ஹோண்டா பிஆர்வி காரை கம்ப்ளீட்டாக பார்க்கலாம் வாங்க!

By Saravana

தற்போது மார்க்கெட்டில் ரூ.10 லட்சம் பட்ஜெட்டில் கிடைக்கும் காம்பேக்ட் எஸ்யூவிகள் அனைத்துமே 5 சீட்டராக இருக்கின்றன. ஹூண்டாய் க்ரெட்டா, மாருதி எஸ் க்ராஸ், ரெனோ டஸ்ட்டர், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், மாருதி பிரெஸ்ஸா என மினி மற்றும் காம்பேக்ட் எஸ்யூவி மாடல்கள் அனைத்துமே 5 சீட்டராகவே இருக்கின்றன. அதுவே 7 பேர் செல்வதற்கான மஹிந்திரா ஸ்கார்ப்பியோ, எக்ஸ்யூவி 500 என்று செல்லும்போது பட்ஜெட் சில லட்சங்கள் கூடுதலாகும்.

ஹோண்டா பிஆர்வி

இதனால், சற்று குடும்ப உறுப்பினர்கள் அதிகம் கொண்ட குடும்பங்களில் இடப்பிரச்னை பெரும் தலைவலியை கொடுக்கிறது. இப்போது 5 சீட்டர் காம்பேக்ட் எஸ்யூவிகளை வாங்கிய உரிமையாளர்கள் பலர் வெளியில் கிளம்பும்போது ஒருவரைவிட்டு ஒருவர் செல்ல முடியாமல் தவிக்கும் தவிப்பு வார்த்தைகளில் சொல்ல முடியாது.

இன்டீரியர்

இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் விதத்தில், காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் ஒரு 7 சீட்டர் எஸ்யூவி மாடலாக பிஆர்வி காம்பேக்ட் எஸ்யூவியை ஹோண்டா அறிமுகம் செய்துள்ளது. முன்னணி காம்பேக்ட் எஸ்யூவி மாடல்களைவிட சற்று விலை குறைவாகவும், ஹோண்டாவின் நம்பகமான பெட்ரோல், டீசல் எஞ்சின் ஆப்ஷன்களுடன் வந்திருப்பதன் காரணமாக புதிய ஹோண்டா பிஆர்வி எஸ்யூவி மீது வாடிக்கையாளரகளின் பார்வை விழுந்திருக்கிறது.

புஷ் பட்டன் ஸ்டார்ட்

அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ், போதுமான வசதிகள், அதிக மைலேஜ் என வாடிக்கையாளர்களை கவரும் அம்சங்கள் ஏராளம். அதேநேரத்தில், காம்பேக்ட் எஸ்யூவியை வாங்க காத்திருப்பவர்கள் ஹூண்டாய் க்ரெட்டாவைவிட்டு இதற்கு எப்படி வருவது என்று தயங்கி கொண்டு இருப்பர். அவர்களுக்கு வசதியாக இந்த எஸ்யூவியை அனைத்து கோணங்களிலும் காண்பதற்காக மும்பையில் இன்று நடந்த அறிமுக நிகழ்ச்சியில் எமது நிருபர் அஜிங்கியா எடுத்த பிரத்யேக படங்களை உங்கள் பார்வைக்கு வழங்குகிறோம்.

இருக்கை

இந்த படங்களின் மூலமாக, வெளிப்புற டிசைன் அம்சங்கள், உட்புற அமைப்பு, அலங்கார அம்சங்கள், இருக்கை அமைப்பு, வசதிகள், குறிப்பாக மூன்றாவது வரிசை இருக்கை அமைப்பு உள்ளிட்ட பல விஷயங்களை நீங்கள் உணர்ந்து கொள்ள வாய்ப்பாக அமையும்.

Most Read Articles
English summary
All New Honda BRV Compact SUV Photo Gallery.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X