டட்சன் ரெடிகோ காரின் பிரத்யேக படங்கள் அடங்கிய ஆல்பம்!

Written By:

பார்த்து சலித்துப் போன மாருதி ஆல்ட்டோவுக்கும், நீண்ட காத்திருப்பு காலம் கொண்ட ரெனோ க்விட் காரையும் வேண்டாம் என்று ஒதுக்குபவர்களுக்கு புதிய சாய்ஸ் டட்சன் ரெடிகோ.

டட்சன் ரெடிகோ

  

ரூ.2.5 லட்சம் விலையில் எதிர்பார்க்கப்படும் இந்த கார்தான் இப்போது சரியான சாய்ஸ் என கருதுபவர்கள், இதனை உடனடியாக ஷோரூமில் காண இயலாது. ஷோரூமிற்கு வருவதற்கு ஒரு சில வாரங்கள் ஆகலாம். எனவே, உங்கள் முடிவை எளிதாக்கும் விதத்தில், டட்சன் ரெடிகோ காரை இன்ச் பை இன்ச்சாக எடுக்கப்பட்ட படங்களின் தொகுப்பை கேலரியில் காணலாம்.

டட்சன் ரெடிகோ இன்டீரியர்
 

 

முகப்பு டிசைன் பார்க்க கவர்ச்சியாக இருக்கிறது. ஆனால், பக்கவாட்டு டிசைனும், பின்புற டிசைனும் கவர்ச்சியாக இல்லை. ஆனால், அதிக கிரவுண்ட் கிளிரயன்ஸ் இந்த காரை எந்தவொரு சாலையிலும் இயக்குவதற்கு துணை புரியும்.

புதிய டட்சன் ரெடிகோ காரின் சாதக, பாதகங்களை அலசும் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பட்ஜெட் கார் என்பதை மனதில் வைத்து ஒவ்வொரு இடத்திலும் சிக்கனத்தை கடைபிடித்திருப்பது கண்கூடாக தெரிகிறது. இருந்தாலும், இப்போது மார்க்கெட்டில் இருக்கும் போட்டியாளர்களில் ரெனோ க்விட் காருக்கு அடுத்து புதிய வடிவமைப்பில் வருகை தரும் மாடல் என்பதால் முன்னுரிமை கொடுக்கலாம். எனவே, படங்களை பார்த்துவிட்டு ஒரு டெஸ்ட் டிரைவ் செய்து திருப்தி ஏற்பட்டால் முன்பதிவு செய்யலாம்.

 
Please Wait while comments are loading...

Latest Photos

 
X