ஒரே கப்பலில் 6,316 கார்களை அனுப்பி மும்பை துறைமுகம் புதிய சாதனை!

By Meena

உலக நாடுகள் எல்லாம் பொருளாதார மந்த நிலையைக் கண்டு கையைப் பிசைந்தபடி நிற்கும் போது, நெருப்புடா.... என மாஸ் காட்டி கால் மேல் கால் போட்டு அமர்ந்தது இந்தியா. காரணம், சர்வதேச சமூகத்தை பயமுறுத்திய எந்த விதமான பொருளாதார சுணக்கங்களும் இந்தியாவை பாதிக்கவில்லை.

மாறாக, நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேலும் 7.5 சதவீதம் உயர்ந்தது. இத்தனைக்கும் கடந்த இரு ஆண்டுகளாக பெரும்பாலான மாநிலங்களில் பருவ மழை வேறு பொய்த்துப் போனது. அவ்வளவு நெருக்கடிக்கு மத்தியிலும் தேசம் வளர்ச்சிப் பாதைக்குச் சென்று கொண்டிருப்பதற்குக் காரணம் இந்தியாவில் தொழில் முதலீடுகள் அதிகரித்ததுதான்.

கார் ஏற்றுமதி

இதுவரை இல்லாத அளவு தொழில் முதலீட்டுக்கு உகந்த நாடாக இந்தியா உருவெடுத்ததற்கு, மத்திய அரசு மேற்கொண்ட சில பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் முக்கியக் காரணம். அதன் ஒரு பகுதியாக இந்தியாவின் கார் ஏற்றுமதி புதியதொரு மைல் கல்லை எட்டியுள்ளது. அதாவது, கடந்த சில நாள்களுக்கு மும்பை துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட ஓசிடி-2 என்ற ஒரு சரக்குக் கப்பலில் சுமார் 6,316 கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதற்கு முன்பு ஒரு கப்பலில் 5,376 கார்கள் அனுப்பப்பட்டதே சாதனையாக இருந்தது. தற்போது அது முறியடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜெனரல் மோட்டார்ஸுக்குச் சொந்தமான 3,115 கார்களும், ஃவோல்க்ஸ் வேகன் 3,093 கார்களும் அந்தக் கப்பலில் பயணிக்கின்றன. மெக்சிஸோ நாட்டுக்குச் சென்றடையவுள்ள அந்தக் கார்கள், மும்பையிலிருந்து கப்பல் வழியே ஆகஸ்ட் 9-ஆம் தேதியன்று புறப்பட்டுச் சென்றுள்ளன.

மும்பை துறைமுகத்தில் இதற்கு முன் இல்லாத வகையில் ஒரே நேரத்தில், அதுவும் ஒரே கப்பலில் இவ்வளவு கார்களை ஏற்றுமதி செய்தது சாதனைக்குரிய செயல் என்று மத்திய அரசும், துறைமுகக் கழகமும் ஒருசேர பெருமிதம் தெரிவித்துள்ளன.

கடந்த சில ஆண்டுகளில் மட்டும் மும்பை துறைமுகத்தின் சரக்கு கையாளும் திறன் 25 சதவீதம் அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியா ஏற்றுமதி மையமாகத் திகழ்வதற்கு நாட்டின் உற்பத்தி அதிகரிப்பது முக்கியக் காரணம். மத்திய அரசு முனைப்புடன் செயல்படுத்தி வரும் இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதையே இது காட்டுகிறது.

இந்த சாதனை நடவடிக்கைகள் தொடர வேண்டும் என்று 125 மக்களுடன் சேர்த்து டிரைவ் ஸ்பார்க்கும் விரும்புகிறது...

Most Read Articles
English summary
One More Record Broken — Mumbai Port Ships 6,316 Cars In A Go.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X