புதிய ஃபோர்டு என்டெவர் எஸ்யூவி ஜனவரி 20ல் விற்பனைக்கு வருகிறது

Written By:

வரும் 20ந் தேதி புதிய தலைமுறை ஃபோர்டு என்டெவர் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது.

புதிய டிசைன், நவீன வசதிகளுடன் வரும் புதிய ஃபோர்டு என்டெவர் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் ஏற்கனவே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த புதிய மாடல் டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு நேர் போட்டியாக வருகிறது.

ஃபோர்டு என்டெவர் எஸ்யூவி ஜனவரி 20ல் விற்பனைக்கு வருகிறது

புதிய ஃபோர்டு என்டெவர் எஸ்யூவிக்கு பல டீலர்ஷிப்புகளில் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. ரூ.1 லட்சம் முன்பணம் பெற்றுக் கொண்டு முன்பதிவு செய்யப்படுகிறது.

புதிய ஃபோர்டு என்டெவர் எஸ்யூவி 197 பிஎச்பி பவரை அளிக்கக்கூடிய 3.2 லிட்டர் டீசல் மாடலிலும், 158 பிஎச்பி பவரை வழங்க வல்ல 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் மாடலிலும் வருகிறது.

இந்த எஸ்யூவியின் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட மாடல்களிலும் 4 வீல் டிரைவ் ஆப்ஷனிலும் கிடைக்கும். ஆனால், 3.2 லிட்டர் மாடல் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டதாக இருக்கும்.

ரூ.25 லட்சம் ஆரம்ப விலையில் புதிய ஃபோர்டு என்டெவர் எஸ்யூவி விற்பனைக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2,000சிசி மற்றும் அதற்கு மேலான சிசி திறன் கொண்ட டீசல் எஞ்சின்களுக்கு டெல்லியில் தடை விதிக்கப்பட்டிருப்பதால், அங்கு விற்பனைக்கு செல்லாது.

English summary
Ford India had previously announced that their all-new premium SUV will be launched during January 2016. Now, Ford has confirmed that the new Endeavour will launch on January 20, 2016.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

X