பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு

By Ravichandran

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை, லிட்டருக்கு 5 பைசா என்ற அளவிலும், டீசல் விலை லிட்டருக்கு 1.26 ரூபாய் என்ற அளவிலும் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வு, புதன்கிழமை (ஜூன் 15) நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

petrol-diesel-prices-hiked-effective-from-15th-june-midnight

கடந்த மே 1 முதல், எரிபொருள் விலைகள் 4 முறைகள் கூடியுள்ளது. கடைசியாக, ஜூன் 1-ஆம் பெட்ரோல், டீசல் விலைகள் மாற்றி அமைக்கபட்டது. அப்போது, பெட்ரோல் விலை, லிட்டருக்கு 2.58 ரூபாய் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 2.26 என்ற அளவில் உயர்த்தபட்டுள்ளது.

கடந்த மே 1 முதல், 4 முறைகள் செய்யபட்ட விலை மாற்றங்களை ஒன்று சேர்த்தால், இது வரை பெட்ரோல் விலை லிட்டருக்கு 4.52 ரூபாய் என்ற அளவிலும், டீசல் விலை லிட்டருக்கு 7.72 ரூபாய் என்ற அளவிற்கு உயர்த்தபட்டுள்ளது.

"சர்வதேச சந்தைகளில் உள்ள கச்சா எண்ணெய் மதிப்பை பொருத்தும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியை பொருத்தும், இந்த விலை மாற்றங்களின் தாக்கம், வாடிக்கையாளர்கள் மீதும் குறிப்பிட்ட அளவுக்கு கடத்தப்படுகிறது" என இந்தியாவின் முன்னணி பெட்ரோலிய நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Most Read Articles
English summary
Petrol price is hiked by 5 Paise/Litre and Diesel Prices are hiked Rs. 1.26/Litre. New hiked prices are effective from Wednesday (15th June) midnight. Current level of international product prices of Petrol & Diesel and rupee-dollar exchange rate warrant are quoted for increase in price. Rates of petrol and diesel are revised on 1st and 16th of every month. To know more, check here...
Story first published: Thursday, June 16, 2016, 13:47 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X