பார்த்தாலே கிக் ஏறும் நிசான் கிக்ஸ்... இந்தியர்களின் ஆவலைத் தூண்டியிருக்கும் புதிய எஸ்யூவி!

Written By:

எஸ்யூவி ரக கார்களுக்கு இந்தியர்கள் அளித்து வரும் ஆதரவு அபரிதமானது. இதனை மனதில்கொண்டு புதிய எஸ்யூவி மாடல்கள் தொடர்ந்து வந்து கொணடிருக்கின்றன. ரெனோ நிறுவனம் கேப்டூர் என்ற புதிய எஸ்யூவி மாடலை களமிறக்க திட்டமிட்டிருக்கும் நிலையில், அதன் கூட்டாளியான நிசான் நிறுவனமும் தன் பங்கிற்கு கிக்ஸ் என்ற புதிய எஸ்யூவி மாடலை இந்தியாவில் களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிகச்சிறப்பான வடிவமைப்புடன் கூடிய இந்த எஸ்யூவி மாடல் வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் என்பதோடு, நல்ல வரவேற்பையும் பெறும் வாய்ப்புள்ளது. ஏனெனில், சிறந்த டிசைன் கொண்ட கார் மாடல்களுக்கு இந்தியர்கள் எப்போதுமே அதிக முன்னுரிமை கொடுப்பது ரெனோ க்விட், ஹூண்டாய் க்ரெட்டா உள்ளிட்ட மாடல்கள் மூலமாக புலனாகிறது. சரி, இந்த புதிய நிசான் கிக்ஸ் எஸ்யூவியின் சில படங்களையும், தகவல்களையும் பார்த்துவிடலாம்.

கான்செப்ட் மாடல்

கான்செப்ட் மாடல்

கடந்த 2014ம் ஆண்டு பிரேசில் நாட்டின் சாவ் பாவ்லோ நகரில் நடந்த வாகன கண்காட்சியில்தான் இந்த கிக்ஸ் கான்செப்ட் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போதே, இதன் டிசைன் பலருக்கு கிக் ஏற்றியதுடன், இதன் தயாரிப்பு நிலை மாடல் எப்போது வரும் என்று ஆவலைத் தூண்டியது.

 பிரேசிலில் அறிமுகம்

பிரேசிலில் அறிமுகம்

பிரேசில் நாட்டின் ரியோடி ஜெனிரோ நகரில் நடந்த நிகழ்வில் இந்த புதிய எஸ்யூவியின் தயாரிப்பு நிலை மாடலை நிசான் அறிமுகம் செய்தது. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அங்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. மேலும், உலகின் 80 நாடுகளில் இந்த புதிய எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட உள்ளது. எனவே, இந்தியாவிலும் நிச்சயம் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிளாட்ஃபார்ம்

பிளாட்ஃபார்ம்

நிசான் நிறுவனத்தின் V- Platform-ல் இந்த புதிய எஸ்யூவி உருவாக்கப்பட்டிருக்கிறது. இதே பிளாட்ஃபார்மில்தான் நிசான் மைக்ரா மற்றும் நிசான் சன்னி கார்கள் உருவாக்கப்பட்டன.

 மினி எஸ்யூவி

மினி எஸ்யூவி

இந்த எஸ்யூவி 4,295மிமீ நீளமும், 1,760மிமீ உயரமும், 2,610மிமீ வீல் பேஸ் கொண்டதாக இருக்கிறது. ஆனால், இந்த எஸ்யூவி இந்தியா வரும்போது 4 மீட்டருக்கும் குறைவான மாடலாக வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலமாக, வரிச்சலுகை பெற்று, மிக சவாலான விலையில் நிலைநிறுத்த நிசான் திட்டம் போட்டுள்ளது.

இன்டீரியர்

இன்டீரியர்

பிரேசிலில் அறிமுகமாக இருக்கும் மாடலின் டாப் வேரியண்ட்டில் கருப்பு வண்ண இன்டீரியர் தீம் பயன்படுத்தப்படும். தவிர, 7 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், தட்டையான அடிப்பாகம் கொண்ட ஸ்டீயரிங் வீல், ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி, அனலாக் ஸ்பீடோமீட்டர் மற்றும் வண்ண மின்னணு திரை கொண்டதாக அமைந்திருக்கும் மீட்டர் கன்சோல் ஆகியவை முக்கியமானதாக இருக்கும்.

எஞ்சின்

எஞ்சின்

நிசான் கிக்ஸ் எஸ்யூவியில் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் கொண்டதாக பிரேசில் நாட்டில் விற்பனைக்கு வருகிறது. அதிகபட்சமாக 105 பிஎச்பி முதல் 110 பிஎச்பி பவரை அளிக்கும் வல்லமை கொண்டதாக இருக்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது சிவிடி கியர்பாக்ஸ் மாடல்களில் வருகிறது. இந்தியாவில் பெட்ரோல் மட்டுமின்றி, 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மாடலிலும் எதிர்பார்க்கலாம்.

மைலேஜ்

மைலேஜ்

பிரேசிலில் விற்பனைக்கு வரும் புதிய நிசான் கிக்ஸ் எஸ்யூவியின் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் லிட்டருக்கு 13.7 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவிற்கு எப்போது?

இந்தியாவிற்கு எப்போது?

அடுத்த ஆண்டு இரண்டாம் பாதியில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. ஆனால், நிசான் நிறுவனம் இந்த எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவது குறித்து இன்னமும் உறுதி செய்யவில்லை.

எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

ரூ.7.50 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் நிசான் கிக்ஸ் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புள்ளது.

போட்டியாளர்கள்

போட்டியாளர்கள்

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், மாருதி விட்டாரா பிரெஸ்ஸா மாடல்களுக்கு நேரடியாகவும், சிறப்பம்சங்களில் ரெனோ டஸ்ட்டர், ஹூண்டாய் க்ரெட்டா மாடல்களுக்கு போட்டியை தரும்.

 
English summary
Nissan Kicks Compact SUV Might Come to India.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark