2016 டொயோட்டா ஃபார்ச்சூனர் பிரிமியம் எஸ்யூவி இந்தியாவில் நவம்பரில் அறிமுகம்

Written By:

டொயோட்டா கிர்லோஸ்கார் மோட்டார்ஸ் நிறுவனம், தாங்கள் தயாரிக்கும் 2016 டொயோட்டா ஃபார்ச்சூனர் பிரிமியம் எஸ்யூவியை இந்தியாவில் நவம்பர் மாதம் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. ஜப்பானை சேர்ந்த டொயோட்டா கிர்லோஸ்கார் மோட்டார்ஸ் நிறுவனம், இந்தியாவில் தங்களின் போர்ட்ஃபோலியோவை விரிவுப்படுத்த முயற்சித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, 2016 டொயோட்டா ஃபார்ச்சூனர் பிரிமியம் எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளனர்.

2016 டொயோட்டா ஃபார்ச்சூனர் பிரிமியம் எஸ்யூவி தொடர்பான கூடுதல் தகவல்களை, இனி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

டிசைன்;

டிசைன்;

டிசைன் பொருத்த வரை, 2016 டொயோட்டா ஃபார்ச்சூனர் பிரிமியம் எஸ்யூவி, முந்தைய தலைமுறை மாடலை காட்டிலும் கூடுதல் ஸ்போர்ட்டியாக இருக்கும். இதன் முன் பம்பர் மற்றும் பின் பாடி பம்பர் உடன் ஹெட்லேம்ப்கள் மற்றும் டெயில்லேம்ப்கள் மறுவடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும், கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன், வேறு பல ஈர்க்கும் அம்சங்களும் சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இஞ்ஜின் தேர்வுகள்;

இஞ்ஜின் தேர்வுகள்;

2016 டொயோட்டா ஃபார்ச்சூனர் பிரிமியம் எஸ்யூவி, பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் டீசல் இஞ்ஜின் என 2 விதமான இஞ்ஜின் தேர்வுகளில் வெளியாகிறது.

இஞ்ஜின் விவரங்கள்;

இஞ்ஜின் விவரங்கள்;

2016 டொயோட்டா ஃபார்ச்சூனர் பிரிமியம் எஸ்யூவி, 2.4-லிட்டர் டீசல் இஞ்ஜின் மற்றும் 2.8-லிட்டர் டீசல் இஞ்ஜின் தேர்வுகளில் வெளியாகும். பெட்ரோல் இஞ்ஜின் பொருத்தவரை, 4 சிலிண்டர்கள் உடைய 2.7 பெட்ரோல் இஞ்ஜினுடன் மட்டுமே வெளியாகும்.

சோதனைகள்;

சோதனைகள்;

2016 டொயோட்டா ஃபார்ச்சூனர் பிரிமியம் எஸ்யூவி, இந்திய சாலைகளில் பல முறை பரிசோதிக்கப்பட்டது. இது தொடர்பான ஸ்பை படங்கள் அவ்வப்போது வெளியாகி கொண்டிருக்கின்றன.

தாமதமான அறிமுகம்;

தாமதமான அறிமுகம்;

டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில், டீசல் வாகனங்களுக்கான தடை நீடித்து கொண்டே வந்ததால், டொயோட்டா நிறுவனம், இந்தியாவில் 2016 டொயோட்டா ஃபார்ச்சூனர் பிரிமியம் எஸ்யூவியின் அறிமுகத்தை தாமதப்படுத்தி கொண்டே வந்தது. இதனால், 2016 டொயோட்டா ஃபார்ச்சூனர் பிரிமியம் எஸ்யூவியின் விற்பனை இதன் முக்கியமான சந்தையான வட இந்தியாவில், கணிசமாக பாதிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

விற்கப்படும் சந்தைகள்;

விற்கப்படும் சந்தைகள்;

தற்போதைய நிலையில், 2016 டொயோட்டா ஃபார்ச்சூனர் பிரிமியம் எஸ்யூவி, ஆஸ்திரேலியா, தாய்லாந்து மற்றும் தென் ஆஃப்ரிக்கா போன்ற சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்தியாவில் அறிமுகம்;

இந்தியாவில் அறிமுகம்;

2016 டொயோட்டா ஃபார்ச்சூனர் பிரிமியம் எஸ்யூவி, இந்திய வாகன சந்தைகளில், வரவிருக்கும் பண்டிகை காலங்களின் போது அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நவம்பர் மாதத்தின் போது, இது இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என செய்திகள் வெளியாகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

மென்மை மனம் படைத்த ஏர் ஆர் ரஹ்மானின் அரக்க குணம் படைத்த கார்!

காக்கா தோஷம்... புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் வாங்கிய கர்நாடக முதல்வர் சித்தராமையா!

ஆய்வுகளுக்காக புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் இறக்குமதி... விரைவில் அறிமுகம்?

மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota Kirloskar Motors plans on rejuvenating their Indian four-wheeler portfolio. Hence, Japan-based automobile manufacturer plans on introducing an all-new 2016 Toyota Fortuner premium SUV in India. 2016 Toyota Fortuner will look sportier than the previous-gen model. 2016 Toyota Fortuner is expected to launch during November. Toyota Fortuner is available in petrol and diesel engine options. To know more, check here...
Story first published: Thursday, September 15, 2016, 11:33 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark