2016 செவர்லே க்ரூஸ் செடான் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

By Ravichandran

புதிய 2016 செவர்லே க்ரூஸ் செடான் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யபட்டுள்ளது.

புதிய செவர்லே க்ரூஸ் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸலைடர்களில் காணலாம்.

புதிய செவர்லே க்ரூஸ் பற்றி...

புதிய செவர்லே க்ரூஸ் பற்றி...

செவர்லே இந்தியா நிறுவனம், தங்களின் புதிய 2016 க்ரூஸ் செடான் காரை அறிமுகம் செய்துள்ளது. புதிய 2016 க்ரூஸ் செடான் காருக்கு பல்வேறு புதிய அம்சங்களும், விஷுவல் மேம்பாடுகளும் வழங்கபட்டுள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

புதிய 2016 க்ரூஸ் செடான், 2.0 லிட்டர் விசிடிஐ டீசல், டர்போசார்ஜ்ட் இஞ்ஜின் கொண்டுள்ளது. இதன் இஞ்ஜின், 6-ஸ்பீட் மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கபட்டுள்ளது.

திறன்;

திறன்;

புதிய 2016 க்ரூஸ் செடானின் இஞ்ஜின், 163.72 பிஹெச்பி-யையும், உச்சபட்சமாக 380 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

முன்புற தோற்றம்;

முன்புற தோற்றம்;

புதிய 2016 க்ரூஸ் செடானுக்கு, செவர்லே வடிவமைப்பாளர்கள் முழுவதிலுமாக மாறுபட்ட வகையிலான புதிய பொலிவை வழங்கியுள்ளனர்.

ரியர்;

ரியர்;

பின் புற அமைப்பை பொருத்த வரை, புதிய எக்ஹாஸ்ட் உடைய மேம்படுத்தபட்ட லிப் ஸ்பாய்ளர்கள் வழங்கபட்டுள்ளது.

எக்ஸ்டீரியர்;

எக்ஸ்டீரியர்;

எக்ஸ்டீரியரை பொருத்த வரை, புதிய 2016 க்ரூஸ் செடான் காருக்கு, புதிய ப்ரொஜெக்டர் ஃபாக்லேம்ப்கள் மற்றும் எல்ஈடி பகல் நேர லைட்களை வழங்கபட்டுள்ளது.

இண்டீரியர்;

இண்டீரியர்;

இண்டீரியர் (உட்புற) அமைப்பை பொருத்தவரை, இந்த புதிய 2016 செவர்லே க்ரூஸ் செடான் காருக்கு 7-இஞ்ச் மை-லிங்க் டச்-ஸ்கிரீன் இன்ஃபோடெய்ன்மெண்ட் சிஸ்டம் வழங்கபட்டுள்ளது.

இதன் எண்டர்டெய்ன்மெண்ட் சிஸ்டத்துடன், ஸ்மார்ட் ரேடொயோ, கிரேஸ் நோட், சிரி ஐஸ் ஃப்ரீ கம்பேட்டிபிலிட்டி உள்ளிட்ட வசதிகள் உள்ளடங்கியுள்ளது. மேலும், இந்த மை-லிங்க் உடன், புதிய ரியர் விஷன் கேமராவும் பொருத்தபட்டுள்ளது.

பாதுகாப்பு;

பாதுகாப்பு;

பாதுகாப்பு அம்சங்களை பொருத்த வரை, புதிய 2016 செவர்லே க்ரூஸ் செடானில், ட்யூவல் ஃப்ரண்ட் ஏர்பேக்-களும், 2 சைட் ஏர் பேக்-களும் பொருத்தபட்டுள்ளது.

இதோடு மட்டுமல்லாமல், இந்த செவர்லே க்ரூஸ் செடானில், எலக்ட்ரானிக் சென்சார்கள் உடன் கூடிய ஏபிஎஸ் எனப்படும் ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம், பாஸ்ஸிவ் எண்ட்ரீ ஸ்டார்ட், சைல்ட் சீட் புரொவிஷன் (குழந்தைகளுக்கான இருக்கை ஏற்பாடு) உள்ளிட்ட வசதிகள் உள்ளது.

மேலும், இதில் இஞ்ஜின் இம்மோபைலைஸர், ஆண்டி-தெஃப்ட் அலார்ம் (திருட்டு நடவடைக்கைகளை தவிர்க்கும் அலார்ம் மற்றும் புரோகிராமபில் ஆட்டோ டோர் லாக் உள்ளிட்ட வசதிகளும் சேர்க்கபட்டுள்ளது.

விலை ரேஞ்ச்;

விலை ரேஞ்ச்;

இந்த மேம்படுத்தபட புதிய 2016 செவர்லே க்ரூஸ் செடான், 14.68 லட்சம் ரூபாய் முதல் 17.81 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரும் டெல்லி) விலை ரேஞ்ச்களில் விற்கபடுகிறது.

விரிவான விலை விவரங்கள்;

விரிவான விலை விவரங்கள்;

புதிய 2016 செவர்லே க்ரூஸ் செடான் காரின் புதிய வேரியண்ட்கள் மற்றும் இதன் விலை விவரங்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

செவர்லே க்ரூஸ் எல்டி - மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்வு - 14.68 லட்சம் ரூபாய்

செவர்லே க்ரூஸ் எல்டிஇசட் - மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்வு - 16.75 லட்சம் ரூபாய்

செவர்லே க்ரூஸ் எல்டிஇசட் - ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வு - 17.81 லட்சம் ரூபாய்

குறிப்பு; இந்த அனைத்து விலை விவரங்களும், எக்ஸ்-ஷோரூம் டெல்லி விலை விவரங்கள் ஆகும்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

புதிய செவர்லே க்ரூஸ் காரின் படங்கள், தகவல்கள் வெளியானது!

செவர்லே க்ரூஸ் ஹேட்ச்பேக் மாடலின் அதிகாரப்பூர்வ படங்கள் வெளியீடு

செவர்லே தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

Most Read Articles
English summary
Chevrolet India has launched their New 2016 Chevrolet Cruze sedan in India. This New Sedan has many attractive new features and striking visual updates. This updated sedan is priced in the ranges between Rs. 14.68 lakh to Rs. 17.81 lakh ex-showroom (Delhi). Chevrolet designers have presented the 2016 Chevrolet Cruze sedan with all-new fascia.
Story first published: Saturday, January 30, 2016, 18:22 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X