பெங்களூரில் டிரைவரைத் தாக்கி விட்டு காரை அபேஸ் செய்த நைஜீரிய போதை இளைஞர்...!!

By Meena

நைஜீரியா.... கறுப்பின தேசமாக இருந்தாலும் பல கலாசாரங்களும், வனம் சார்ந்த இயற்கைச் சூழலும் கொண்ட அழகான நாடு.

முன்பெல்லாம் அந்த நாட்டின் பெயரைக் கேட்டாலே அங்குள்ள மக்களும், அதன் இயற்கை வளங்களுமே கண் முன்னால் வந்துபோகும். ஆனால், சமீபகாலமாக அந்த நிலையை மாற்றிவிட்டார்கள் அந்நாட்டைச் சேர்ந்த சில இளைஞர்கள்.

டாக்சி அபேஸ்

ஏடிஎம் எந்திரத்தில் ஸ்கிம்மர் எனப்படும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தகவல் திருட்டு செய்வது, ஆன்-லைன் மூலமாக பணம் திருடுவது என நைஜீரிய நாட்டைச் சேர்ந்த பல இளைஞர்கள் செய்யும் குற்றஙகள்தான் இப்போது நமக்கு நினைவுக்கு வருகின்றன. அதுதொடர்பாக அந்நாட்டைச் சேர்ந்த பலர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்த வரிசையில் புதிதாக பெங்களூரில் ஒரு சம்பவம் அண்மையில் நடைபெற்றிருக்கிறது. கடந்த சனிக்கிழமையன்று, அதிகாலை 3 மணிக்கு சாலை ஓரத்தில் காரை நிறுத்தி ஓய்வெடுத்துக் கொண்டிருந்த கால் டாக்ஸி ஓட்டுரை தாக்கவிட்டு, அந்த காரே அபேஸ் செய்திருக்கிறார் நைஜீரிய இளைஞர் ஒருவர்.

பெங்களூரின் பென்னார்கெட்டா சாலையில் அமைந்துள்ள பிலேகாஹல்லி சிக்னல் அருகே தனியார் கால் டாக்ஸி நிறுவனத்தில் பணிபுரியும் டிரைவர் ஒருவர் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது, அவரை அணுகிய போதை இளைஞர் ஒருவர் கார் சாவியைத் தருமாறு கேட்டுள்ளார்.

அதற்கு அவர் மறுக்கவே, டிரைவரை வயிற்றில் தாக்கிவிட்டு சாவியைப் பிடுங்கிக் கொண்டு காருடன் எஸ்கேப் ஆகியிருக்கிறார் அந்த நைஜீரிய இளைஞர். இதுகுறித்து தகவலறிந்த பெங்களூரு போக்குவரத்து காவல் துறை, துரிதமாக செயல்பட்டு 3 மணி நேரத்துக்குள் அந்த நபரை கையும் களவுமாக பிடித்துள்ளனர்.

காரில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டிருந்ததால், அது எங்கு பயணிக்கிறது என்பதை அறிந்து கொண்ட போலீஸார், அந்த நபர் செல்லும் வழியில் வலை விரித்துக் காத்திருந்தனர்.

ஹென்னூரிலிருந்து எலெக்ட்ரானிக் சிட்டிக்குச் செல்லும் வழியில் அந்த போதை இளைஞரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர் போலீஸார். விசாரணையில், அவர் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த இப்ராஹிம் அப்துல் முல்லாலபி (33) என்பதும், பெங்களூரின் ஏலஹங்காவில் உள்ள மேலாண்மையியல் பல்கலைக்கழகத்தில் அவர் இளங்கலைப் படிப்பு படித்து வருவதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, போலீஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைக்கு வழியனுப்பி வைத்தனர்.

சாலை ஓரத்தில் தூங்கினால், ஒன்று காரை ஏற்றி கொலை செய்கிறார்கள் அல்லது காரையே லவட்டி விடுகிறார்கள். என்ன செய்வது என்றே தெரியாமல் முழிக்கின்றனர் சாமானிய இந்திய மக்கள்.

Most Read Articles
English summary
Nigerian Student Steals A Cab, Goes For A Bengaluru City Tour.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X