நிஸானின் புதிய மைக்ரா சிவிடி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

Written By:

நிஸானின் புதிய மைக்ரா சிவிடி ஹேட்ச்பேக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஜப்பானை சேர்ந்த நிஸான் நிறுவனம் தான், சிவிடி எனப்படும் கண்டிநியுவஸ்லி வேரியபிள் டிரான்ஸ்மிஷன் வசதி உடைய புதிய நிஸான் மைக்ரா சிவிடி மாடலை தயாரித்து வழங்குகிறது.

நிஸானின் புதிய மைக்ரா சிவிடி ஹேட்ச்பேக்கில் சில மேம்பாடுகள் செய்யப்பட்து வழங்கப்படுகிறது. புதிய மைக்ரா சிவிடி தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

புதிய வண்ணம்;

புதிய வண்ணம்;

நிஸானின் புதிய மைக்ரா சிவிடி ஹேட்ச்பேக், சன்ஷைன் ஆரஞ்ச் பாடி நிறத்துடன் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும், இதன் இன்டீரியர், முழுமையான பிளாக் நிறத்தில் உள்ளது.

அறிமுகம்;

அறிமுகம்;

முன்பு குறிப்பிட்டது போல், இந்த 2 மேம்பாடுகளும் கொண்ட புதிய மைக்ரா சிவிடி ஹேட்ச்பேக், இந்தியா முழுவதிலும் விற்பனைக்கு கிடைக்கிறது. வெகு விரைவில் தீபாவளி மற்றும் தசரா போன்ற பல பண்டிகைகள் நெருங்கி வருகிறது. இந்நிலையில் சன்ஷைன் ஆரஞ்ச் நிறத்திலான நிஸானின் புதிய மைக்ரா சிவிடி அறிமுகம் செய்யபட்டது சிறப்பான விஷயமாகும்.

மைக்ரா ஆக்டிவ்;

மைக்ரா ஆக்டிவ்;

தற்போது, நிஸானின் மைக்ரா ஆக்டிவ் மாடலும் சன்ஷைன் ஆரஞ்ச் எக்ஸ்டீரியர் மற்றும் பிளாக் இன்டீரியர் வண்ணத்தில் கிடைக்கும். இதன் பிளாக் இன்டீரியர், பிரிமியம் மற்றும் ஸ்போர்ட்டியான தோற்றத்தை அளிக்கிறது. மேலும், இதன் இன்டீரியர், ஐரோப்பிய சந்தைகளுக்கான மைக்ரா ஆக்டிவ் மாடலின் இன்டீரியர் போல் அமைந்துள்ளது.

ஏன் சன்ஷைன் ஆரஞ்ச்?

ஏன் சன்ஷைன் ஆரஞ்ச்?

சன்ஷைன் ஆரஞ்ச் நிறமானது, இந்தியாவின் பண்டிகைகளின் கொண்டாட்டங்களை குறிக்கும் வகையில் அமைந்துள்ளது. சன்ஷைன் ஆரஞ்ச் வண்ணம் கொண்ட இந்த மாடலானது சரியாக பண்டிகை காலங்களின் போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மைக்ரா - இன்டீரியர்;

மைக்ரா - இன்டீரியர்;

புதிய மைக்ரா சிவிடி ஹேட்ச்பேக்கின் இன்டீரியர் முழுவதற்கும் பிளாக் நிறம் வழங்கபட்டுள்ளது. மேலும், பியானோ பிளாக் ஃபினிஷ் உடைய பிளாக் செண்டர் கன்சோல், பிளாக் டோர் ட்ரிம்கள், புளு தையல் வேலைப்பாடுகள் உடைய பிளாக் சீட் ஃபேப்ரிக் உள்ளிட்ட அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

மைக்ரா ஆக்டிவ் - இன்டீரியர்;

மைக்ரா ஆக்டிவ் - இன்டீரியர்;

மறுபுறத்தில், மைக்ரா ஆக்டிவ் மாடலில், புதிய இன்ஸ்ட்ரூமென்ட் பேனல் கிளஸ்டர் மற்றும் ஃபினிஷர், பிளாக் சீட் ஃபேப்ரிக் மற்றும் சில்வர் ஆரம் ரெஸ்ட் உள்ளிட்ட அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

பிற வண்ண தேர்வுகள்;

பிற வண்ண தேர்வுகள்;

முன்பு குறிப்பிட்ட நிறங்களை தவிர்த்து, நிஸான் மைக்ரா, பிரிக் ரெட், பிளேட் சில்வர், நைட்ஷேட், ஸ்டார்ம் வைட் மற்றும் டர்காய்ஸ் புளு ஆகிய 5 நிறங்களில் கிடைக்கிறது.

விலை;

விலை;

நிஸானின் புதிய மைக்ரா ஹேட்ச்பேக்கின் பேஸ் வேரியன்ட் எனப்படும் அடிப்படை வேரியன்ட் 4.55 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் கிடைக்கும்.

நிஸானின் புதிய மைக்ரா சிவிடி ஹேட்ச்பேக், 5.99 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் கிடைக்கும்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

நிஸான் மைக்ரா எக்ஸ்-ட்ரானிக் சிவிடி ஹேட்ச்பேக்கின் விலை அதிரடியாக குறைப்பு

புதிய தலைமுறை சிவிடி கியர்பாக்ஸுடன் நிசான் மைக்ரா கார்.. ஃபர்ஸ்ட் டிரைவ் அனுபவம்!

நிசான் சிவிடி டிரான்ஸ்மிஷனின் நன்மைகள் என்னென்ன?!

மேலும்... #நிஸான் #nissan
English summary
Nissan India has launched their all-new Micra CVT with several interesting updates ahead of Diwali, Dasara Festivities. An all-new Sunshine Orange body colour has been included for Nissan Micra hatchback. Its interior is now available in an all-black paint scheme. New colour option from Nissan symbolises the colour of Indian festivals. To know more, check here...
Story first published: Wednesday, September 7, 2016, 16:39 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark