புதுப்பொலிவுடன் புதிய ஹோண்டா பிரியோ கார் விற்பனைக்கு அறிமுகம்!

Written By:

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதுப்பொலிவு பெற்றிருக்கும் புதிய ஹோண்டா பிரியோ கார் இந்தியாவில் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

வடிவமைப்பில் சிறிய மாற்றங்கள் மற்றும் கூடுதல் சிறப்பம்சங்களுடன் வந்திருக்கும் புதிய ஹோண்டா பிரியோ கார் வாடிக்கையாளர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஹோண்டா பிரியோ கார் விற்பனைக்கு அறிமுகம்!

முன்புறத்தில் க்ரில் அமைப்பு இப்போது பளபளக்கும் கருப்பு நிற ஃபினிஷிங் மற்றும் க்ரோம் கம்பி மூலமாக மெருகேற்றப்பட்டிருக்கிறது. தேன்கூடு வடிவ வலை பின்னல் கொண்ட ஏர்இன்டேக் மற்றும் புதிய பம்பருடன் முகப்பு புதுப்பொலிவு கொடுக்கப்பட்டிருக்கிறது.

புதிய ஹோண்டா பிரியோ கார் விற்பனைக்கு அறிமுகம்!

பின்புறத்தில் டெயில் லைட் மற்றும் பம்பரில் திருத்தங்கள் செய்யப்பட்டு புதுப்பொலிவு கொடுக்கப்பட்டிருக்கிறது. எல்இடி விளக்குகள் கொண்ட ஸ்டாப் லேம்ப் மற்றும் கூரையில் ஸ்பாய்லரும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஹோண்டா பிரியோ கார் விற்பனைக்கு அறிமுகம்!

விலை குறைந்த மாடல்களில் பீஜேய் வண்ண இன்டீரியரும், விலை உயர்ந்த மாடல்களில் கருப்பு நிற இன்டீரியரும் உள்ளது.

புதிய ஹோண்டா பிரியோ கார் விற்பனைக்கு அறிமுகம்!

இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரும் மேம்படுத்தப்பட்டிருக்கிறது. மூன்று டயல்களுடன் வசீகரிக்கிறது. ஸ்பீடோ மீட்டர், எரிபொருள் அளவை காட்டும் மானி, ஆர்பிஎம் மீட்டர் ஆகியவை அனலாக் டயல்களும், சிறிய டிஜிட்டல் திரை மூலமாக கார் ஓடிய தூரம் உள்ளிட்ட தகவல்களை பெற வழிவகுக்கிறது.

புதிய ஹோண்டா பிரியோ கார் விற்பனைக்கு அறிமுகம்!

புளூடூத் மூலமாக ஹேண்ட்ஸ்ப்ரீ வசதி மூலமாக போனில் அழைப்புகளை எடுத்து பேசும் வசதி, 2 டின் மியூசிக் சிஸ்டம், மின்னணு கட்டுப்படுத்தும் முறையுடன் ஏசி சிஸ்டம் போன்றவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

புதிய ஹோண்டா பிரியோ கார் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஹோண்டா பிரியோ காரில் இருக்கும் 1.2 லிட்டர் வி-டெக் எஞ்சின் அதிகபட்சமாக 87 பிஎச்பி பவரையும், 109 என்எம் டார்க்கையும் வழங்கும். இந்த கார் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 5 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டதாக கிடைக்கும்.

புதிய ஹோண்டா பிரியோ கார் விற்பனைக்கு அறிமுகம்!

மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட மாடல் லிட்டருக்கு 18.5 கிமீ மைலேஜையும், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட மாடல் லிட்டருக்கு 16.5 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று ஹோண்டா கார் நிறுவனம் தெரிவிக்கிறது.

புதிய ஹோண்டா பிரியோ கார் விற்பனைக்கு அறிமுகம்!

ஹோண்டா பிரியோ கார் 3,610மிமீ நீளமும், 1,680மிமீ அகலமும், 1,500மிமீ உயரமும் கொண்டது. 2,345மிமீ வீல் பேஸ் கொண்டிருக்கிறது.

புதிய ஹோண்டா பிரியோ கார் விற்பனைக்கு அறிமுகம்!

மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் 4.5 மீட்டர் டர்னிங் ரேடியஸ் கொண்டதாகவும், ஆட்டோமேட்டிக் மாடல் 4.7 மீட்டர் டர்னிங் ரேடியஸ் கொண்டதாகவும் இருக்கிறது. எளிதாக திருப்பும் வசதி உள்ளதால் நகர்ப்புற பயன்பாட்டுக்கு சிறப்பாக இருக்கும்.

புதிய ஹோண்டா பிரியோ கார் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஹோண்டா பிரியோ காரில் ஓட்டுனர் மற்றும் முன் இருக்கை பயணிக்கான இரண்டு எஸ்ஆர்எஸ் ஏர்பேக்குகள், அனைத்து சக்கரங்களுக்கும் பவரை சரியான விகிதத்தில் செல்லும் இபிடி தொழில்நுட்பத்துடன் இணைந்து செயலாற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளன.

புதிய ஹோண்டா பிரியோ கார் விற்பனைக்கு அறிமுகம்!

பாதசாரிகள் மீது மோதும் பட்சத்தில் அவர்களுக்கு அதிக காயங்கள் ஏற்படுத்தாத வகையில், மோதல் தாக்கத்தை உள்வாங்கிக் கொள்ளும் வகையில் முன்புற கட்டமைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. டஃபேட்டா ஒயிட், அலபாஸ்டர் சில்வர், அர்பன் டைட்டானியம், ராலி ரெட் மற்றும் ஒயிட் ஆர்ச்சிட் ஆகிய 5 வண்ணங்களில் தேர்வு செய்து கொள்ளலாம்.

 விலை விபரம்

விலை விபரம்

  • இ வேரியண்ட்: ரூ.4,69,000
  • எஸ் வேரியண்ட்: ரூ.520,000
  • விஎக்ஸ் வேரியண்ட்: ரூ.5,95,000
  • விஎக்ஸ் ஏடி: ரூ.6,81,600
  • அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை விபரம்பு
  • புதிய ஹோண்டா பிரியோ காருக்கு 2 ஆண்டுகள் அல்லது 40,000 கிமீ தூரத்துக்கான வாரண்டி வழங்கப்படுகிறது.
English summary
Japanese carmaker Honda has launched the facelifted Brio hatchback in India. Prices for the new Brio hatchback start at Rs. 4.69 lakh ex-showroom (Delhi). Read the complete details in Tamil.
Please Wait while comments are loading...

Latest Photos