பெட்ரோல் மற்றும் டீசலின் விலை குறைக்கபட்டுள்ளது

By Ravichandran

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை குறைந்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசலின் விலை, இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக குறைந்துள்ளது. பெட்ரோல் விலை 3.5% என்ற அளவிலும், டீசல் விலை 0.8% என்ற அளவிலும் குறைக்கபட்டுள்ளது.

இதன்படி, பெட்ரோல் லிட்டருக்கு 2.25 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 42 பைசாவும் குறைந்துள்ளது.

இந்தியாவில் தலைநகரான டெல்லியில், பெட்ரோல் விலை லிட்டருக்கு 62.51 ரூபாயாக உள்ளது. முன்னதாக, பெட்ரோல் விலை லிட்டருக்கு 64.76 ரூபாயாக இருந்தது.

petrol-prices-drop-by-rs-2-25-paise-diesel-by-42-paise-in-india

டெல்லியில், டீசல் விலை லிட்டருக்கு 54.28 ரூபாயாக உள்ளது. முன்னதாக, டீசல் விலை லிட்டருக்கு 54.70 ரூபாயாக இருந்தது.

கடந்த மாதத்தின் இறுதியில், பெட்ரோல் விலை லிட்டருக்கு 89 பைசா என்ற அளவிலும், டீசல் விலை லிட்டருக்கு 49 பைசா என்ற அளவிலும் குறைக்கப்பட்டது. இந்த வீழ்ச்சியானது, கடந்த 2 மாதங்ககளாக ஏறுமுகத்தில் இருந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுகளில் இருந்து இடைவேளை அளிக்கும் வகையில் அமைந்தது.

"சர்வதேச சந்தைகளில் நிலவும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகல் பொருத்தும், அமெரிக்க டாலருக்கு டாலருக்கு நிகரான ரூபாயின் எக்ஸ்சேஞ்ச் மதிப்பை பொருத்தும், இந்த விலை மாற்றம் செய்யபட்டுள்ளது. இதில் ஏற்படும் விலை மாற்றத்தின் நன்மையானது வாடிக்கையாளர்களுக்கும் கடத்தப்படுகிறது" என ஐஓசி எனப்படும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசலின் விலைகள், 2 வாரங்களுக்கு ஒரு முறை, அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி), பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் ஹெச்பிசிஎல் எனப்படும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் மூலம் தீர்மாணிக்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Petrol and diesel prices have been slashed for second time in this month. Prices of petrol has fallen by 3.5 percent and diesel by 0.8 percent. In terms of actual money, petrol is now cheaper by Rs.2.25 while diesel prices have fallen 42 paise. In Delhi, petrol will now cost Rs 62.51/litre down from the previous price of Rs. 64.76/litre. To know more, check here...
Story first published: Saturday, July 16, 2016, 13:11 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X