ஃபோர்டு மஸ்டாங் கார் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது- முழு விபரம்!

Written By:

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் புதிய ஃபோர்டு மஸ்டாங் கார் டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் சற்றுமுன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

இந்தியாவில் தடம் பதித்திருக்கும் முதல் மஸில் ரக ஸ்போர்ட்ஸ் கார் இது என்பதால், மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த காரை பற்றிய முழுமையான விபரங்களை ஸ்டைரில் காணலாம்.

பாரம்பரியம்...

பாரம்பரியம்...

அமெரிக்காவில் பிரபலமான மஸில் ரக கார். 1964ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த கார், 50 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்துடன் அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டு விற்பனையில் இருக்கிறது.

 மாடல் விபரம்

மாடல் விபரம்

கால மாற்றம், தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப பல தலைமுறை மாற்றங்களை ஃபோர்டு மஸ்டாங் சந்தித்துள்ளது. தற்போது இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருக்கும் மாடல் 6ம் தலைமுறையை சேர்ந்தது.

 வலது பக்க டிரைவிங்

வலது பக்க டிரைவிங்

பொன்விழா கண்டு விட்ட ஃபோர்டு மஸ்டாங் கார் 50 ஆண்டுகளாக இடதுபக்க டிரைவிங் வசதி கொண்டதாகவே விற்பனை செய்யப்பட்டது. தற்போது வலது பக்க டிரைவிங் வசதியுடன் மாற்றங்கள் செய்யப்பட்டு, இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

டாப் வேரியண்ட்

டாப் வேரியண்ட்

மூன்று எஞ்சின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது மஸ்டாங். 3.7 லிட்டர் எஞ்சின் வி6 பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.3 லிட்டர் ஈக்கோபூஸ்ட் எஞ்சின் ஆப்ஷன்களில் வெளிநாடுகளில் கிடைக்கிறது. ஆனால், இந்தியாவில் இந்த காரின் அதிசெயல்திறன் மிக்க 5.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் கொண்ட டாப் வேரியண்ட்டில் மட்டுமே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

ஆற்றல்

ஆற்றல்

இந்த காரில் இருக்கும் 5.0 லிட்டர் வி8 பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 395 பிஎச்பி பவரையும், 515 என்எம் டார்க்கையும் வழங்கும். இந்தியாவில் எரிபொருள் தரத்திற்கு ஏற்ப எஞ்சினில் மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதால், எஞ்சினின் சக்தி சற்று குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. பேடில் ஷிஃப்ட் வசதியுடன் கூடிய 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது.

செயல்திறன்

செயல்திறன்

இந்த புதிய ஸ்போர்ட்ஸ் கார் 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 4.8 வினாடிகளில் தொட்டுவிடும். அதேபோன்று, மணிக்கு 250 கிமீ வேகம் வரை எட்டுவதற்கான வல்லமையையும், கட்டமைப்பு அம்சங்களையும் பெற்றிருக்கிறது.

கேட்காதீங்க...

கேட்காதீங்க...

இதுபோன்ற கார்களை வாங்குவோர் மைலேஜை பற்றி பேசப்படாது என்ற எழுதப்படாத விதி உண்டு. இருப்பினும், எமது வாசகர்களுக்கு இந்த தகவல். இந்த கார் லிட்டருக்கு 7.4 கிமீ மைலேஜ் தரும் என்கிறது ஃபோர்டு.

விசேஷ தொழில்நுட்பம்

விசேஷ தொழில்நுட்பம்

காரை ட்ரிஃப்ட் செய்வதற்கு ஏற்ப, இந்த காரில் எலக்ட்ரானிக் லைன்- லாக் எனப்படும் தொழில்நுட்ப வசதி உள்ளது. இதன்மூலமாக, முன்பக்கம் மட்டும் பிரேக் பிடிக்கப்பட்டு, பின்புற டயர்கள் மட்டும் சுழன்று ட்ரிஃப்ட் செய்ய ஏதுவாக இருக்கும். இது ட்ரிஃப்ட் பிரியர்களுக்கு மிகச்சிறப்பான தொழில்நுட்பமாக இருக்கும்.

வசதிகள்

வசதிகள்

ஆட்டோமேட்டிக் ஹெட்லைட், அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், புஷ் பட்டன் ஸ்டார்ட், ஆட்டோமேட்டிக் வைப்பர், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஏர்பேக்குகள், நவீன பிரேக்கிங் சிஸ்டம் போன்றவை இந்த அதிசெயல்திறன் மிக் காருக்கு பக்கபலமாக இருக்கும்.

புதிய சஸ்பென்ஷன்

புதிய சஸ்பென்ஷன்

முதல்முறையாக ஃபோர்டு மஸ்டாங் காரின் பின்புறத்தில் இன்டிபென்டன்ட் சஸ்பென்ஷன் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. எனவே, இதுவரை வெளிவந்த மஸ்டாங் கார்களிலேயே இதுதான் மிகச்சிறப்பாக கையாளுமை கொண்டதாக இருக்கும்.

விலை

விலை

ரூ.65 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதேநேரம், அமெரிக்காவில் இந்த கார் ரூ.25 லட்சம் என்ற இந்திய மதிப்பில்தான் விற்பனையாகிறது. ஆனால், இந்த கார் இறக்குமதி மாடலாக இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளதும், ரூபாய் மதிப்பும் சேர்ந்து அதிக விலை கொண்ட மாடலாக இதனை மாற்றியிருக்கிறது.

 விற்பனை முக்கியமல்ல...

விற்பனை முக்கியமல்ல...

இந்தியாவில் ஃபோர்டு மஸ்டாங் காரை அறிமுகம் செய்ததே, பிராண்டு மதிப்பை உயர்த்துவதற்காகத்தான் என்று ஃபோர்டு குறிப்பிடுகிறது. எனவே, விற்பனை எண்ணிக்கை ஒரு பொருட்டாக இருக்காது. இருப்பினும், இந்த பாரம்பரியம் மிக்க மஸில் ரக காருக்கு இந்தியர்களும் நல்ல ஆதரவை வழங்குவார்கள் என்று நம்பலாம்.

தனித்துவம்...

தனித்துவம்...

பிற ஸ்போர்ட்ஸ் கார்களை போல அல்லாமல், இதன் தனித்துவமான டிசைன், கம்பீரம், செயல்திறன் போன்றவை நிச்சயம் இந்திய வாடிக்கையாளர்களையும் கவரும் என்று நம்பலாம்.

ஃபோர்டு மஸ்டாங் கார் டெஸ்ட் டிரைவ்

டெல்லி புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் வைத்து புதிய ஃபோர்டு மஸ்டாங் காரை நாளை டெஸ்ட் டிரைவ் செய்ய இருக்கிறோம். இந்த கார் பற்றிய கூடுதல் தகவல்களை விரைவில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

ஃபோர்டு மஸ்டாங் கார்களும், ஹாலிவுட் தொடர்பும்... !!

ஃபோர்டு மஸ்டாங் கார்களும், ஹாலிவுட் தொடர்பும்... !!

 
English summary
New Ford Mustang Launched India- Complete Details.
Story first published: Tuesday, July 12, 2016, 15:13 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark