'மேட் இன் இந்தியா' மாடலாக வரும் ஜீப் சி எஸ்யூவி பற்றிய 6 முக்கிய விஷயங்கள்!

Written By:

ஃபியட் கிறைஸ்லர் வாகன குழுமத்தின் கீழ் செயல்படும் அமெரிக்காவை சேர்ந்த ஜீப் நிறுவனம் ரேங்லர், செரோக்கீ ஆகிய இரண்டு மாடல்களுடன் சமீபத்தில் இந்தியாவில் கால் பதித்தது. அதற்கு இணையான போட்டி மாடல்களைவிட, ஜீப் எஸ்யூவிகளின் விலை மிக அதிகமாக இருப்பதாக ஒரு பேச்சு இருக்கிறது.

ஆனால், இந்த இரண்டு மாடல்களும் இறக்குமதி செய்யப்படுவதும் விலை அதிகமாக இருப்பதற்கு ஒரு காரணம். இந்தநிலையில், இந்தியாவிலேயே புதிய எஸ்யூவி மாடலை உற்பத்தி செய்வதற்கு ஜீப் எஸ்யூவி நிறுவனம் முடிவு செய்துள்ளது. 

ஜீப் சி எஸ்யூவி என்று அழைக்கப்படும் இந்த புதிய மாடல் விலை குறைவாக இருக்கும் என்பதால் இந்தியர்கள் மத்தியில் அதிக ஆவல் காணப்படுகிறது. எனவே, இந்த எஸ்யூவியின் மிக முக்கிய சிறப்பம்சங்களை இங்கே காணலாம்.

இந்தியா, பிரேசில் போன்ற வளர்ந்து வரும் பொருளாதாரம் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற விலையிலும், சிறப்பம்சங்கள் கொண்டதாக இந்த புதிய ஜீப் சி எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதாவது, இதுதான் ஜீப் நிறுவனத்தின் குறைவான விலை எஸ்யூவி மாடலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வலது புற ஸ்டீயரிங் வீல் சிஸ்டம் கொண்ட ஜீப் சி எஸ்யூவி இந்தியாவில் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளனர். இங்கிருந்துதான் வலது புற டிரைவிங் விதிமுறை கொண்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். எனவே, ஜீப் சி எஸ்யூவிக்கு இந்தியாதான் முக்கிய உற்பத்தி மையமாக இருக்கும்.

பாரம்பரியம் மிக்க ஜீப் நிறுவனத்தின் டிசைன் அம்சங்கள் ஜீப் சி எஸ்யூவிக்கு வலு சேர்க்கும். அத்துடன், இதர ஜீப் எஸ்யூவிகள் போன்றே, இந்த ஜீப் சி எஸ்யூவியும் ஆஃப்ரோடு சாகசங்களுக்கு ஏற்ற தொழில்நுட்பங்கள் மற்றும் கட்டுமானத்தை பெற்றிருக்கும்.

புதிய ஜீப் சி எஸ்யூவியில் ஃபியட் நிறுவனத்தின் 2.0 லிட்டர் மல்டிஜெட் II டீசல் எஞ்சின் பயன்படுத்தப்படும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 171 பிஎச்பி பவரை அளிக்க வல்லது. 4 வீல் டிரைவ் சிஸ்டமும் இதனை ஆஃப்ரோடு மாடலாக வலுப்படுத்தும். மேலும், 118 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 1.6 லிட்டர் டீசல் எஞ்சினும் எதிர்பார்க்கப்படுகிறது.

மஹாராஷ்டிர மாநிலம், புனேயிலிருந்து 50 கிமீ தொலைவில் உள்ள ரஞ்சன்கவுனில்தான் ஜீப் எஸ்யூவி நிறுவனத்தின் தயாரிப்புகள் உற்பத்தி செய்யப்பட உள்ளன. ஜீப் சி எஸ்யூவி இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படும் என்பதால், ரூ.20 லட்சம் விலையில் ஜீப் பிராண்டு தயாரிப்பை சொந்தமாக்கிக் கொள்ளும் வாய்ப்பை இந்தியர்கள் பெறுவர்.

ஃபார்ச்சூனர், ஹோண்டா சிஆர்வி, ஃபோர்டு எண்டெவர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும்... #ஜீப் #jeep #auto news #car news
English summary
Here are six important facts about the Jeep C-SUV. Read in Tamil.
Story first published: Saturday, September 10, 2016, 13:46 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos