புதிய மாருதி சுஸுகி வேகன் ஆர் இந்தியாவில் 2017-ல் அறிமுகம்

By Ravichandran

புதிய மாருதி சுஸுகி வேகன் ஆர் இந்தியாவில் 2017-ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்படலாம் என செய்திகள் வெளியாகிறது. மாருதி சுஸுகி நிறுவனம் தான் இந்தியாவில் மிகப்பெரிய முன்னோடி கார் நிறுவனமாக உள்ளது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு மக்களிடையே பலத்த வரவேற்ப்பு உள்ளது. அந்த வகையில், மாருதி சுஸுகி வேகன் ஆர் மாடலும் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.

புதிய 2017 மாருதி சுஸுகி வேகன் ஆர் தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

மேம்பாடு;

மேம்பாடு;

மாருதி சுஸுகி நிறுவனத்தின் தற்போதைய வேகன் ஆர் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு கொஞ்ச காலம் ஆகிவிட்டது. தற்போது மேம்பாடுகள் செய்யவேண்டிய நேரம் வந்துவிட்டது. வேகன் ஆர் மாடலுக்கு மேம்பாடுகள் செய்ய முடிவு செய்துள்ள மாருதி நிறுவனம், இந்த புதிய மாருதி சுஸுகி வேகன் ஆர் மாடலை, 2017-ஆம் ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யலாம்.

3-வது மாடல்;

3-வது மாடல்;

மாருதி சுஸுகி வேகன் ஆர், இந்திய வாகன சந்தைகளில் முதன் முதலாக 1999-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது முதல், இந்த வேகன் ஆர் காரின் 2 மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 2017-ல் அறிமுகம் செய்யப்பட உள்ள புதிய மாருதி சுஸுகி வேகன் ஆர், 3-வது மாடலாக இருக்கும்.

டிசைன்;

டிசைன்;

ஒட்டுமொத்தத்தில், புதிய 2017 மாருதி சுஸுகி வேகன் ஆர் மாடலிலும் டால் பாய் ஸ்டான்ஸ் எனப்படும் உயர்ந்த நிலைப்பாடு கொண்டுள்ள டிசைன் தொடர்ந்து தக்கவைத்து கொள்ளப்படும். உண்மையில், மாருதி சுஸுகி வேகன் ஆர் இந்த உயர்ந்த நிலைப்பாடு உள்ள டிசைனுக்காக மிகவும் புகழ் பெற்றுள்ளது.

மாற்றங்கள்;

மாற்றங்கள்;

புதிய மாருதி சுஸுகி வேகன் ஆர் மாடலின் பம்பர்கள், ஹெட்லைட், டெயில்லேம்ப்கள், மற்றும் பல்வேறு அம்சங்கள் மறுவடிவமைக்கப்பட உள்ளது. இந்த அனைத்து மாற்றங்களும், புதிய மாருதி சுஸுகி வேகன் ஆர் மாடலுக்கு மேலும் அழகு சேர்க்க உள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

இஞ்ஜின் பொருத்த வரை, புதிய மாருதி சுஸுகி வேகன் ஆர் மாடலில், எந்த விதமான பெரிய மாற்றங்களும் செய்யப்படாது. இதில், தற்போதைய மாடளிகுள் பொருத்தபட்டுள்ள 1.0 லிட்டர் கே-சீரிஸ் பெட்ரோல் இஞ்ஜினே தக்கவைத்து கொள்ளப்படும். இந்த இஞ்ஜின், 67 பிஹெச்பியையும், 91 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாக இருக்கும்.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

புதிய மாருதி சுஸுகி வேகன் ஆர் மாடலின் இஞ்ஜின், 5-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் தேர்வு முறையிலான ஏஎம்டி கியர்பாக்ஸுடன் வெளியாகும்.

போட்டி;

போட்டி;

புதிய மாருதி சுஸுகி வேகன் ஆர் மாடல், டட்சன் கோ, செவர்லே பீட் மற்றும் ஹூண்டாய் ஐ10 ஆகிய மாடல்களுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.

விலை;

விலை;

புதிய மாருதி சுஸுகி வேகன் ஆர் மாடல், மிகவும் சவாலான விலையில் வழங்கப்படும். இது சுமார் 4 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் இருந்து விற்கப்படலாம்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

விற்பனையில் புதிய மைல்கல்லை கடந்த மாருதி வேகன் -ஆர்: வெற்றி ரகசியம்?!

விரைவில் ஏஎம்டி கியர்பாக்ஸுடன் வரும் மாருதி வேகன்- ஆர்!

ஆட்டோ கியர் ஷிஃப்ட் வசதியுடன் மாருதி வேகன் ஆர் விற்பனைக்கு அறிமுகம்!

Most Read Articles
English summary
Maruti Suzuki plans on updating its Wagon R for Indian market by 2017. An all-new Wagon R be launchd in India, sometime during 2017-end. This would be Wagon R's third iteration for Indian market, since its initial launch in 1999. Overall, Wagon R will maintain its tall boy stance, for which it was uniquely popular. To know more about New Maruti Suzuki Wagon R, check here...
Story first published: Tuesday, September 20, 2016, 11:19 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X