ஏஎம்டி உடைய நிஸான் டெரானோ எஸ்யூவியின் புக்கிங் துவங்கியது

Written By:

நிஸான் இந்தியா நிறுவனம், ஏஎம்டி எனப்படும் ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடைய தங்களின் டெரானோ எஸ்யூவியின் புக்கிங்கை இந்தியாவில் ஏற்க துவங்கிவிட்டனர். இந்தியாவில் தசரா மற்றும் தீபாவளி ஆகிய பண்டிகை காலங்கள் துவங்கிவிட்டது. ஏறக்குறைய அனைத்து நிறுவனங்களும் ஏதாவது புதிய தயாரிப்பை அறிமுகம் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

ஏஎம்டி உடைய நிஸான் டெரானோ எஸ்யூவி தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

புக்கிங் துவக்கம்;

புக்கிங் துவக்கம்;

நிஸான் இந்தியா நிறுவனம், தங்களின் டெரானோ எஸ்யூவியின் புக்கிங்கினை தங்களின் அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப்கள் மூலம் துவக்கியுள்ளனர். வாடிக்கையாளர்கள் இந்த டெரானோ எஸ்யூவியை, 25,000 ரூபாய் என்ற டோக்கன் புக்கிங் கட்டணம் செலுத்தி புக்கிங் செய்து கொள்ளலாம்.

டெலிவரி;

டெலிவரி;

ஏஎம்டி உடைய நிஸான் டெரானோ எஸ்யூவியின் டெலிவரி, இந்தியா முழுவதும் அக்டோபர் மாத இறுதி முதல் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை;

விலை;

ஜப்பானை சேர்ந்த நிஸான் நிறுவனம், ஏஎம்டி உடைய நிஸான் டெரானோ எஸ்யூவியின் விலை விவரங்களை இதுவரை வெளியிடவில்லை. எனினும், இதன் தோராயமான விலை விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. ஏஎம்டி உடைய நிஸான் டெரானோ எஸ்யூவி, 13.75 லட்சம் ரூபாய் முதல் 13.85 லட்சம் ரூபாய் வரையிலான எக்ஸ்-ஷோரூம் டெல்லி விலையில் விற்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடிப்படை;

அடிப்படை;

ஏஎம்டி உடைய நிஸான் டெரானோ எஸ்யூவி, எக்ஸ்விடி பிரிமியம் வேரியன்ட்டை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

நிஸான் டெரானோ ஏஎம்டி மாடல், 4 சிலிண்டர்கள் உடைய 1.5 லிட்டர் இஞ்ஜின் கொண்டிருக்கும். இந்த இஞ்ஜின், 108.50 பிஹெச்பியையும், 248 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாக இருக்கும்.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

நிஸான் டெரானோ ஏஎம்டி மாடலின் இஞ்ஜின், 6-ஸ்பீட் அட்வான்ஸ்ட் ஆட்டோ டிரைவ் சிஸ்டம் கொண்டுள்ளது. இது எளிமையான டிரைவிங்கிற்கு உதவுகிறது.

மைலேஜ்;

மைலேஜ்;

ஆராய அமைப்பின் ஒப்புதல் படி, நிஸான் டெரானோ ஏஎம்டி மாடல், ஒரு லிட்டருக்கு 19.61 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது.

சிறப்பு அம்சங்கள்;

சிறப்பு அம்சங்கள்;

நிஸான் டெரானோ ஏஎம்டி மாடலில், நிஸான் நிறுவனம் ஹில் அசிஸ்ட் கண்ட்ரோல், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம் உள்ளிட்ட அம்சங்களை சேர்த்துள்ளது. சேன்ட்ஸ்டோன் நிற தேர்வில் கிடைக்க உள்ள நிஸான் டெரானோ ஏஎம்டி மாடலில், நிஸான் நிறுவனம் சுமார் 14 புதிய அம்சங்களை சேர்த்துள்ளனர்.

மேலும்... #நிஸான் #nissan
English summary
Nissan India has started accepting bookings for their Terrano AMT through its authorised dealerships. It is based on their XVD Premium variant. Customers may get their Booking done by paying token amount of Rs. 25,000 for Terrano AMT. Deliveries of Terrano AMT is expected to begin pan India by October-end. Terrano AMT will mileage of 19.61 km/l. To know more, check here...
Story first published: Saturday, October 8, 2016, 7:03 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos