2025 முதல் புதிய பெட்ரோல், டீசல் கார்களின் விற்பனை நிறுத்தப்படும் நாடு எது?

By Ravichandran

வட ஐரோப்பிய நாடான நார்வேயில், 2025-ஆம் ஆண்டு முதல் அல்லது அதற்கு முன்னதாக பெட்ரோல் மற்றும் டீசல் அடிப்படையில் இயங்கும் புதிய கார்களின் விற்பனை நிறுத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

நார்வேயில் அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகிய இந்த திட்டத்தின் செய்தி, 2 மாதங்களுக்கு முன்னர், நெதர்லாந்து நாட்டு நாடாளுமன்றத்தின் கீழ் அவையில் நிறைவேற்றபட்ட மசோதாவை போன்றதாகும். எனினும், நெதர்லாந்தில் நிறைவேற்றபட்ட இந்த மசோதா சட்டமாக நடைமுறைக்கு கொண்டு வருவதில், சில சிக்கல்கள் உள்ளன.

ஆனால், நார்வேயில் அமல்படுத்தப்பட உள்ள பெட்ரோல் மற்றும் டீசல் கார்களின் விற்பனை நிறுத்தம் குறித்த திட்டத்திற்கு எந்த விதமான தடைகளும் இல்லை. இதற்கு முக்கிய காரணம், நார்வே நாட்டில் உள்ள 4 முக்கிய அரசியல் கட்சிகளும் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளன.

நார்வே நாட்டில், இந்த திட்டம் இன்னும் சட்டமாக கூட மாறாத நிலையில், டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சிஇஓ-வான எலான் மஸ்க், இந்த செய்தி குறித்து நார்வேவுக்கு ட்விட்டர் மூலம் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

இதில், இன்னொரு ஆச்சரியமூட்டும் தகவல் உள்ளது. சர்வதேச அளவில், அதிக அளவில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில், நார்வேவும் ஒன்றாக உள்ளது. இந்த கச்சா எண்ணெய் கொண்டு தான் பெட்ரோல் மற்றும் டீசல் தயாரிக்கபட்டு, ஃபாஸ்ஸில் ஃப்யூவல் மூலம் இயங்கும் கார்கள் இயக்கபடுகிறது.

norway-2025-petrol-diesel-cars-ban-india-also-implementing-steps

இத்தகையதொரு திட்டம் இந்தியாவிலும் அமல்படுத்தபட உள்ளது. இந்தியாவிற்கான மின்சாரத்துறை அமைச்சர் பியுஷ் கோயல் வகுத்துள்ள திட்டம், மசோதா மற்றும் சட்டம் ஆகிய கட்டங்களை மீறி வந்தவுடன், இந்தியாவில் அனைத்து கார்களும், மின்சாரம் மூலம் இயங்குபவையாக (எலக்ட்ரிக் கார் போல) இருக்கும். இந்த திட்டம், இந்தியாவில் சுமார் 2030-ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வரம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

Tamil
English summary
Northern European country Norway is reportedly set to ban sales of new diesel and petrol powered vehicles by 2025. Norwegian proposal has approval of all four major political parties in Norway. India could soon follow suit and become fully electric by 2030, if proposal by Piyush Goyal, Minister of State (Independent Charge) for Power becomes law. To know more, check here...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more