பீஜோ கார் நிறுவனம், 2018-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் பிரவேசம் செய்ய திட்டம்

Written By:

பீஜோ கார் உற்பத்தி நிறுவனம் 2018-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் பிரவேசம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

பீஜோ (Peugeot) நிறுவனம், இந்தியாவில் வெற்றிகரமாக நீடித்து நிலைக்கம் முடியவில்லை. எனினும், பீஜோ கார் நிறுவனம் இந்தியாவில் மறுபிரவேசம் செய்ய உத்தேசித்துள்ளனர்.

ஃபிரான்ஸ் நாட்டை மையமாக கொண்டு இயங்கும் பீஜோ நிறுவனம், தங்களுக்கு என ஒரு கூட்டணியை உருவாக்கி கொண்டு நுழைய திட்டமிட்டுள்ளனர். இந்த அறிவிப்பை, பிஎஸ்ஏ பீஜோ சிட்ரியான் நிறுவனத்தின் சேர்மேன் கார்லோஸ் டவாரஸ் வெளியிட்டார்.

பீஜோ நிறுவனத்தின் குறிக்கோளே, 2018-ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் உள்நாட்டு தொழில் பங்குதாரரை அறிவிக்க உள்ளது. இதையடுத்து, இந்திய சந்தைகளுக்கு ஏற்ற மாடல்களை வடிவமைப்பதில் பீஜோ நிறுவனம் ஈடுபடும். ஃபிரான்ஸ் நாட்டை மையமாக கொண்டு இயங்கும் பீஜோ நிறுவனம் தாங்கள் தயாரிக்கும் மாடல்களை 2021-ஆம் ஆண்டு முதல் அறிமுகம் செய்யும்.

peugeot-to-enter-india-by-2018-with-local-carmaker

பீஜோ நிறுவனம், இந்தியாவில் உள்நாட்டு தொழில் பங்குதாரரை தேடுகிறது என்ற அறிவிப்பின் படி, இந்தியாவை மையமாக கொண்டு இயங்கும் நிறுவனத்தை தேர்ந்து எடுத்து, இந்தியாவிலேயே காரிகளை தயாரிக்க திட்டமிடுகிறது என பொருள் ஆகிறது.

பீஜோ நிறுவனம், தங்களுக்கான தனிப்பட்ட உற்பத்தி ஆலையை தாங்களே ஸ்தாபித்து கொள்வதா அல்லது தற்போது இயங்கி கொண்டிருக்கும் உற்பத்தி ஆலையிலேயே தங்கள் கார்களை தயாரிப்பதா என பின்னர் முடிவு எடுத்து கொள்ளும்.

தற்போது நிலவும் வதந்திகள் படி, பீஜோ நிறுவனம், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துடன் கை கோர்த்து கொள்ளும் என எதிர்பார்க்கபடுகிறது. இப்படிபட்ட கூட்டணி அமைந்தால், பீஜோ நிறுவனத்தின் இந்தியாவில் உற்பத்தி துவங்கும் திட்டங்களை விரைவில் அமல்படுத்த முடியும்.

peugeot-to-enter-india-by-2018-with-indian-carmakers

இந்தியா தான், உலகிலேயே மிக வேகமாக வளர்ந்து வரும் ஆட்டோமொபைல் சந்தையாக திகழ்கிறது. இதனால், எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக, பீஜோ நிறுவனம் இந்திய ஆட்டோமொபைல் சந்தைகளில் தடம் பதிக்க துடித்து கொண்டிருக்கிறது.

பீஜோ நிறுவனம் தங்களுக்கு என சில இலக்குகளை கொண்டுள்ளது. ஆஸ்திரேலியா, தென் கொரியா, ஜப்பான், இந்தியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளை உள்ளடக்கிய இந்திய-பசிஃபிக் பகுதிகள் மற்றும் சார்க் நாடுகளில் தடம் பதிப்பதே பீஜோ நிறுவனத்தின் இலக்காக உள்ளது.

English summary
France based Car maker Peugeot, is in plans on re-entering Indian market. France-based car manufacturer plans to find partner in India. Peugeot would announce a local partner in India by 2018. Peugeot will developing their models for the Indian market. French-based models from manufacturer will be launched in India by 2021. To know more, check here...

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark