநோக்கில் மிகுந்த நன்மை பயக்கும்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

சுதந்திர தினத்தை ஒட்டி 41,000 ரூபாய் வரையிலான சலுகைகள் வழங்கும் ரெனோ

ஃபோர்டு ஃபிகோ, ஃபிகோ ஆஸ்பயர் விலை அதிரடியாக குறைப்பு - முழு விவரம்

70% தள்ளுபடியில் பைக் சர்வீஸ் மற்றும் கார் பராமரிப்பு ஆக்சஸரீஸ்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
New Car Discounts for the Month of August are revealed. With start of this August, car manufacturers are offering discounts on some of their models. If you are looking to buy car, these discounts and offers on new cars will help you choose best deal. Maximum Discount of Rs.5.5 lakhs are offered on some models. To know more about this list of discounts, check here...
Story first published: Thursday, August 11, 2016, 18:11 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark