அடுத்த தலைமுறை ரெனோ ஃப்ளூயன்ஸ் செடானின் ஸ்கெட்ச் படங்கள் வெளியிடப்பட்டது

By Ravichandran

ரெனோ நிறுவனம் வழங்கும் அடுத்த தலைமுறை ரெனோ ஃப்ளூயன்ஸ் செடான், புரோஷரில் உள்ள ஸ்கெட்ச் படங்கள் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

அடுத்த தலைமுறை ரெனோ ஃப்ளூயன்ஸ் செடான் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

புதிய ரெனோ ஃப்ளூயன்ஸ்...

புதிய ரெனோ ஃப்ளூயன்ஸ்...

ஃபிரான்ஸ் நாட்டை மையமாக கொண்டு இயங்கும் ரெனோ நிறுவனம் தயாரித்து வழங்கும் அடுத்த தலைமுறை ரெனோ ஃப்ளூயன்ஸ் செடான், முறைப்படி 2016 பாரிஸ் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பலாம் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், இந்த அடுத்த தலைமுறை ரெனோ ஃப்ளூயன்ஸ் செடானின் சொந்தக்காரரின் மேனுவல் (owner's manual) எனப்படும் கையேட்டில் இருந்த ஸ்கெட்ச் படங்கள் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

நிகழ் தலைமுறை ஃப்ளூயன்ஸ்;

நிகழ் தலைமுறை ஃப்ளூயன்ஸ்;

ஐரோப்பாவில் மேகேன் (Megane) ஹேட்ச்பேக் என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் மாடல் தான், இந்தியாவில் நிகழ் தலைமுறை ஃப்ளூயன்ஸ் செடான் வடிவில் விற்பனை செய்யப்படுகிறது.

வெளியாகிய படங்கள்;

வெளியாகிய படங்கள்;

கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில், ஸ்கெட்ச் வடிவில் வெளியாகிய படங்கள், இந்த அடுத்த தலைமுறை ரெனோ ஃப்ளூயன்ஸ் செடான் காரின் ஸ்டைலிங் அம்சங்களை வெளிப்படுத்துகிறது.

மேலும், இந்த ஸ்கெட்ச் வடிவில் வெளியாகிய படங்கள் மூலம் இந்த ரெனோ ஃப்ளூயன்ஸ் செடான் காரின் வெளிப்புற பரிமாணங்களும் வெளிப்பட்டுள்ளது.

டிசைன்;

டிசைன்;

டிசைன் பொருத்த வரை, அடுத்த தலைமுறை ரெனோ ஃப்ளூயன்ஸ் செடான், இதன் ஹேட்ச்பேக் இணை மாடலை போலவே காட்சி அளிக்கிறது.

இதன் முன் பக்கத்தில் எல்இடி ஹெட்லேம்ப்கள் மற்றும் ஈர்க்கும் வகையிலான எல்இடி டேடைம் ரன்னிங் லைட்கள் உள்ளது.

இதன் கிரில்லின் 2 பக்கங்களிலும் ஹெட்லேம்ப்கள் உள்ளது. இந்த கிரில்லின் மத்தியில் தான் ரெனோவின் பெரிய பேட்ஜ் பொருத்தப்பட்டுள்ளது.

இதர அம்சங்கள்;

இதர அம்சங்கள்;

அடுத்த தலைமுறை ரெனோ ஃப்ளூயன்ஸ் செடான், பூட் வரை மென்மையாக சரிந்து செல்லும் மேற்கூரை கொண்டுள்ளது.

மேகேன் (Megane) ஹேட்ச்பேக்கில் இருந்து ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள டெயில்லேம்ப்கள் ஈர்க்கும் வகையில் உள்ளது.

பரிணாமங்கள்;

பரிணாமங்கள்;

அடுத்த தலைமுறை ரெனோ ஃப்ளூயன்ஸ் செடான் 4.630 மீட்டர் நீளமும், 2.058 மீட்டர் அகலமும், 1.443 உயரமும் கொண்டுள்ளது.

புதிய ரெனோ ஃப்ளூயன்ஸ் செடான், 2.711 மீட்டர் அளவிற்கு நீண்டுள்ள வீல் பேஸ் கொண்டுள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

மேம்படுத்தபட்ட அம்சங்களுடன் புதிய ரெனோ ஃப்ளூயன்ஸ் அறிமுகம்

ஃப்ளூயன்ஸ் தொடர்புடைய செய்திகள்

ரெனோ தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Sketch Pictures Credit ; http://rnews.cz/?p=1594

Most Read Articles
English summary
France based Carmaker Renault is presenting Renault Fluence. Next-generation Renault Fluence sedan sketches has been revealed from leaked owner's manual ahead of its expected debut at 2016 Paris Motor Show. New Fluence is 4.630 metres long, 2.058 metres wide and 1.443 metres tall. Wheelbase of new sedan is 2.711 metres long. To know more, check here...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X