புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா பிரத்யேக படங்கள்... உங்களுக்காக...!!

Written By:

பெரும் ஆவலைத் தூண்டியிருக்கும் புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த காரை சமீபத்தில் கோவாவில் வைத்து டெஸ்ட் டிரைவ் செய்த அனுபவத்தை, முந்தைய செய்தித் தொகுப்பில் படித்திருப்பீர்கள். அடுத்து, இந்த காரை வாங்க முடிவு செய்திருப்பவர்களுக்காக இந்த காரை அங்குலம் அங்குலமாக பார்ப்பதற்கு வசதியாக பிரத்யேக படங்கள் அடங்கிய சிறப்புத் தொகுப்பை கேலரியில் காணலாம்.

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா

 

இந்த பிரத்யேக படங்களின் தொகுப்பின் மூலமாக, காரின் டிசைன், வசதிகள், உட்புற அலங்கார வேலைப்பாடுகள் உள்ளிட்ட பலவற்றை அறிந்து கொண்டு ஷோரூம் செல்ல ஆயத்தமாக முடியும்.

2.4 லிட்டர் டீசல் எஞ்சின் மாடல் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டதாகவும், 2.8 லிட்டர் டீசல் எஞ்சின் மாடல் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டதாகவும் வருகிறது. 2.4 லிட்டர் டீசல் மாடல் லிட்டருக்கு 15.1 கிமீ மைலேஜையும், 2.8 லிட்டர் டீசல் எஞ்சின் மாடல் லிட்டருக்கு 14.29 கிமீ மைலேஜையும் தரும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

55 லிட்டர் கொள்ளளவு கொண்ட டீசல் டேங்க் உள்ளதால், நீண்ட தூர பயணங்களை அழகாக சமாளிக்கும். தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான கிராஷ் டெஸ்ட் அமைப்பு இந்த காருக்கு 4 நட்சத்திர பாதூகாப்பு தர அந்தஸ்து வழங்கியிருக்கிறது. டிசைன், வசதிகள், பாதுகாப்பு என அனைத்து விதங்களிலும் நிறைவான கார் மாடலாக இருக்கும் என நம்பலாம்.

English summary
New Toyota Innova Crysta Photo Gallery.
Please Wait while comments are loading...

Latest Photos

 
X