நிஸான் நிறுவனத்தின் கார்கள் மீது ஏப்ரல் மாதத்தில் பிரத்யேக சலுகைகள்

Written By:

நிஸான் இந்தியா நிறுவனம் இந்தியாவில் வழங்கும் தேர்ந்தெடுக்கபட்ட மாடல்கள் மீது எக்ஸ்குளூசிவ் சலுகைகளை (ஆஃபர்கள்) வழங்குகிறது. இந்த ஏப்ரல் மாதத்தில் 3 மாடல்கள் மட்டுமே ஸ்பெஷல் தள்ளுபடிகளுடன் கிடைக்கிறது. அனைத்து சலுகைகளும், ஸ்கீம்களும் ஏப்ரல் 30, 2016 வரையோ அல்லது ஸ்டாக்குகள் தீரும் வரையோ கிடைக்கும் (எது முதலில் நிகழ்கிறதோ, அந்த முறையின் அடிப்படையில்).

நிஸான் நிறுவனம் வழங்கும் மைக்ரா, ஏப்ரல் மாதம் முழுவதும், 4.51 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் கிடைக்கும். மேலும், இந்த ஹேட்ச்பேக் மீது 55,000 ரூபாய் மதிப்பிலான ஸ்பெஷலான ஆதாயங்களும் வழங்கபடும். மேலும், நிஸான் ஷோரூம்கள், 8.99% என்ற ஈர்க்கும் வகையிலான வட்டி விகிதத்தில் ஃபைனான்ஸ் தேர்வுகளை வழங்குகின்றனர்.

nissan-india-offers-and-discounts-on-cars-2016-april-micra

நிஸான் நிறுவனம் வழங்கும் சன்னி, 7.91 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) ஆரம்ப விலையில் கிடைக்கும். மேலும், 70,000 ரூபாய் மதிப்புமிக்க ஆதாயங்கள் வழங்கபடுகிறது. கூடுதலாக, நிஸான் நிறுவன ஷோரூம்கள், 4,99% என்ற ஈர்க்கும் வகையிலான வட்டி விகிதத்தில் ஃபைனான்ஸ் தேர்வுகளை வழங்குகின்றனர். நிஸான் நிறுவனம் வழங்கும் இந்த ஆதாயங்களும், ஸ்கீம்களும் 2016 ஆண்டின் மாடல்கள் (MY16 - Model Year 2016) மீது மட்டும் வழங்கபடும்.

nissan-india-offers-and-discounts-on-cars-2016-april-sunny

நிஸான் நிறுவனம் வழங்கும் டெர்ரானோ காம்பேக்ட் எஸ்யூவி, ஏப்ரல் மாதத்தின் போது, 9.99 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) ஆரம்ப விலையில் இருந்து கிடைக்கும். மேலும், இந்த காம்பேக்ட் எஸ்யூவி மீது 75,000 ரூபாய் வரை மதிப்புமிக்க ஸ்பெஷலான ஆதாயங்களும் வழங்கபடும். 4.99% என்ற ஈர்க்கும் வகையிலான வட்டி விகிதத்தில் ஃபைனான்ஸ் தேர்வுகளை நிஸான் ஷோரூம்கள் வழங்குகின்றன.

nissan-india-offers-and-discounts-on-cars-2016-april-terrano

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவின் போது, நிஸான் நிறுவனம் ஏராளமான புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்தனர். நிஸானின் ஜிடி-ஆர் மற்றும் எக்ஸ்-ட்ரெயில் ஹைப்ரிட் ஆகிய மாடல்களும் அறிமுகம் செய்யபட்டது. இந்த தருனத்தில், நிஸான் நிறுவனம் டெர்ரானோ மற்றும் மைக்ரா மாடல்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கபட்ட வேறு சில ஸ்பெஷல் எடிஷன் மாடல்களையும் காட்சிபடுத்தியது.

English summary
Nissan India is presenting exclusive offers on select models offered in India. For month of April 2016, Nissan will offer only three models with special discounts. All offers and schemes are available till stocks last or till April 30, 2016, whichever is earlier. Special benefits worth up to Rs. 75,000 are provided. Nissan dealerships are providing attractive finance options also...
Story first published: Wednesday, April 13, 2016, 10:59 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark