செவர்லே க்ரூஸ் ஹேட்ச்பேக் மாடலின் அதிகாரப்பூர்வ படங்கள் வெளியீடு
2017 மாடலாக வர இருக்கும் புதிய செவர்லே க்ரூஸ் ஹேட்ச்பேக் காரின் அதிகாரப்பூர்வ படங்களை ஜெனரல் மோட்டார்ஸ் வெளியிட்டிருக்கிறது.
அடுத்த வாரம் டெட்ராய்ட் ஆட்டோ ஷோ மூலமாக, பொது தரிசனம் தருவதற்கு காத்திருக்கும் இந்த அட்டகாசமான பிரிமியம் ஹேட்ச்பேக் காரின் டிசைன் கார் பிரியர்களை வெகுவாக கவரும் விதத்தில் உள்ளது. மேலும், 2,700மிமீ வீல்பேஸ் கொண்டிருப்பதால், மிகச்சிறப்பான இடவசதியை கொண்ட ஹேட்ச்பேக் மாடலாக இருக்கும்.

இந்த புதிய காரின் இன்டீரியர் டிசைன் இரண்டாம் தலைமுறை செவர்லே க்ரூஸ் செடான் காரிலிருந்து எடுத்து பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இதன் மை- லிங்க் இன்ஃபோடெயின்மன்ட் சாதனத்தில், ஆப்பிள் கார்ப்ளே, ஆன்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட சாஃப்ட்வேர்களை பதிவேற்றம் செய்து பயன்படுத்த முடியும்.
இந்த காரில் 153 பிஎஸ் பவரையும் 240 என்எம் டார்க்கையும் அதிகபட்சம் வழங்கக்கூடிய 1.4 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது.
இந்த காரில் 1,189 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட் ரூம் இடவசதி உள்ளது. எல், எல்எஸ், எல்டி மற்றும் பிரிமியர் ஆகிய வேரியண்ட்டுகளில் கிடைக்கும். இதன் ஆர்எஸ் மாடலில் 18 இன்ச் அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டு இருக்கும்.
இந்த ஆண்டு செவர்லே க்ரூஸ் செடான் காரின் மேம்படுத்தப்பட்ட மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அதேநேரத்தில், விலை நிர்ணயம் உள்ளிட்ட பிரச்னைகளால் இந்த புதிய ஹேட்ச்பேக் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் மிக குறைவாக உள்ளது.


Click it and Unblock the Notifications












