நிஸான் நிறுவனம், மைடிவிஎஸ் இடையே புதிய கூட்டணி

Written By:

நிஸான் நிறுவனம், மைடிவிஎஸ் இடையே புதிய கூட்டணி மலர்ந்துள்ளது.

இந்தியாவில் தங்களின் சர்வீஸ் நெட்வர்க்கை விரிவாக்கம் செய்யும் நோக்கில், நிஸான் நிறுவனம் மைடிவிஎஸ் உடன் கூட்டணி அமைத்து கொண்டுள்ளது. இனி, நிஸான் மற்றும் டடசன் கார்களின் சொந்தக்காரர்கள் இந்த புதிய மையங்களில் சர்வீஸ் செய்து கொள்ளலாம். இந்த 2 நிறுவனங்களும் இணைந்து, முக்கியமான இடங்களில் நிஸானின் அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் மையங்களை திறக்க உள்ளனர்.

nissan-and-mytvs-partner-service-network-expansion-in-india

தற்போதைய நிலையில், ஜப்பானை மையமாக கொண்டு இயங்கும் நிஸான் நிறுவனத்திற்கு, தமிழ்நாட்டில் 23 சர்வீஸ் மையங்கள் உள்ளன. இந்நிறுவனம், இந்த எண்ணிக்கை கூடுதலாக அதிகரிக்கக் விரும்புகின்றனர். மைடிவிஎஸ் உடனான இந்த கூட்டணி மூலம், தமிழ்நாட்டில் நிஸானின் அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் மையங்கள் கூடுதலாக திறக்கப்படும். இதனால், நிஸான் மற்றும் டட்சன் வாடிக்கையாளர்களுக்கு வசதியான சர்வீஸ் அனுபவங்கள் கிடைக்க உள்ளது.

இந்த நிஸானின் அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் மையங்களில், ஜெனியூன் உதிரி பாகங்கள், சர்வீஸ் பாகங்களின் மாற்றம் மற்றும் பயிற்சி பெற்ற டெக்னீஷியன்கள் பெற முடியும். வாடிக்கையாளர்களுக்கு சர்வீஸ் அனுபவங்களை மேம்படுத்த, இந்த 2 நிறுவனங்களும் திட்டம் கொண்டுள்ளனர். இந்த விஷயத்தில் மைடிவிஎஸ், இந்தியாவில் உள்ள நிஸான் நிறுவன டீலர் நெட்வர்க்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

நிஸான் நிறுவனம், தற்போது மைக்ரா ஆக்டிவ், மைக்ரா, சன்னி, டெர்ரானோ மற்றும் எவாலியா ஆகிய மாடல்களை வழங்கி வருகின்றனர். டட்சன் நிறுவனம், கோ, கோ + மற்றும் ரெடி-கோ ஆகிய மாடல்களை வழங்கி வருகின்றனர். போட்டியை சமாளிக்கும் வகையில் நிஸான் மற்றும் டட்சன் நிறுவனங்களின் தயாரிப்புகள் சரியான விலையில் விற்கப்படுகிறது.

நிஸானின் அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் மையங்களின் விரிவாக்கம், வரும் மாதங்களில் மேற்கொள்ளப்படும். 2017-ற்குள் நிஸான் நிறுவனம், இந்தியா முழுவதிலும் 300 டீலர்ஷிப்களை நிறுவ திட்டமிட்டுள்ளது. இந்த புதிய சர்வீஸ் மையங்கள் மூலம், வாடிக்கையாளர்கள் இனிமையான மற்றும் திருப்திகரமான சேவையை பெற முடியும்.

English summary
Nissan and MyTVS Team up together to enhance Service Network in India. Nissan announced that, it will be partnering with MyTVS to strengthen their service network in India. Nissan and Datsun owners can get their vehicles serviced at these new centres. MyTVS partnership will help in inaugurating eight more Nissan Authorised Service Points in Tamil Nadu. To know more, check here...
Story first published: Tuesday, June 28, 2016, 11:00 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark