ஓலா நிறுவனத்தின் ஓலா லக்ஸ் சேவை மும்பையில் துவங்கபட்டுள்ளது

Written By:

ஓலா நிறுவனம், இந்தியாவில் முன்னணி கேப் சேவை வழங்கும் நிறுவனமாக விளங்கி வருகிறது. தற்போது, ஓலா நிறுவனம், ஓலா லக்ஸ் என்ற புதிய வகையிலான கேப் சேவையை மும்பையில் துவங்கியுள்ளது.

ஓலா லக்ஸ் கேப் சேவையில், வாடிக்கையாளர்கள் சொகுசு கார்களான ஆடி, பிஎம்டபுள்யூ மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் ஆகியவற்றை ஓலா ஆப் மூலம் புக்கிங் செய்து பயணிக்கலாம்.

ola-lux-cab-service-introduced-now-in-mumbai

ஓலா லக்ஸ் கேப் சேவை, தற்போதைய நிலையில் மும்பையின் சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் கிடைக்கிறது. மும்பையில் இந்த ஓலா லக்ஸ் கேப் சேவை கிடைக்கும் பகுதியில் வசிக்கும் வாடிக்கையாளர்களின் மொபைல்ஃபோன்களில் மட்டுமே ஓலா லக்ஸ் கேப் சேவையின் குறியீடான ஓலா லக்ஸ் ஐகான் (OLA LUX icon) தோன்றுகிறது.

ஓலா லக்ஸ் கேப் சேவையை பயன்படுத்த வாடிக்கையாளர்கள், குறைந்தபட்சம் 200 ரூபாய் செலுத்த வேண்டும். ஒவ்வொரு கிலோமீட்டர் தூரத்திற்கும், 19 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. மேலும், ரைட் டைம் ஃபேர் (கட்டணம்) என்ற பெயரில், ஒவ்வொரு கிலோமீட்டர் தூரத்திற்கும் 2 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

தற்போதைய நிலையில், ஓலா நிறுவனம், இந்த ஓலா லக்ஸ் சேவை மும்பையில் துவக்கியுள்ளது. இந்த ஓலா லக்ஸ் சேவை, விரைவில் இந்தியாவின் பிற நகரங்களில் துவக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

English summary
Ola has introduced a brand new service called as Ola Lux Cab Service. In Ola Lux, Users can book luxury cars like those from brands like Audi, BMW and Mercedes-Benz on Ola app. Ola Lux is currently available only in certain parts of Mumbai. Ola customers who use this service, will have to pay minimum charge of Rs. 200. To know more about Ola Lux, check here..
Story first published: Saturday, May 28, 2016, 10:35 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more