லாஃபெராரி காரின் கன்வெர்ட்டிபிள் மாடலின் படங்கள், விபரங்கள் வெளியீடு

By Meena

லாஃபெராரி காரின் பெயரைக் கேட்கும் தமிழர்கள் பெரும்பாலானோருக்கு தலயின் நினைப்புதான் வரும்.

நரேன் கார்த்திகேயன், அஜீத் குமார் என பிரபலங்களே பார்த்து மயங்கி சொக்கும் பக்கா ஸடைல் மற்றும் மெஜஸ்டிக் பிராண்ட் ஃபெராரி. அந்த நிறுவனத்தின் ரேஸ் கார் ஒன்று முதன் முதலாக தமிழகத்துக்கு வந்தபோது, அதன் பக்கத்தில் நின்று ஃபோட்டோ எடுத்துக் கொள்ள பெருங்கூட்டம் திரண்டது. காலை முதல் இரவு போட்டா போட்டியே நடந்தது எனலாம்.

ஃபெராரி கார்

அப்படி ஒரு செம காரான லாஃபெராரி தனது புதிய ஓபன் டாப் காரை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் வடிவமைப்பு மற்றும் சிறப்பம்சங்களைப் பார்த்தவர்கள், ஃபாஸ்ட் அண்டு ஃப்யூரியஸ் படம் பார்த்த மாதிரி பிரம்மாண்டமான ஒரு ரியாக்ஷனைக் கொடுத்துள்ளார்கள்.

டாப் இல்லாத மாடல் என்பதால், பாலிவுட் நடிகர் ஜான் ஆப்ரஹாம் மாதிரி பார்க்க படு ஸ்டைலாகக் காட்சியளிக்கிறது. சமீபத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியொன்றில் இந்த கார் காட்சிக்கு வைக்கப்பட்டது.

பாரீஸில் நடைபெறவுள்ள மோட்டார் ஷோவில் லாஃபெராரியின் இந்த புதிய மாடல் முறையாக அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மாடலின் பெயரையையும் அப்போது ஃபெராரி நிறுவனம் அறிவிக்கப் போகிறதாம்.

கழற்றி மாட்டக் கூடிய ரிமூவபிள் டாப் இந்த மாடலில் கொடுக்கப்பட்டுள்ளது. கடினமான டாப் அல்லது இலகுவான டாப் என இரு ஆப்ஷனின் லாஃபெராரி அறிமுகமாகியுள்ளது.

லிமிட்டட் எடிசன் என்பதால் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான கார்களே தயாரிக்கப்படவுள்ளன. அந்தக் கார்களுக்கான புக்கிங்கும் முடிந்துவிட்டது என்பது ஏமாற்றமான செய்தி.

லாஃபெராரியின் ஓபன் டாப் மாடல் கார் 6.3 லிட்டர் வி12 எஞ்சின் கொண்டது. இதில் 789 பிஎச்பி திறன் உள்ளது. இதனுடன் 161 பிஎச்பி ஆற்றல் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டாரும் பொருத்தப்பட்டுள்ளது.

இவை இரண்டும் மொத்தமாக சேர்த்து, 950 பிஎச்பி மற்றும் 900 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும். இந்த ஹைபிரிட் எஞ்சின் மாடலில் மொத்தம் 7 கியர்கள் மற்றும் டூயல் கிளட்ச் கியர் பாக்ஸ்-கள் உள்ளன.

சர்வதேச அளவில் அனல் தெறிக்க விடப் போகும் புதிய லாஃபெராரி எப்போது மார்க்கெட்டுக்கு வரும்? என்ற எதிர்பார்ப்புதான் ஆட்டோமொபைல் ரசிகர்களிடம் தற்போது உள்ளது.

Most Read Articles
English summary
Open Top LaFerrari Official Images & Specifications Revealed.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X