பொலாரிஸ் ஆஃப்ரோட் வாகனங்களை, இனி ஸ்னாப்டீல் மூலமும் வாங்கலாம்

Written By:

பொலாரிஸ் ஆட்டோமொபைல் நிறுவனம், ஸ்னாப்டீல் இணைய வழி விற்பனை நிறுவனத்துடன் இணைந்து தங்களின் வாகனங்களை விற்க துவங்கியுள்ளது.

பொலாரிஸ் ஆட்டோமொபைல் நிறுவனம் ஆஃப் ரோட் வாகனங்களை தயாரிப்பதில் புகழ்பெற்ற நிறுவனம் ஆகும். ஸ்னாப்டீல் நிறுவனமானது, இணைய வழி விற்பனையில் முன்னோடி நிறுவனம் ஆகும்.

தற்போது, பொலாரிஸ் ஆட்டோமொபைல் நிறுவன தயாரிப்புகளை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள், ஸ்னாப்டீல் இணையதளத்தில் உள்ள பொலாரிஸ் நிறுவனத்தின் பிரிவிற்கு செல்ல வேண்டும். அடுத்ததாக, திரும்பபெற முடியாத புக்கிங் டெபாஸிட் தொகையான 3,000 ரூபாயை செலுத்தி தங்களுக்கு பிடித்த பொலாரிஸ் வாகனத்தை புக்கிங் செய்து கொள்ளலாம்.

பொலாரிஸ் இந்தியா நிறுவனம் இந்தியாவில் வழங்கும் அனைத்து வாகனங்களையும், ஸ்னாப்டீல் தடத்திலும் வழங்குகிறது. அவுட்லா 50 முதல் ரஷ் ப்ரோ 600 ஸ்னோமொபைல் மற்றும் மிகவும் விலை உயர்ந்த ஆர்இசட்ஆர் எக்ஸ்பி டர்போ (27,99,999 ரூபாய் எக்ஸ்-ஷோரூம்) உள்ளிட்ட அனைத்தும் ஸ்னாப்டீல் மூலமாகவும் கிடைக்கும்.

polaris-ties-up-with-snapdeal-for-online-sales-of-offroad-vehicles

இந்த கூட்டணி குறித்து பொலாரிஸ் இந்தியா நிறுவனத்தின் மேனேஜின் டைரக்டரான பங்கஜ் தூபே மிகுந்த பெருமிதத்தை வெளிபடுத்தினார். இது குறித்து கருத்து தெரிவித்த பங்கஜ் தூபே, "ஸ்னாப்டீல் மூலம் ஏற்படுத்தி கொண்ட கூட்டணியினால், நாங்கள் தான் இந்தியாவில் இணைய வழியில் ஆஃப் ரோட் வாகனங்கள் விற்கு முதல் நிறுவனம் என்ற பெருமையை பெற்றுள்ளோம்" என கூறினார்.

"பொலாரிஸ் வர்த்தக வாகனங்கள் மற்றும் ஸ்னோமொபைல் உள்ளிட்ட வாகனங்களும் இந்த ஸ்னாப்டீல் இணையதளத்தின் மூலம் விற்கபடும்" என பங்கஜ் தூபே தெரிவித்தார்.

English summary
Off-road vehicle manufacturer Polaris has tied up with Snapdeal to sell their Vehicles Online. Customers wishing to book an order, just need to head over to Polaris section at Snapdeal and place an order pay a Rs. 3,000 non-refundable booking amount and book your vehicle. The Outlaw 50 to the Rush Pro 600 snowmobile, RZR XP Turbo all are available though Snapdeal .
Story first published: Monday, April 11, 2016, 15:36 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark