ஜான் ஆப்ரஹாமுடன் நிஸான் டெரானோ டிரைவ் செய்ய விருப்பமா?

Written By:

நிஸான் நிறுவனம் பாலிவுட் ஸ்டார் ஜான் ஆப்ரஹாமுடன் நிஸான் டெரானோ எஸ்யூவி டிரைவ் செய்ய அரிய வாய்ப்பு அளிக்கிறது.

நிஸான் நிறுவனம் வழங்கும் இந்த அரிய வாய்ப்பு குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

ஜான் ஆப்ரஹாம்...

ஜான் ஆப்ரஹாம்...

ஜான் ஆப்ரஹாம், பாலிவுட் சினிமா உலகில் முன்னோடி நடிகர்களில் ஒருவராக உள்ளார். இவர் தனது ஃபிட்டான தோற்றத்திற்கும், அதிரடி ஆக்ஷன் படங்களில் நடித்ததற்கும் புகழ் பெற்றவர்.

முன்னாள் மாடலாக இருந்த ஜான் ஆப்ரஹாம், தூம், ஃபோர்ஸ், தேசி பாய்ஸ், ஹவுஸ்ஃபுல் மற்றும் டிஷூம் போன்ற எக்கச்சக்கமான படங்களில் நடித்துள்ளார்.

ஜான் ஆப்ரஹாமுடன் டிரைவ்;

ஜான் ஆப்ரஹாமுடன் டிரைவ்;

ஜப்பானை மையமாக கொண்டு இயங்கும் நிஸான் நிறுவனம், பாலிவுட் ஸ்டார் ஜான் ஆப்ரஹாமை, இந்திய வாகன சந்தைகளுக்கு பிரான்ட் அம்பாஸிடராக நியமித்தது.

தற்போது, நிஸான் நிறுவனம் ஜான் ஆப்ரஹாமுடன் நிஸான் டெரானோ எஸ்யூவி டிரைவ் செய்ய அரிய வாய்ப்பு வழங்குகிறது.

இது நிச்சயமாக பலருக்கு தங்கள் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.

என்ன செய்ய வேண்டும்?

என்ன செய்ய வேண்டும்?

நிஸான் நிறுவனம், தேர்ந்தெடுக்கப்படும் அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே ஜான் ஆப்ரஹாமுடன் நிஸான் டெரானோ எஸ்யூவி டிரைவ் செய்ய அரிய வாய்ப்பினை வழங்க உள்ளது.

இதற்கு, நிஸான் நிறுவனம், வாடிக்கையாளர்களை நிஸான் டெரானோ எஸ்யூவியை டெஸ்ட் டிரைவ் செய்யுமாறு கேட்டு கொண்டுள்ளது.

மேலும், நிஸான் நிறுவனம், டிசைன்ட் ஃபார் டாமினேஷன் ('Designed for Domination') என்ற பெயரில் புதிய பிரச்சார நடவடிக்கையை துவங்கியுள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

நிஸான் டெரானோ எஸ்யூவி, ஒரே ஒரு 1.5 லிட்டர் டீசல் இஞ்ஜின் தேர்வில் மட்டுமே வழங்குகிறது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

நிஸான் டெரானோ எஸ்யூவி, 5-ஸ்பீட் மேனுவல் மற்றும் 6-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வுகளுடன் கிடைக்கிறது.

செயல்திறன்;

செயல்திறன்;

நிஸான் டெரானோ எஸ்யூவியின் டீசல் இஞ்ஜின், 2 விதமான டியூனிங் தேர்வுகளில் கிடைக்கிறது.

முதல் டியூனிங்கில், நிஸான் டெரானோ எஸ்யூவியின் 1.5 லிட்டர் டீசல் இஞ்ஜின், 85 பிஹெச்பியையும், 200 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது.

இரண்டாம் டியூனிங்கில், இந்த 1.5 லிட்டர் டீசல் இஞ்ஜின், 108 பிஹெச்பியையும், 248 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது.

விலை;

விலை;

நிஸான் டெரானோ எஸ்யூவியின் பேஸ் வேரியன்ட் எனப்படும் அடிப்படை வேரியன்ட், 9.99 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஃபைனான்ஸ் தேர்வுகள்;

ஃபைனான்ஸ் தேர்வுகள்;

நிஸான் நிறுவனம், இந்த நிஸான் டெரானோ எஸ்யூவியினை ஈர்க்கும் வகையிலான ஃபைனான்ஸ் தேர்வுகளுடன் வழங்குகின்றனர்.

வாடிக்கையாளர்கள், இந்த நிஸான் டெரானோவை 5.99% வட்டி விகிதத்துடன் பெற்று கொள்ளலாம்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

நிசான் டெரானோ எஸ்யூவியின் லிமிடேட் எடிசன் அறிமுகம் - முழு விபரம்

டெரானோ தொடர்புடைய செய்திகள்

நிஸான் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

நிஸான் டெரானோ எஸ்யூவி - கூடுதல் படங்கள்

நிஸான் டெரானோ எஸ்யூவி - கூடுதல் படங்கள்

நிஸான் டெரானோ எஸ்யூவி - கூடுதல் படங்கள்

நிஸான் டெரானோ எஸ்யூவி - கூடுதல் படங்கள்

நிஸான் டெரானோ எஸ்யூவி - கூடுதல் படங்கள்

நிஸான் டெரானோ எஸ்யூவி - கூடுதல் படங்கள்

English summary
Nissan Terrano is offering its Customers, Special Drive with Bollywood Star John Abraham. Nissan previously announced that, Bollywood actor John Abraham would be their Brand Ambassador. Japan-based manufacturer offers its customers, once in a lifetime experience. Nissan India is asking potential buyers to test drive Terrano for chance to meet John Abraham. To know more, check here...
Story first published: Thursday, July 28, 2016, 11:45 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark