புதிய நிஸான் 2017 ஜிடிஆர் சூப்பர் கார் நியூயார்க் ஆட்டோ ஷோவில் அறிமுகம்

Written By:

நிஸான் நிறுவனம், தங்களின் புதிய 2017 ஜிடிஆர் சூப்பர் காரை நியூயார்க் ஆட்டோ ஷோவின் போது, மார்ச் 23-ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளனர்.

அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற உள்ள இந்த ஆட்டோ ஷோ, மார்ச் 25-ஆம் தேதி முதல் ஏப்ரல் 3-ஆம் தேதி வரை நடை பெற உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் இணையதளம், டெல்லி அருகே உள்ள புத் இண்டர்நேஷனல் சர்க்யூட் தடத்தில் பரிசோதனை செய்த தற்போதைய ஜிடிஆர் மாடலுக்கும், புதிய 2017 ஜிடிஆர் சூப்பர் காருக்கு இடையில் பெரிய அளவிலான வித்தியாசங்கள் இல்லை.

new-nissan-gt-r-to-be-unveiled-at-new-york-auto-show-america

புதிய 2017 ஜிடிஆர் சூப்பர் காரானது, தற்போதைய ஜிடிஆர் மாடலின் பொலிவு கூட்டபட்ட வடிவமாக இருக்கும். புதிய 2017 ஜிடிஆர் சூப்பர் கார், சற்று மறுவடிவமைக்கபட்ட கிரில் கொண்டிருக்கும். மேலும், ட்ரப்பிசாய்டு எனப்படும் சரிவகம் தோற்றத்திலான திறப்புகள் கொண்டிருக்கும்.

மேலும், இந்த புதிய 2017 ஜிடிஆர் சூப்பர் காருக்கு, பல்வேறு திறன் தொட்ர்பான சாதனைகள் படைத்த ஜிடிஆர் நிஸ்மோ மாடலில் இருந்து சில ஏரோ மாற்றங்களை ஏற்று கொண்டிருக்கும்.

English summary
Nissan will unveil their new GTR (2017 Model Year) at New York Auto Show on March 23, 2016. New York Auto Show will be held between March 23 - April 3rd. New 2017 GTR will not have radical changes from current GTR model. New 2017 GTR might be a minor facelift version. To know more about New 2017 GTR Super Car, Check here...
Story first published: Wednesday, March 16, 2016, 10:03 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark