டொயோட்டாவின் புதிய 2016 எட்டியோஸ் லிவா ஹேட்ச்பேக் இந்தியாவில் அறிமுகம்

Written By:

டொயோட்டா கிர்லோஸ்கார் மோட்டார்ஸ் நிறுவனம் தயாரித்து வழங்கும் புதிய 2016 எட்டியோஸ் லிவா ஹேட்ச்பேக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் பண்டிகை காலங்கள் நெருங்கி கொண்டிருக்கிறது. இந்த நிலையில், பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புகளை ஒன்றன்பின் ஒன்றாக அறிமுகம் செய்து வருகிறது.

தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய எட்டியோஸ் லிவா ஹேட்ச்பேக் தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

டிசைன்;

டிசைன்;

டொயோட்டா கிர்லோஸ்கார் மோட்டார்ஸ் நிறுவனம் வழங்கும் புதிய 2016 எட்டியோஸ் லிவா ஹேட்ச்பேக்கின் ஒட்டுமொத்த டிசைன், முந்தைய மாடலை காட்டிலும், ஸ்போர்ட்டியாகவும் மற்றும் ட்ரென்ட்டியாகவும் உள்ளது. இது, இளைஞர்களை வெகுவாக ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டாக விற்பனை;

கூட்டாக விற்பனை;

புதிய 2016 எட்டியோஸ் லிவா ஹேட்ச்பேக், முந்தைய தலைமுறை மாடலுடன் கூட்டாக விற்பனை செய்யப்படும்.

இஞ்ஜின் தேர்வுகள்;

இஞ்ஜின் தேர்வுகள்;

புதிய 2016 எட்டியோஸ் லிவா ஹேட்ச்பேக், பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் டீசல் இஞ்ஜின் என 2 விதமான இஞ்ஜின் தேர்வுகளிலும் வெளியாகிறது. இதில், ஒரு 1.5 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் 1.4 லிட்டர் டீசல் இஞ்ஜின் ஆகிய இஞ்ஜின்களுடன் வெளியாகும்.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

புதிய 2016 எட்டியோஸ் லிவா ஹேட்ச்பேக்கிற்கு டொயோட்டா நிறுவனம் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வை வழங்கவில்லை. இதன் பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் டீசல் இஞ்ஜின்கள் இரண்டுமே 5-ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் தான் இணைக்கபட்டுள்ளது.

பாதுகாப்பு;

பாதுகாப்பு;

பாதுகாப்பை பொருத்தவரை, புதிய 2016 எட்டியோஸ் லிவா ஹேட்ச்பேக், டியூவல் ஏர்பேக்குகள் மற்றும் ஏபிஎஸ் எனப்படும் அண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவற்றை ஸ்டாண்டர்ட் அம்சமாக கொண்டுள்ளது.

மேலும், இந்த லிவா ஹேட்ச்பேக்கில் உள்ள ஐசோஃபிக்ஸ் (ISOFIX) பாயிண்ட்கள், குழ்னதைகளுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. அமைதியான டிரைவிங் அனுவத்திற்கு என்விஹெச் அளவுகள் குறைக்கப்பட்டுள்ளது.

போட்டி;

போட்டி;

புதிய 2016 எட்டியோஸ் லிவா ஹேட்ச்பேக், ஃபோர்டு ஃபிகோ, டாடா டியாகோ, செவர்லே பீட் மற்றும் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 ஆகிய மாடல்களுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.

விலை;

விலை;

புதிய 2016 எட்டியோஸ் லிவா ஹேட்ச்பேக்கின் விலை விவரங்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

ஸ்டாண்டர்ட் எட்டியோஸ் லிவா (பெட்ரோல்) - 5.24 லட்சம் ரூபாய்

ஸ்டாண்டர்ட் எட்டியோஸ் லிவா (டீசல்) - 6.61 லட்சம் ரூபாய்

டிஎல்எக்ஸ் எட்டியோஸ் லிவா (பெட்ரோல்) - 5.58 லட்சம் ரூபாய்

டிஎல்எக்ஸ் எட்டியோஸ் லிவா (டீசல்) - 6.94 லட்சம் ரூபாய்

ஹை எட்டியோஸ் லிவா (பெட்ரோல்) - 5.73 லட்சம் ரூபாய்

ஹை எட்டியோஸ் லிவா (டீசல்) - 7.02 லட்சம் ரூபாய்

பிரிமியம் எட்டியோஸ் லிவா (பெட்ரோல்) - 6.28 லட்சம் ரூபாய்

பிரிமியம் எட்டியோஸ் லிவா (டீசல்) - 7.44 லட்சம் ரூபாய்

குறிப்பு;

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விலை விவரங்களும், எக்ஸ்-ஷோரூம் மும்பை விலைகள் ஆகும்.

மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota Kirloskar Motors has launched their 2016-edition of Etios Liva hatchback in India. All-new Etios Liva hatchback will be sold alongside previous-gen model. Overall design of new Toyota Etios Liva looks more sporty and trendy than the previous model. We expect younger buyers would prefer 2016 Toyota Etios Liva more, than ever before. To know more, check here...
Story first published: Wednesday, September 14, 2016, 12:23 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos