செப்டம்பர் மாதத்தில் நிஸான் நிறுவனம் வழங்கும் சிறப்பான சலுகைகள்

Written By:

நிஸான் நிறுவனம், தசரா, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு இந்த செப்டம்பர் மாதத்தில் ஏராளமான சலுகைகளை அளிக்கின்றனர். பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள், இந்த பண்டிகை காலங்களின் போது புதிய அறிமுகங்களையோ அல்லது மேம்பாடுகள் செய்யப்பட்ட மாடல்களையோ அறிமுகம் செய்து வருகின்றனர்.

நிஸான் நிறுவனம் வழங்கும் சலுகைகள் குறித்த தகவல்களை இனி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

நவராத்திரி தள்ளுபடிகள்;

நவராத்திரி தள்ளுபடிகள்;

ஜப்பானை சேர்ந்த நிஸான் நிறுவனம், தீபாவளி மற்றும் தசரா அல்லது நவராத்திரி என அழைக்கப்படும் பண்டிகை காலங்களை ஒட்டி அளிக்கும் இந்த சலுகைகள், செப்டம்பர் 30-ஆம் தேதி வரை அளிக்கப்படும்.

சலுகைகள் கிடைக்கும் மாடல்கள்;

சலுகைகள் கிடைக்கும் மாடல்கள்;

இந்திய வாகன சந்தைகளில், நிஸான் நிறுவனம் வழங்கி வரும் நிஸான் மைக்ரா, டெரானோ, மைக்ரா ஆக்டிவ், சன்னி செடான் ஆகிய 4 மாடல்கள் மீது, பல்வேறு சலுகைகள் கிடைக்கிறது.

நிஸான் மைக்ரா;

நிஸான் மைக்ரா;

நிஸான் மைக்ரா மாடலை புக்கிங் செய்பவர்களுக்கு ஒரு தங்க நாணயம் இலவசமாக வழங்கப்படும். இந்த சலுகைகளை விவசாயிகள், டாக்டர்கள், கார்ப்பரேட் மற்றும் அரசு ஊழியர்கள் பெறலாம். மேலும், நிஸான் நிறுவனம், 40,000 மதிப்பிலான இலவச இன்சூரன்ஸ் மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனஸை பெறலாம். இதோடு மட்டுமல்லாது, விருப்பப்படும் வாடிக்கையாளர்கள், 8.99% வட்டி விகிதத்தில் கடன் வசதிகளை பெறலாம்.

டெரானோ;

டெரானோ;

செப்டம்பர் 30-ஆம் தேதி வரை அல்லது அதற்கு முன்பாக புக்கிங் செய்யப்படும் அனைத்து நிஸான் டெரானோ-வுக்கும் ஒரு தங்க நாணயம் இலவசமாக அளிக்கப்படும். மேலும், 40,000 மதிப்பிலான எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் இலவச இன்சூரன்ஸை பெறலாம். மேலும், ஃபைனான்ஸ் தேர்வுகளை நாடுபவர்களுக்கு 8.99% வட்டி விகிதத்தில் கடன் வசதிகள் கிடைக்கும்.

மைக்ரா ஆக்டிவ்;

மைக்ரா ஆக்டிவ்;

நிஸான் மைக்ரா ஆக்டிவ் மீது, வெவ்வேறு வடிவங்களில் 40,000 மதிப்பிலான சலுகைகள் கிடைக்கும். நிஸான் டீலர்ஷிப்கள், ஃபைனான்ஸ் தேர்வுகள் வேண்டுவோர்களுக்கு 8.99% வட்டி விகிதத்தில் கடன் வசதிகளை சுலபமான இஎம்ஐகளில் அளிக்கின்றனர்.

சன்னி செடான்;

சன்னி செடான்;

நிஸான் நிறுவனத்தின் சன்னி செடான், அதிகப்படியாக 70,000 ரூபாய் மதிப்பிலான ஆதாயங்களுடன் கிடைக்கிறது. ஃபைனான்ஸ் தேர்வுகள் வேண்டுவோர்களுக்கு, நிஸான் டீலர்ஷிப்கள், 8.99% வட்டி விகிதத்தில் கடன் வசதிகளை சுலபமான இஎம்ஐகளில் தருகின்றனர்.

துரதிர்ஷ்டவசமாக, சன்னி மற்றும் மைக்ரா ஆக்டிவ் மாடல்களுக்கு தங்க நாணயங்கள் அளிக்கப்படுவதில்லை.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

டாடா மோட்டார்ஸ் வழங்கும் 'ஹர் வீக் தீவாளி' சலுகைகள் அறிமுகம்

செப்டம்பரில் கார் மற்றும் டூ வீலர்கள் மீது அட்டகாசமான சலுகைகள்

செப்டம்பரில் செவர்லே கார்கள் மீது 1,00,000 ரூபாய் வரையிலான சலுகைகள்

மேலும்... #நிஸான் #nissan
English summary
Nissan India is offering special discounts and offers ahead of the 2016 Navratri festival. Overall, four Nissan models namely Micra, Terrano, Micra Active, Sunny sedan sold in India will be provided with benefits till September 30. Free insurance and an exchange bonus worth Rs. 40,000 are offered. Finance options are available at attractive interest rate of 8.99 percent. To know more, check here...
Story first published: Tuesday, September 20, 2016, 16:19 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more