டெல்லியில், 10 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்களுக்கு அதிரடி தடை!

Written By:

டெல்லியில் 10 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்களுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி தடை விதித்துள்ளது. மேலும், 10 ஆண்டுகள் பழமை வாய்ந்த டீசல் வாகனங்களின் பதிவை ரத்து செய்யவும் டெல்லி அரசுக்கு உத்தரவிட்டிருக்கிறது.

டெல்லியில் காற்று மாசுபாடு அளவு அபாயகரமான அளவை எட்டியிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காற்று மாசுபடுவதற்கு வாகனங்களிலிருந்து வெளியேறும் புகையே முக்கிய காரணமாக கருதப்படுகிறது. குறிப்பாக, டீசல் வாகனங்கள் அதிக புகை வெளியேற்றுவதாக கருதி, அந்த வாகனங்கள் மீது கடும் கட்டுப்பாடுகள் தொடர்ந்து விதிக்கப்பட்டு வருகின்றன.

டீசல் கார்களுக்கு தடை
 

ஏற்கனவே, 15 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்களின் பதிவு ரத்து செய்யப்பட்டது. மேலும், 2,000சிசி திறன் கொண்ட டீசல் கார்களை பதிவு செய்யவும் கடந்த ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், 10 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்களுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி தடை விதித்துள்ளது.

மேலும், அந்த வாகனங்களின் பதவை ரத்து செய்யவும் டெல்லி அரசுக்கு உத்தரவிட்டிருக்கும் தேசிய பசுமை தீர்ப்பாயம், அந்த வாகனங்கள் குறித்த பட்டியலை போக்குவத்து போலீசாரிடம் வழங்கவும் அறிவுறுத்தியிருக்கிறது. இந்த தடையால் டெல்லி மட்டுமின்றி, நாடு முழுவதும் டீசல் காரை பயன்படுத்துவோர் மத்தியில் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

English summary
NGT Orders RTOs To De-Register All Delhi Diesel Vehicles Over 10 Years Old.
Story first published: Monday, July 18, 2016, 17:02 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark