2017 மாருதி சுஸுகி ஸ்விப்ட் ஸ்போர்ட் மாடலுக்கு டர்போசார்ஜ்ட் இஞ்ஜின் பொருத்தப்படும்

By Ravichandran

மாருதி சுஸுகி உருவாக்கி கொண்டிருக்கும் 2017 மாருதி சுஸுகி ஸ்விப்ட் ஸ்போர்ட் மாடலுக்கு, டர்போசார்ஜ்ட் இஞ்ஜின் பொருத்தப்பட உள்ளது. இது விரைவில் இங்கிலாந்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

டர்போசார்ஜ்ட் இஞ்ஜின் பொருத்தப்பட உள்ள மாருதி சுஸுகி ஸ்விப்ட் ஸ்போர்ட் மாடல் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

நிகழ் தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விப்ட் ஸ்போர்ட் கார், நேச்சுரல்லி ஆஸ்பிரேட்டட் 1.6 லிட்டர் இஞ்ஜின் கொண்டுள்ளது.

சுஸுகி நிறுவனம் இந்த 1.6 லிட்டர் இஞ்ஜின் விலக்கி விட்டு, 2017 மாருதி சுஸுகி ஸ்விப்ட் ஸ்போர்ட் மாடலுக்கு 1.4 லிட்டர் டர்போசார்ஜ்ட் பெட்ரோல் இஞ்ஜின் பொருத்த உள்ளது.

இதே 1.4 லிட்டர் டர்போசார்ஜ்ட் பெட்ரோல் இஞ்ஜின் தான், விட்டாரா எஸ்-டர்போ மாடலிலும் பொருத்தபட்டுள்ளது.

இந்த இஞ்ஜின், 138 பிஹெச்பியையும், 220 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

குறைந்த எடை;

குறைந்த எடை;

2017 மாருதி சுஸுகி ஸ்விப்ட் ஸ்போர்ட், நிகழ் தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விப்ட் ஸ்போர்ட் காரை காட்டிலும் எடை குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

மாருதி சுஸுகி ஸ்விப்ட் ஸ்போர்ட் மடலின் விவரக்குறிப்புகள் உறுதி செய்யப்பட்ட நிலையில், இது கூடுதல் பவர் வழங்கும் வகையில் இருக்கும்.

இந்தியாவிற்கான மாடல்;

இந்தியாவிற்கான மாடல்;

இந்திய வாகன சந்தைகளை பொருத்த வரை, மாருதி சுஸுகி ஸ்விப்ட் மாடல், பொலிவுகூட்டல் செய்யபடும நிலையில் உள்ளது. புதிய தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விப்ட் மாடல், அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.

இந்த மாருதி சுஸுகி ஸ்விப்ட் மாடல், 1.0-லிட்டர் பூஸ்டர் ஜெட் இஞ்ஜின் பொருத்தபட்டதாக இருக்கும்.

எடை;

எடை;

இந்திய வாகன சந்தைகளுக்கான மாருதி சுஸுகி ஸ்விப்ட் மாடல், எடை குறைவானதாக இருக்கும். இது சுமார் 1000 கிலோகிராமுக்கும் குறைவான எடை கொண்டதாக இருக்கும்.

தோற்றம்;

தோற்றம்;

2017 மாருதி சுஸுகி ஸ்விப்ட் காரின் ட்ஜிட்டல் ரெண்டரிங் செய்யப்பட்ட படங்கள், ஆன்லைனில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

இதன் வெளித்தோற்றம் படி, பெரிய அளவிலான மாற்றங்கள் செய்யபட்டுள்ளதாக தெரியவில்லை. ஆனால், விட்டாரா பிரெஸ்ஸாவில் காணப்படுவது போல், இதன் முன் பக்கத்தில், நீண்ட ஸ்நவுட் மற்றும் ஃப்ளோட்டிங் ரூஃப் எஃபக்ட் காணப்படுகிறது.

உட்புற அமைப்பு;

உட்புற அமைப்பு;

2017 மாருதி சுஸுகி ஸ்விப்ட் காரின் உட்புறத்தில் உள்ள டேஷ்போர்ட், எளிமையாகவும், ஸ்போர்டியாகவும் உள்ளது.

எதிர்பார்ப்பு;

எதிர்பார்ப்பு;

இந்தியாவில், மாருதி சுஸுகி ஸ்விப்ட், சிறந்த அளவில் விற்பனையாகும் மாடலாக உள்ளது. இதன புதிய தலைமுறை மாடல், ஹேட்ச்பேக் செக்மன்ட்டில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் என எதிர்பார்க்கபடுகிறது.

போட்டி;

போட்டி;

2017 மாருதி சுஸுகி ஸ்விப்ட், ஹூண்டாய் கிராண்ட் ஐ10, ஃபோர்டு ஃபிகோ மற்றும் மஹிந்திரா கேயூவி100 ஆகிய மாடல்களுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

புதிய மாருதி சுஸுகி ஸ்விப்ட் காரின் படங்கள் கசிந்தன!

ஸ்விப்ட் தொடர்புடைய செய்திகள்

மாருதி ஸ்விப்ட் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
New 2017 Suzuki Swift Sport, is the next generation hatchback from Suzuki, which is due to be launched in the UK. Current generation Suzuki Swift Sport is powered by naturally aspirated 1.6-litre engine. Suzuki will do away with this 1.6-litre engine and equip with 1.4-litre turbocharged petrol engine, which is seen in Vitara S-Turbo. To know more, check here...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X