இந்தியாவின் முதல் ஹைப்ரிட் எஸ்யூவி - நிஸான் எக்ஸ் ட்ரெயில், விரைவில் அறிமுகம்

Written By:

நிஸான் நிறுவனம், இந்தியாவின் முழு முதல் ஹைப்ரிட் எஸ்யூவியான எக்ஸ் ட்ரெயில் மாடலை, இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகம் செய்ய உள்ளனர்.

நிஸான் எக்ஸ் ட்ரெயில் ஹைப்ரிட் எஸ்யூவி குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

நிஸான் எக்ஸ் ட்ரெயில்...

நிஸான் எக்ஸ் ட்ரெயில்...

ஜப்பானை மையமாக கொண்டு இயங்கும் நிஸான் நிறுவனம், இந்தியாவின் முழு முதல் ஹைப்ரிட் எஸ்யூவியை விரைவில், இந்திய வாகன சந்தைகளில் அறிமுகம் செய்வதற்கு முழு முனைப்புடன் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

விற்கப்பட உள்ள விதம்;

விற்கப்பட உள்ள விதம்;

நிஸான் எக்ஸ் ட்ரெயில் ஹைப்ரிட் எஸ்யூவி, இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் போது, சிபியூ அல்லது கம்ப்ளீட்லி பில்ட் யூனிட் எனப்படும் முழுவதுமாக கட்டி முடிக்கப்பட்ட வடிவிலேயே விற்கப்படும்.

இது ஜாப்பனில் தயாரிக்கபட்டு, இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யப்பட உள்ளது.

நிஸான் எக்ஸ் ட்ரெயில் ஹைப்ரிட், அமெரிக்காவில் மிகவும் புகழ்பெற்ற மாடலாக விளங்குகிறது.

இந்தியாவிற்கான மாடல்;

இந்தியாவிற்கான மாடல்;

இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள நிஸான் எக்ஸ் ட்ரெயில் ஹைப்ரிட் எஸ்யூவி, டீசல் அடிப்படையாக கொண்ட மாடலாக அல்லாமல், பெட்ரோல்-ஹைப்ரிட் கூட்டு கொண்ட ஹைப்ரிட் மாடலாக இருக்கும்.

5-சீட்டர்;

5-சீட்டர்;

நிஸான் எக்ஸ் ட்ரெயில் ஹைப்ரிட் எஸ்யூவி, முந்தைய மாடலை காட்டிலும் அதிக நீளம் கொண்டதாக இருக்கும்.

எனினும், இது 5-சீட்டர் லே அவுட் உடனேயே வழங்கப்படும்.

எக்ஸ்டீரியர்;

எக்ஸ்டீரியர்;

வெளிப்புற தோற்றம் (எக்ஸ்டீரியர்) படி, நிஸான் எக்ஸ் ட்ரெயில் ஹைப்ரிட் எஸ்யூவி, நவீன தோற்றம் கொண்டுள்ளதாகவும், அதிக அளவிலான குறிப்புகளுடனும் (detailing) கொண்டுள்ளது.

இது ஹைப்ரிட் மாடல் என்பதை குறிக்கும் வகையில், ஒரு பிரத்யேகமான பேட்ஜ் கொண்டுள்ளது.

இன்டீரியர்;

இன்டீரியர்;

உட்புற அமைப்பு (இன்டீரியர்) படி, நிஸான் எக்ஸ் ட்ரெயில் ஹைப்ரிட் எஸ்யூவியின் உள்ளே உள்ள தேஷ்போர்ட் டிரைவரை நோக்கியவாறு அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், வி ('V') வடிவத்திலான சென்டர் கன்சோல், இந்த காருக்கு பிரிமியம் தன்மையை வழங்கும் வகையில் உள்ளது.

பின் பகுதியில் அமர்ந்து இருக்கும் பயணியர்களுக்கு சொகுசான உணர்வு வழங்கும் வகையில், இது அதிக இட வசதி உடைய லெக் ஸ்பேஸ் மற்றும் ஹெட்ரூம் கொண்டுள்ளது.

சிறப்பு அம்சங்கள்;

சிறப்பு அம்சங்கள்;

நிஸான் எக்ஸ் ட்ரெயில் ஹைப்ரிட் எஸ்யூவியின் டச் ஸ்கிரீனில் 360-டிகிரி வியூ மானிட்டர் உள்ளது. இது, இந்த எஸ்யூவியை சுற்றி பர்ட்ஸ்-ஐ வியூ எனப்படும் பறவையின் கண்ணோட்டத்தை வழங்குகிறது. இது வாகனத்தை பார்க்கிங் செய்ய உதவிகரமாக உள்ளது.

மேலும், நிஸான் எக்ஸ் ட்ரெயில் ஹைப்ரிட் எஸ்யூவியில், ஆக்டிவ் இஞ்ஜின் பிரேக்கிங், ஆக்டிவ் டிராக்ஷன் மற்றும் ரைட் கண்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் மற்றும் வெஹிகிள் டைனமிக் கண்ட்ரோல் உள்ளிட்ட ஏராளமான சிறப்பு அம்சங்கள் கொண்டுள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

நிஸான் எக்ஸ் ட்ரெயில் ஹைப்ரிட் எஸ்யூவி, 2.0 லிட்டர் பெட்ரோல் ஹைப்ரிட் இஞ்ஜின் மற்றும் அத்துடன் இணைக்கப்பட்ட 31 kw எலக்ட்ரிக் மோட்டார் கொண்டுள்ளது.

இதில், பெட்ரோல் இஞ்ஜின் 114.9 பிஹெச்பியையும், 31 kw எலக்ட்ரிக் மோட்டார் 40.3 பிஹெச்பியையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

நிஸான் எக்ஸ் ட்ரெயில் ஹைப்ரிட் எஸ்யூவியின் ஹைப்ரிட் இஞ்ஜின், ட்யூவல்-கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

அறிமுகம்;

அறிமுகம்;

நிஸான் எக்ஸ் ட்ரெயில் ஹைப்ரிட் எஸ்யூவி, இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டி;

போட்டி;

நிஸான் எக்ஸ் ட்ரெயில் ஹைப்ரிட் எஸ்யூவிக்கு இந்தியாவில் எந்த மாடலும் போட்டியாக இல்லை.

இதற்கு காரணம், நிஸான் எக்ஸ் ட்ரெயில் தான், இந்தியாவின் முதல் ஹைப்ரிட் எஸ்யூவியாக இருக்கும்.

விலை;

விலை;

நிஸான் எக்ஸ் ட்ரெயில் ஹைப்ரிட் எஸ்யூவி, சுமார் 30 லட்சம் ரூபாய் விலையில், இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இறுதி கருத்து;

இறுதி கருத்து;

இந்தியாவில், புவி வெப்பமயமாதல் மற்றும் டீசல் இஞ்ஜின் கார்களின் தடை தீவிரம் அடைந்து வரும் நிலையில், நிஸான் எக்ஸ் ட்ரெயில் ஹைப்ரிட் எஸ்யூவியின் மிக பொருத்தமான தேர்வாக உள்ளது.

இந்திய வாகன சந்தைகளில், நிஸான் எக்ஸ் ட்ரெயில் ஹைப்ரிட் எஸ்யூவி தான் இந்த செக்மென்ட்டில், பிரவேசம் செய்யும் முதல் மாடலாக இருக்கும்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

நிஸான் எக்ஸ் ட்ரெயில் ஹைப்ரிட் எஸ்யூவி, மீண்டும் இந்தியா வருகிறது

நிசான் எக்ஸ் ட்ரெயில் எஸ்யூவியின் புதிய தலைமுறை மாடல் இந்தியா வருகிறது!

எக்ஸ் ட்ரெயில் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
Nissan is set to launch India's first fully hybrid Sports Utility Vehicle - Nissan X-Trail Hybrid SUV. This would be launched by end of 2016. The X-Trail will be sold under CBU (Completely Built Unit) option and will be imported from Japan. India may get petrol-hybrid combination rather than diesel power unit. It will be offered in 5-seater layout only. To know more, check here...
Story first published: Thursday, June 9, 2016, 13:49 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark