புதிய மாருதி சுஸுகி ஆல்ட்டோ 800 ஹேட்ச்பேக்கின் ஸ்பை படங்கள் வெளியாகியது

Written By:

பொலிவு கூட்டபட்ட புதிய மாருதி சுஸுகி ஆல்ட்டோ 800 ஹேட்ச்பேக்கின் முறையான அறிமுகத்திற்கு முன்பு எடுக்கபட்ட ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளது.

புதிய மாருதி சுஸுகி ஆல்ட்டோ 800 குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

புதிய மாருதி சுஸுகி ஆல்ட்டோ 800...

புதிய மாருதி சுஸுகி ஆல்ட்டோ 800...

பொலிவு கூட்டபட்ட புதிய மாருதி சுஸுகி ஆல்ட்டோ 800 ஹேட்ச்பேக், இந்த மாதத்தில் வரும் நாட்களில் அறிமுகம் செய்யபட உள்ளது.

இந்த நிலையில், எந்த விதமான உருமறைப்பும் இல்லாமல், புதிய மாருதி சுஸுகி ஆல்ட்டோ 800 ஹேட்ச்பேக்கின் ஸ்பை படங்கள் வெளியாகியது.

டிசைன்;

டிசைன்;

தற்போது வெளியாகியுள்ள புதிய மாருதி சுஸுகி ஆல்ட்டோ 800 ஹேட்ச்பேக்கின் படங்கள் படி, இதன் டிசைனில் சிறிய அளவிலான மாற்றங்களே செய்யபட்டது.

அதிகபடியான மாற்றங்கள் இதன் முன்பக்கத்தில் தான் செய்யபட்டுள்ளது.

முக்கியமான மாற்றங்கள்;

முக்கியமான மாற்றங்கள்;

சிங்கிள் ஸ்லாட் யூனிட்டாக உள்ள புதிய மாருதி சுஸுகி ஆல்ட்டோ 800 ஹேட்ச்பேக்கின் சிறிய கிரில் தற்போது மெல்லியதாக உள்ளது.

ஃப்ரண்ட் பம்பரில் உள்ள சுஸுகி பேட்ஜ், இதன் கிரில் மற்றும் ட்ரபெஸாய்டல் ஏர் இண்டேக்கிற்கும் இடையில் பொருத்தபட்டுள்ளது.

இதன் ப்ரண்ட் கிரில்லில், ஃபாக் லேம்ப்களுக்கான ஸ்லாட்களும் உள்ளன.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

புதிய மாருதி சுஸுகி ஆல்ட்டோ 800 ஹேட்ச்பேக்கில், அதே 796 சிசி, 3-சிலிண்டர், பெட்ரோல் இஞ்ஜின் உபயோகிக்கபடலாம்.

இந்த இஞ்ஜின், 47 பிஹெச்பியையும், 69 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டிருக்கும்.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

புதிய மாருதி சுஸுகி ஆல்ட்டோ 800 ஹேட்ச்பேக்கின் இஞ்ஜின், 5-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது.

மைலேஜ்;

மைலேஜ்;

புதிய மாருதி சுஸுகி ஆல்ட்டோ 800 ஹேட்ச்பேக், ஒரு லிட்டருக்கு, 22.7 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் வகையிலான எரிபொருள திறன் கொண்டுள்ளது.

சிஎன்ஜி;

சிஎன்ஜி;

புதிய மாருதி சுஸுகி ஆல்ட்டோ 800 ஹேட்ச்பேக்கின் சிஎன்ஜி வேரியண்ட், தொடர்ந்து தக்க வைத்து கொள்ளபடும் என எதிர்பார்க்கபடுகிறது.

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Spy Pics Credit ; GaadiWaadi.com

Story first published: Tuesday, May 10, 2016, 18:39 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos