புதிய மற்றும் பழைய சொகுசு கார்களின் மீது 1% கூடுதல் வரி விதிக்கப்படும்

Written By:

புதிய மற்றும் பழைய சொகுசு கார்களின் மீது, ஜூன் மாதம் முதல் 1% கூடுதல் வரி விதிக்கப்படுகிறது.

நாளுக்குநாள் கார்களின் விலை கூடிக்கொண்டே இருக்கிறது. அதுவும் சொகுசு கார்களின் விலைகள் தொடர்ந்து ஏறுமுகத்திலேயே தான் உள்ளது. இந்த ஜூன் மாதம் முதல், பழைய சொகுசு காரோ (யூஸ்ட் கார் / உபயோகிக்கப்பட்ட கார்) அல்லது புதிய சொகுசு காரோ, 10 லட்சம் ரூபாய்க்கு கூடுதலான விலை கொண்ட அனைத்து கார்களின் மீதும் கூடுதலாக 1% வரி விதிக்கப்படும்.

old-or-new-luxury-cars-to-attract-1-percent-additional-duty-from-june-onwards

இந்த 1% கூடுதல் வரி, கடைசி நிலை வாடிக்கையாளர் மூலம், அவர் வாங்கும் டீலரிடமோ அல்லது தனிப்பட்ட உரிமையாளரிடமோ செலுத்தப்பட வேண்டும். இந்த 1% கூடுதல் வரி, வாடிக்கையாளர்களின் கார் வாங்கும் வழக்கத்தை பெரிய அளவில் பாதித்து விடாது என யூஸ்ட் கார் டீலர்கள் கூறுகின்றனர்.

மஹிந்திரா ஃபர்ஸ்ட் சாய்ஸ் வீல்ஸ் நிறுவனத்தின் சிஇஓ-வான நாகேந்திரா பல்லே பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார்.

"எங்களுக்கு 10 லட்சம் ரூபாய்க்கு கூடுதலான விலை கொண்ட யூஸ்ட் கார்களின் விற்பனையின் அளவு 2%-திற்கும் குறைவாகவே உள்ளது. மேலும், இந்த யூஸ்ட் கார்கள் சந்தை விலைகளை பொருத்து பெரும் மாற்றங்கள் நிகழும் சந்தை அல்ல.

இந்த செக்மன்ட்டில், காரை வாங்க ஒரு வாடிக்கையாளர் 14 முதல் 20 லட்சம் ரூபாய் வரை செலவு செய்ய தயாராக உள்ள நிலையில், கூடுதலாக விதிக்கப்படும் 1% வரி மூலம், அவர்களின் கார் வாங்கும் முடிவுகள் மாறிவிடாது. இந்த 1% கூடுதல் வரிக்காக தயங்கி யாரும் அவர்களின் முடிவுகளை மாற்றி கொள்ள வாய்ப்புகள் இல்லை" என நாகேந்திரா பல்லே கூறினார்.

English summary
Luxury Cars - either Old or New, would be charged 1% Additional Duty from June onwards. Cars are getting expensive, specially the luxury ones. Now, any luxury car, no matter new or old, which is above Rs. 10 lakh will be charged 1 percent additional duty from this June onwards. Additional 1 percent tax will be payable by end customer to dealer or to private seller...
Story first published: Friday, June 3, 2016, 17:55 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark