விபத்தில் சிக்கியபோது தனது பலத்தை நிரூபித்த புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர்!!

Written By:

இந்த மாத துவக்கத்தில் புதிய தலைமுறை டொயோட்டா ஃபார்ச்சூனர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. எதிர்பார்த்தது போலவே, வாடிக்கையாளர்களின் அமோக வரவேற்புடன் சிறப்பான முன்பதிவுடன் கணக்கை துவங்கியிருக்கிறது.

இந்த நிலையில், டெலிவிரி கொடுக்கப்பட்டு சில நாட்களில் புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி விபத்தில் சிக்கிய படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளன. அந்த படங்களையும், விபரங்களையும் தொடர்ந்து காணலாம்.

விபத்து படங்கள்

விபத்து படங்கள்

Club FMC என்ற அமைப்பின் உறுப்பினரான ஜான் தாமஸ் என்பவர் புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி விபத்தில் சிக்கிய படங்களை தனது முகநூல் பக்கத்தில் பதிவேற்றியிருக்கிறார். மத்திய பிரதேசத்தில் இந்த விபத்து நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து காரணம்

விபத்து காரணம்

மத்திய பிரதேச மாநிலத்தில் நெடுஞ்சாலை ஒன்றில் வேகமாக சென்றுகொண்டிருந்தபோது, அதே வழியில் எதிர்புறத்தில் டிரக் ஒன்று வந்துவிட்டதாக தெரிகிறது. வேகத்தை கட்டுப்படுத்த முடியாத ஓட்டுனர் டிரக்கில் மோதாமல் இருப்பதற்காக சாலையோரத்தில் காரை திருப்பியிருக்கிறார்.

 பள்ளத்தில் உருண்டது

பள்ளத்தில் உருண்டது

அப்போது, சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கார் கவிழந்து உரண்டது. இதில், கார் பலத்த சேதமடைந்தது. முன்பக்கம், கூரை அமைப்பு ஆகியவை மிக மோசமாக நசுங்கியது. ஆனாலும், இந்த விபத்தில் காரில் பயணித்த அனைவரும் சிறிய காயங்களுடன் அதிசயமாக உயிர் பிழைத்தனர்.

 பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

காரின் கட்டுமானமும், சிறப்பான பாதுகாப்பு அம்சங்களுடன் பயணிகளை காப்பற்றியதாக கருதப்படுகிறது. ஏனெனில், சில மாதங்களுக்கு முன் குளோபல் என்சிஏபி அமைப்பு நடத்திய கிராஷ் டெஸ்ட்டில் புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி 5க்கு 5 என்ற அதிகபட்ச தரமதிப்பீட்டை பெற்றது.

 பலத்தை நிரூபித்தது

பலத்தை நிரூபித்தது

அதனை உறுதிபடுத்தும் விதத்திலேயே, இந்த விபத்தில் சிக்கிய டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவியிலும் ஏர்பேக்குகள் உரிய நேரத்தில் விரிந்து பயணிகளை காப்பாற்றியதாக கருதப்படுகிறது. மேலும், காரின் சிறப்பான கட்டுமானமும் அதிகம் உருக்குலையாமல் இருந்ததே பயணிகள் உயிர் பிழைத்ததற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

ஆறுதல் செய்தி

ஆறுதல் செய்தி

விபத்திற்கான காரணம் குறித்து முழுமையான தகவல்கள் இல்லை. இருப்பினும், இந்த விபத்தில் பயணிகள் உயிர் பிழைத்ததாக கிடைத்திருக்கும் செய்தி ஆறுதல் தருகிறது. மேலும், ஏர்பேக்குகள் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் இருந்தால் இதுபோன்ற விபத்துக்களிலிருந்து பயணிகள் உயிர் தப்பிக்க வாய்ப்பு ஏற்பட்டிருப்பதையும் கார் வாங்குவோர் மனதில் கொள்ள வேண்டும்.

கவனம்

கவனம்

எனவே, அதிகபட்ச பாதுகாப்பு வசதிகள் கொண்ட காரையே தேர்வு செய்து வாங்கவும். தரமற்ற கட்டுமானம், பாதுகாப்பு வசதிகள் இல்லாத கார்களுக்கு ஆதரவு கொடுப்பதை தவிர்க்கவும். பட்ஜெட் மட்டும் பார்க்காமல் உயர் பாதுகாப்பு வசதிகள் கொண்ட காரையே தேர்வு செய்யவும். ஏனெனில், இந்திய சாலைகளில் போதிய கட்டமைப்பு வசதிகளும், பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளதை மனதில் வைக்கவும்.

English summary
The new Toyota Fortuner has had a severe crash, which has proved the safety rating awarded to the SUV to be spot on.
Story first published: Tuesday, November 29, 2016, 17:42 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark