பெட்ரோல், டீசல் விலைகள் 2-வது முறையாக மீண்டும் உயர்ந்தது

Written By:

இந்த அக்டோபர் மாதத்தில், இதற்குள்ளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் 2-வது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள், மாதத்திற்கு இரு முறைகள் மாற்றம் செய்யப்படுகிறது.

ஆனால், இந்த மாதம் ஆரம்பத்தில் தான், சில தினங்களுக்கு முன்பு தான் பெட்ரோலிய பொருட்களின் விலைகளில் மாற்றம் செய்யப்பட்டது. அதற்குள்ளாக மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளது.

சமீபத்திய விலை மாற்றத்திற்கு பிறகு, பெட்ரோல் விலை 14 பைசா என்ற அளவிலும், டீசல் விலை 10 பைசா என்ற அளவிலும் உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்த விலையேற்றத்திற்கு பிறகு, இந்தியாவின் தலைநகர் டெல்லியில், 1 லிட்டர் பெட்ரோல் விலை 64.72 என்ற விலையிலும், 1 லிட்டர் டீசல் விலை 52.61 ரூபாய் என்ற விலையிலும் விற்கப்படுகிறது.

டீலர்களுக்கு வழங்கப்படும் கமிஷன் அதிகரித்ததால் தான், தற்போது பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டீலர்களுக்கு வழங்கப்படும் கமிஷனை பொருத்து, பிற மாநிலங்களிலும், பெட்ரோல் மற்றும் டீசலின் விலைகள் உயர்த்தப்படலாம் என ஐஒசி எனப்படும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

English summary
Petrol And Diesel Prices are hiked for Second Time this month already. Just after days after fuel prices revision in India, prices of petrol and diesel have are increased again. Reason quoted for fuel prices hike is, the increase in commission paid to dealers. After latest revision, petrol prices have gone up by 14 paise per litre and diesel by 10 paise per litre. To know more, check here...
Story first published: Wednesday, October 5, 2016, 12:39 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos