பெட்ரோல், டீசல் விலை கணிசமாக உயர்வு!

Written By:

பெட்ரோல், டீசல் விலை கணிசமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை மாற்றி நிர்ணயம் செய்து வருகின்றன.

கடந்த ஆகஸ்ட் 1ந் தேதி பெட்ரோல் விலை 89 காசுகளும், டீசல் விலை 49 காசுகளும் குறைக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து, கடந்த 15ந் தேதி பெட்ரோல் விலை 2 ரூபாயும், டீசல் விலை 1 ரூபாயும் குறைக்கப்பட்டது.

பெட்ரோல் டீசல் விலை

இந்தநிலையில், தற்போது பெட்ரோல், டீசல் விலை அதிரடியாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இதன்படி, பெட்ரோல் விலை 3 ரூபாய் 38 காசுகளும், டீசல் விலை 2 ரூபாய் 67 காசுகளும் உயர்த்தப்பட்டிருக்கிறது.

இந்த விலை உயர்வுப்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 63.02க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ54.43க்கும் விற்பனை செய்யப்படும்.

இன்று நள்ளிரவு முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வரும் என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இந்த விலை உயர்வு வாகன பயன்பாட்டாளர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும்.

English summary
Petrol Prices Hiked by Rs 3.38/litre, Diesel up by Rs 2.67
Story first published: Wednesday, August 31, 2016, 21:27 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos