நிஸானின் புதிய கிராஸ்ஓவர் மாடலான கிக்ஸ், 2016 ரியோ ஒலிம்பிக்ஸ்ஸின் போது அறிமுகம்

Written By:

நிஸான் நிறுவனம் தயாரிக்கும் புதிய கிராஸ்ஓவர் மாடலான கிக்ஸ், 2016 ரியோ ஒலிம்பிக்ஸ்ஸின் போது அறிமுகம் செய்யபட உள்ளதாக அறிவிக்கபட்டுள்ளது.

புதிய கிராஸ்ஓவர் மாடலான கிக்ஸ் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்வோம்.

நிஸான் கிக்ஸ் பற்றி...

நிஸான் கிக்ஸ் பற்றி...

கிக்ஸ் என்ற பெயர் கொண்ட கிராஸ்ஓவர் மாடல் தான், நிஸான் நிறுவனம் சார்பாக அறிமுகம் செய்யபட உள்ள மாடல் ஆகும்.

இதன் சோதனைகள், நிஸான் நோட் மாடலின் உடற்கூடு பயன்படுத்தி செய்யபட்டது.

வி பிளாட்ஃபார்ம்;

வி பிளாட்ஃபார்ம்;

புதிய கிராஸ்ஓவர் மாடலான கிக்ஸ், நிஸானின் வி பிளாட்ஃபார்ம், அடிப்படையில் கட்டமைக்கபட்டுள்ளது.

இந்த வி பிளாட்ஃபார்மை அடிப்படையாக கொண்டு தான், நிஸானின் மைக்ரா மற்றும் சன்னி ஆகிய மாடல்கள் உருவாக்கபட்டுள்ளது.

வகைபடுத்தல்;

வகைபடுத்தல்;

நிஸானின் கிக்ஸ், நிஸான் நிறுவனத்தின் மாடல்களின் வரிசையில் ஜூக் கிராஸ்ஓவர் மாடலுக்கு கீழே வகைபடுத்தபட்டுள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

நிஸானின் கிக்ஸ், 1.6 லிட்டர் ஃப்ளெக்ஸ்-ஃப்யூவல் இஞ்ஜின் கொண்டுள்ளது. இது பெட்ரோல் மற்றும் 20-25% எத்தனால் கலவையிலான எரிபொருட்களுடன் இயங்கும் திறன் கொண்டுள்ளது.

இஞ்ஜினின் உற்பத்தி;

இஞ்ஜினின் உற்பத்தி;

நிஸான் கிக்ஸ் கிராஸ்ஓவர் மாடலின் இஞ்ஜின், பிரேசிலின் தலைநகரான ரியோ டி ஜெனிரோவில் உருவாக்கபடுகிறது.

சோதனை ஓட்டங்கள்;

சோதனை ஓட்டங்கள்;

தயாரிப்பு நிலையிலான நிஸான் கிக்ஸ் கிராஸ்ஓவர் மாடலின் சோதனை ஓட்டங்கள் பிரேசிலில் மேற்கொள்ளபட்டது.

தயாரிப்புக்கு தயாராக உள்ள கார்களின் உடற்பாகங்கள் உருமறைப்பு செய்யபட்ட நிலையில், பிரேசிலில் இதன் சோதனைகள் மேற்கொள்ளபட்டது.

அறிமுகம்;

அறிமுகம்;

நிஸான் கிக்ஸ் கிராஸ்ஓவர் மாடலின் உலகளாவிய அறிமுகம், இந்த ஆண்டு மே மாதத்தில் நடைபெறும் 2016 ரியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டுகளின் போது, நிகழ்த்தபட உள்ளது.

கிக்ஸ் உற்பத்தி;

கிக்ஸ் உற்பத்தி;

நிஸான் கிக்ஸ் கிராஸ்ஓவர் மாடலின் முதல் தொகுப்புகளின் உற்பத்தி, மெக்சிகோவில் உள்ள நிஸான் நிறுவனத்தின் அகுவாஸ்கேலியண்டெஸ் கார் உற்பத்தி மேற்கொள்ளபடுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

நிஸான் எக்ஸ் ட்ரெயில் ஹைப்ரிட் எஸ்யூவி, மீண்டும் இந்தியா வருகிறது

நிஸான் ஜிடி-ஆர் சூப்பர் கார், இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்?

நிஸான் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
Nissan Kicks launch is confirmed to be done during the 2016 Rio Olympic Games. Nissan Kicks will be based on Nissan's same V-platform, which is used in the cars like Micra and Sunny. Kicks is categorized below the Juke crossover in Nissan's Line-up. Nissan Kicks is to be manufactured at Nissan's Aguascalientes facility in Mexico. To know more about Nissan Kicks crossover, check here...
Story first published: Friday, March 11, 2016, 13:39 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark