புதிய 2016 ஹூண்டாய் எலன்ட்ரா செடான், இந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம்

By Ravichandran

புதிய 2016 ஹூண்டாய் எலன்ட்ரா விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இந்த புதிய ஹூண்டாய் எலன்ட்ரா செடான் கார் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

இந்திய சந்தைகளுக்கு பல்வேறு அறிமுகங்கள்;

இந்திய சந்தைகளுக்கு பல்வேறு அறிமுகங்கள்;

ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தைகளில் பல்வேறு புதிய மற்றும் மேமப்டுத்தபட்ட வாகனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இந்த 2016-ஆம் ஆண்டில், ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம், எலன்ட்ரா பிரிமியம் செடானை மேம்படுத்த திட்டமிட்டுள்ளனர். 2020-ஆம் ஆண்டு வரை, வருடத்திற்கு ஒரு புதிய காரை அறிமுகம் செய்ய, ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இண்டீரியர், எக்ஸ்டீரியர்;

இண்டீரியர், எக்ஸ்டீரியர்;

2016-ல் இந்தியா உள்ளிட்ட பல்வேறு சந்தைகளுக்கு, ஹூண்டாய் எலன்ட்ரா பிரிமியம் செடானின் பல இண்டீரியர் மற்றும் எக்ஸ்டீரியர் அம்சங்கள் மேம்படுத்தி வழங்கபட உள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

2016 ஹூண்டாய் எலன்ட்ரா, 2 பெட்ரோல் இஞ்ஜின்கள் மற்றும் 1 டீசல் இஞ்ஜின் தேர்வுகளுடன் வெளியாக உள்ளது.

1.6-லிட்டர் விஜிடி சிஆர்டிஐ டீசல் இஞ்ஜின், மற்றும் 1.6 லிட்டர் ஜிடிஐ பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் 2.0 லிட்டர் எம்பிஐ பெட்ரோல் இஞ்ஜின் தேர்வுகளுடன் வெளியாகிறது. எலன்ட்ராவின் இஞ்ஜின், 6-ஸ்பீட் மேனுவல் அல்லது 6-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கபட்டுள்ளது.

2016 ஆட்டோ எக்ஸ்போவில் பங்கேற்பு;

2016 ஆட்டோ எக்ஸ்போவில் பங்கேற்பு;

2016 ஹூண்டாய் எலன்ட்ரா பிரிமியம் செடான், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தபட உள்ளது.

இதை தவிர, ஹூண்டாய் இந்தியா நிறுவனம், பல்வேறு கான்செப்ட் நிலை வாகனங்களையும், விரைவில் வெளியாக உள்ள வாகனங்களையும், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்த உள்ளது.

இந்தியாவில் அறிமுகம்;

இந்தியாவில் அறிமுகம்;

புதிய 2016 ஹூண்டாய் எலன்ட்ரா பிரிமியம் செடான், இந்திய சந்தைகளில், இந்த ஆண்டு மத்தியில் அறிமுகம் செய்யபடும்.

ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கபடும் மேம்படுத்தபட்ட ஹூண்டாய் எலன்ட்ரா 2015 துபாய் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யபட்டது.

போட்டி வாகனங்கள்;

போட்டி வாகனங்கள்;

இந்திய வாகன சந்தைகளை பொருத்த வரை, புதிய 2016 ஹூண்டாய் எலன்ட்ரா, ஃபோக்ஸ்வேகன் ஜெட்டா, செவர்லே க்ரூஸ், ஸ்கோடா ஆக்டேவியா மற்றும் டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் உள்ளிட்ட வாகனங்களுடன் போட்டியை எதிர்கொள்ள நேரிடும்.

அதன் முந்தைய வடிவத்தை காட்டிலும், புதிய 2016 ஹூண்டாய் எலன்ட்ரா சற்று விலை கூடுதலாக இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

விலை விவரங்கள்;

விலை விவரங்கள்;

2016 ஹூண்டாய் எலன்ட்ரா, இந்தியாவில் சென்னையில் உள்ள ஹூண்டாய் உற்பத்தி ஆலையில் தயாரிக்கபட உள்ளது.

புதிய 2016 ஹூண்டாய் எலன்ட்ரா பிரிமியம் செடான், சுமார் 14.5 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்கபடலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

Most Read Articles
English summary
Hyundai New Elantra is expected to be launched in India this year. Hyundai Motors has planned to introduce at least one new product each and every year up to 2020. Many Interior and exterior features of the New Hyundai Elantra premium Sedan are to be updated for several markets including India, in the year 2016.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X