Subscribe to DriveSpark

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் சொகுசு எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்

Written By:

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய ஜிஎல்எஸ் சொகுசு எஸ்யூவி கார் இந்தியாவில் இன்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது.

7 பேர் செல்வதற்கான இருக்கை வசதி கொண்ட இந்த பிரம்மாண்ட எஸ்யூவி மாடலின் விபரங்கள் டெல்லியில் நடந்து வரும் நிகழ்ச்சியில் சற்றுமுன் வெளியிடப்பட்டன. கூடுதல் தகவல்கள், படங்களை ஸ்லைடரில் காணலாம்.

To Follow DriveSpark On Facebook, Click The Like Button
மாற்றம்...

மாற்றம்...

கடந்த 2010ம் ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல் கிளாஸ் எஸ்யூவிக்கு மாற்றாக இந்த புதிய எஸ்யூவி மாடல் விற்பனைக்கு வந்துள்ளது.

 டிசைன் மாற்றங்கள்

டிசைன் மாற்றங்கள்

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல் கிளாஸ் எஸ்யூவியின் மேம்படுத்தப்பட்ட மாடலாக வந்திருக்கும் ஜிஎல்எஸ் எஸ்யூவியில் வடிவமைப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. புதிய எல்இடி ஹெட்லைட்டுகள், இரட்டை பட்டை க்ரில் அமைப்பு, மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பானட், புதிய டெயில் லைட் க்ளஸ்ட்டர், 20 இன்ச் அலாய் வீல்கள் மற்றும் புதிய பம்பர் போன்றவற்றுடன் புதுப்பொலிவு பெற்றிருக்கிறது.

இன்டீரியர்

இன்டீரியர்

இன்டீரியரிலும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஆப்பிள் கார் பிளே சிஸ்டம், புதிய மீட்டர் கன்சோல், புதிய ஸ்டீயரிங் வீல், மறுவடிவமைப்பு பெற்ற சென்டர் கன்சோல், 8 இன்ச் தொடுதிரையுடன் கூடிய கமாண்ட் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கூடுதல் வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட சாஃப்ட்வேர் போன்றவை சிறப்பு சேர்க்கின்றன. கிளைமேட் கன்ட்ரோல் சிஸ்டமும் உள்ளது. மேலும், இந்த காருக்கு பிரத்யேகமான உயர்வகை நப்பா லெதர் இருக்கைகள் மற்றும் அப்ஹோல்ஸ்டரியும் விருப்பத்தின்பேரில் ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம்.

பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

முன்னால் செல்லும் வாகனத்தை கண்டறிந்து அதற்கு ஏற்ப பாதுகாப்பான இடைவெளியில் காரை இயக்கும் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், தடம் மாறாமல் செல்ல உதவும் லேன் கீப் அசிஸ்ட், ஓட்டுனரின் கண்ணுக்கு புலப்படாத இடத்திலிருந்து வரும் வாகனங்கள், பாதசாரிகளை கண்டறிந்து எச்சரிக்கும் ஆக்டிவ் பிளைண்ட் ஸ்பாட் சிஸ்டம், திடீரென ஏற்படும் பலமான காற்று வீச்சில் காரின் நிலைத்தன்மை மாறாமல் காக்கும் கிராஸ்விண்ட் அசிஸ்ட், தானியங்கி பிரேக் சிஸ்டம், 360 டிகிரி கேமரா போன்றவை இதனை இந்தியாவின் நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட காராக மாற்றியிருக்கிறது.

எஞ்சின்

எஞ்சின்

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் எஸ்யூவியில் 258 எச்பி பவரையும், 620 என்எம் டார்க்கையும் வழங்கும் 3.0 லிட்டர் வி6 டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 9ஜி டிரோனிக் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. எஞ்சின் ஆற்றலை அனைத்து சக்கரங்களுக்கும் பிரித்தளிக்கும் 4 மோஷன் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் உள்ளது.

டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

இந்த பிரம்மாண்ட எஸ்யூவி மணிக்கு 222 கிமீ வேகம் வரை செல்லும் வல்லமை கொண்டது. 0 - 100 கிமீ வேகத்தை இரண்டரை டன் எடை கொண்ட இந்த எஸ்யூவி 7.8 வினாடிகளில் எட்டிவிடும்.

டீசல் டேங்க்

டீசல் டேங்க்

இந்த காரில் 12 லிட்டர் ரிசர்வ் வசதியுடன் கூடிய 100 லிட்டர் கொள்ளளவு கொண்ட டீசல் டேங்க் பொருத்தப்பட்டு இருக்கிறது.

பூட் ரூம்

பூட் ரூம்

இந்த காரின் 2வது மற்றும் மூன்றாவது வரிசை இருக்கைகளை மடக்கினால் 2,300 லிட்டர் கொள்ளளவு கொண்ட பொருட்கள் வைப்பதற்கான இடவசதியை பெற முடியும்.

வண்ணங்கள்

வண்ணங்கள்

டிசைனோ டைமண்ட் ஒயிட், சிட்ரைன் பிரவுன் மெட்டாலிக், கேவன்சிட் புளூ மெட்டாலிக், ஒப்சிடியன் பிளாக் மெட்டாலிக், இரிடியம் சில்வர் மெட்டாலிக் மற்றும் டெனோரைட் கிரே மெட்டாலிக் உள்ளிட்ட 6 வண்ணங்களில் கிடைக்கும்.

விலை

விலை

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் எஸ்யூவி ரூ.80.4 லட்சம் புனே எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் அசெம்பிள்

இந்தியாவில் அசெம்பிள்

இந்த புதிய எஸ்யூவி மாடல் புனே அருகே சகன் தொழிற்பேட்டையில் உள்ள மெர்சிடிஸ் பென்ஸ் ஆலையில் அசெம்பிள் செய்து விற்பனை செய்யப்பட உள்ளது.

 போட்டியாளர்கள்

போட்டியாளர்கள்

இந்தியாவில் ஆடி க்யூ7, வால்வோ எக்ஸ்சி90 மற்றும் பிஎம்டபிள்யூ எக்ஸ்5 ஆகிய எஸ்யூவி மாடல்களுடன் போட்டி போடும்.

 
English summary
Mercedes has launched the GLS SUV in India for Rs. 80.40 lakh ex-showroom (Pune). The Mercedes-Benz GLS is the company's flagship SUV on offer in India, and the launch is part of Mercedes' strategy to launch 12 models this year to further strengthen its position in India.
Please Wait while comments are loading...

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark