புதிய ரெனோ டஸ்ட்டர் காம்பேக்ட் எஸ்யூவியின் உற்பத்தி, ஃபிப்ரவரி 2016 முதல் துவக்கம்

By Ravichandran

புதிய ரெனோ டஸ்ட்டர் காம்பேக்ட் எஸ்யூவியின் உற்பத்தி ஃபிப்ரவரி 2016 முதல் துவங்க உள்ளது.

விரைவில் உற்பத்தி துவங்க உள்ள புதிய ரெனோ டஸ்ட்டர் காம்பேக்ட் எஸ்யூவி குறித்த கூடுதல் தகவல்களை, வரும் ஸ்லைடர்களில் தெரிந்து கொள்ளலாம்.

மிகவும் எதிர்பார்க்கபட்ட வாகனம்;

மிகவும் எதிர்பார்க்கபட்ட வாகனம்;

இந்திய சந்தைகளில் மிகவும் எதிர்பார்க்கபட்ட வாகனமாக, புதிய ரெனோ டஸ்ட்டர் காம்பேக்ட் எஸ்யூவி விளங்க்குகிறது.

இந்த புதிய 2016 ரெனோ டஸ்ட்டர், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தபட உள்ளது.

சென்னையில் உற்பத்தி;

சென்னையில் உற்பத்தி;

புதிய 2016 ரெனோ டஸ்ட்டர் காம்பேக்ட் எஸ்யூவியின் உற்பத்தி, சென்னையில் உள்ள ரெனோ நிறுவனத்தின் உற்பத்தி ஆலையில் இருந்து தயாரிக்கபட உள்ளது.

சர்வதேச சந்தைகளில் உள்ளது போன்ற டஸ்ட்டர்;

சர்வதேச சந்தைகளில் உள்ளது போன்ற டஸ்ட்டர்;

2016 ரெனோ டஸ்ட்டர் காம்பேக்ட் எஸ்யூவி-க்கு பல்வேறு சிறிய சிறிய மாற்றங்கள் செய்யபடும் என எதிர்பார்க்கபடுகிறது.

சர்வதேச சந்தைகளில் விற்கபடும் டஸ்டரில் உள்ளது போன்ற டிசைன் மேம்பாடுகள், இந்தியாவில் கிடைக்கும் டஸ்ட்டர் எஸ்யூவி-யிலும் செய்யபட உள்ளது.

டேசியா பிராண்ட், இந்த டஸ்ட்டர் எஸ்யூவி-யை சர்வதேச சந்தைகளில் பல்வேறு புதிய அவதாரங்களில் வழங்குகிறது.

ஆட்டோமேட்டிக் கியர்பார்க்ஸ்;

ஆட்டோமேட்டிக் கியர்பார்க்ஸ்;

இந்த புதிய 2016 ரெனோ டஸ்ட்டர் காம்பேக்ட் எஸ்யூவியின் சோதனைகள் இந்திய சாலைகளில் மேற்கொள்ளபட்டு வருகின்றது. ரெனோ இந்தியா நிறுவனம், 2016 ரெனோ டஸ்ட்டர் காருக்கு ஆட்டோமேட்டிக் கியர்பார்க்ஸ் வழங்க உள்ளது.

இந்திய சந்தைகளில், ஆட்டோமேட்டிக் கியர்பார்க்ஸின் தேவை அதிகரித்து வரும் நிலையில், 2016 ரெனோ டஸ்ட்டர் காருக்கு ஆட்டோமேட்டிக் கியர்பார்க்ஸ் வழங்கும் ரெனோ நிறுவனத்தின் முடிவு, இந்த எஸ்யூவி-க்கு கூடுதல் மதிப்பை கூட்டுகிறது.

இதர மேம்பாடுகள்;

இதர மேம்பாடுகள்;

ரெனோ டஸ்ட்டர் காம்பேக்ட் எஸ்யூவி-க்கு, 2016-ஆம் ஆண்டுக்கான மேம்படுகளின் ஒரு பகுதியாக, ப்ரண்ட் கிரில், ஹெட்லேம்ப், கிராஃபிக்ஸ் மற்றும் புதிய வண்ணங்களின் தேர்வுகள் வழங்கபட உள்ளது.

இதன் முந்தைய மாடலை காட்டிலும், புதிய 2016 ரெனோ டஸ்ட்டர் காம்பேக்ட் எஸ்யூவி, கூடுதல் சக்திவாய்ந்த வடிவமைப்பை பெற உள்ளது.

மேலும், பிரிமியம் அனுபவம் வழங்கும் வகையில், இந்த புதிய எஸ்யூவி-யின் இண்டீரியரின் அமைப்புகளும் மேம்படுத்தபட உள்ளது.

போட்டி கார்கள்;

போட்டி கார்கள்;

புதிய 2016 ரெனோ டஸ்ட்டர் காம்பேக்ட் எஸ்யூவி அறிமுகம் செய்யபட்ட பிறகு, இது ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் நிஸ்ஸான் டெர்ரேனோ உள்ளிட்ட கார்களுக்கு கடும் போட்டியாக விளங்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

எதிர்பார்க்கபடும் விலை;

எதிர்பார்க்கபடும் விலை;

புதிய 2016 ரெனோ டஸ்ட்டர் காம்பேக்ட் எஸ்யூவி, இதன் முந்தைய மாடலை காட்டிலும் சற்றும் கூடுதலான விற்கபடலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

இந்த ஆண்டில் அறிமுகமாகும் புதிய கார்கள்- சிறப்புத் தொகுப்பு

கார் விலை உயர்ந்தது... வாடிக்கையாளர் தலையில் கூடுதல் சுமை

இந்த ஆண்டில் ரிலீசாகும் புதிய எஸ்யூவி மற்றும் க்ராஸ்ஓவர் கார் மாடல்கள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

Most Read Articles
English summary
Production of New 2016 Renault Duster compact SUV is to commence from February 2016. Renault plans to begin the production of the new Duster in India from its Chennai facility. The 2016-edition of Renault Duster compact SUV is also expected to be showcased at the 2016 Delhi Auto Expo.
Story first published: Tuesday, January 12, 2016, 11:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X