புதிய தலைமுறை நிசான் மைக்ரா கார் இந்தியாவில் உற்பத்தி கிடையாது?

By Meena

நிஸான் மைக்ரா மாடல் கார் இந்தியாவில் ஓரளவு விற்பனையாகும் மாடல்களில் ஒன்று. அதன் மேம்படுத்தப்பட்ட மாடல் விரைவில் அறிமுகமாகலாம் என்று எதிர்பார்ப்பு நிலவி வந்தது. சென்னை, ஒரகடத்தில் இருக்கும் ரெனால்ட் - நிஸான் கார் உற்பத்தி ஆலையில் புதிய மாடல் மைக்ரா தயாரிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகின.

இப்போது அந்த ஆருடங்களை எல்லாம் பொய்யாக்கும் வகையில் புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, புதிய மைக்ரா காரை இந்தியாவில் உற்பத்தி செய்யும் திட்டம் எதுவும் அந்நிறுவனத்துக்கு இல்லையாம்.

நிசான் மைக்ரா

சென்னை அருகே ஒரகடத்தில் உள்ள ஆலையில்தான் புதிய மைக்ரா மாடல் உற்பத்தியாகும் என்று கசிந்த தகவல் உண்மை இல்லை என்று கூறி இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது நிஸான்.

அதேவேளையில் பிரான்ஸின் பாரீஸ் நகரில் நிகழாண்டில் நடைபெறவுள்ள மோட்டார் ஷோவில் புதிய மைக்ரா மாடலை காட்சிப்படுத்தப் போகிறார்களாம். அதைத் தொடர்ந்து, அந்த மாடல் கார்களை பாரீஸில் உள்ள நிஸான் ஆலையில் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

நிஸான் ஸ்வே மாடலை அடிப்படையாகக் கொண்டு அடுத்த தலைமுறை மைக்ரோ கார் வடிவமைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தற்போது உள்ள மைக்ரா மாடலின் உள்புற வடிவமைப்பு மற்றும் வெளிப்புறத் தோற்றம் போல அல்லாமல், அவற்றில் பல மாறுதல்களை உருவாக்கத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

அதனால், புதிய மாடல் பக்கா ஸ்டைலாகவும், தொழில்நுட்பத்தில் மேம்பட்டதாகவும் இருக்கும் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், மைக்ரா காரின் உற்பத்தி செலவ மிக அதிகமாக இருக்கும் என்பதால், இந்தியாவில் உற்பத்தியை தவிர்க்கவும், அறிமுகத்தை தாமதப்படுத்தும் எண்ணத்தில் உள்ளதாம் நிசான்.

கடந்த ஜூன் மாதத்தில் மார்க்கெட்டில் விற்பனையான கார்களின் நிலவரத்தை எடுத்துப் பார்த்தால் ஹுண்டாய் ஐ 10, அதில் முதலிடம் வகிக்கிறது. மொத்தம் 12,678 ஐ - 10 மாடல் கார்கள் விற்பனை ஆகியுள்ளதாம். அதற்கு அடுத்தபடியாக மாருதி ஸ்விஃப்ட் 9,033 கார்கள் விற்பனையாகியுள்ளன. மைக்ராவை எடுத்துக் கொண்டால், வெறும் 544 கார்கள் மட்டுமே மார்க்கெட்டில் விலை போயுள்ளன.

விற்பனையில் நிலவும் இத்தகைய மந்த நிலை காரணமாகக்கூட புதிய மைக்ரா மாடலை இந்தியாவில் தற்போதைக்கு அறிமுகப்படுத்த வேண்டாம் என்ற முடிவுக்கு நிஸான் நிறுவனம் வந்திருக்க வாய்ப்புள்ளது எனக் கூறுகிறார்கள்...

Most Read Articles
English summary
Nissan Will Not Manufacture The Next-Gen Micra Hatchback In India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X