போர்ஷே நிறுவனம், புதிய 2.0 லிட்டர் மசான் எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டம்

Written By:

போர்ஷே நிறுவனம், 2.0 லிட்டர் மசான் எஸ்யூவி காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

போர்ஷேவின் புதிய 2.0 லிட்டர் மசான் எஸ்யூவி குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

போர்ஷே 2.0 லிட்டர் மசான்...

போர்ஷே 2.0 லிட்டர் மசான்...

ஜெர்மனியை மையமாக கொண்டு இயங்கும் சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான போர்ஷே, தங்களின் நுழைவு நிலை வேரியன்ட்டாக இருக்கும் மசான் எஸ்யூவியை காட்டிலும் குறைந்த கொள்ளளவு கொண்ட 2.0 லிட்டர் மசான் மாடலை உருவாக்கி வருகின்றனர்.

மசான் இஞ்ஜின்;

மசான் இஞ்ஜின்;

நுழைவு நிலை வேரியன்ட்டான இந்த மசான் தான், இருப்பதிலேயே மிக குறைந்த கொள்ளளவு கொண்ட இஞ்ஜின் கொண்டுள்ளது.

இந்த மாடல், 4-சிலிண்டர்கள் உடைய 1,984 சிசி, டர்போசார்ஜ்ட் இஞ்ஜின் கொண்டுள்ளது.

இந்த மிகச்சிறிய மசான் மாடலின் இஞ்ஜின், 248 பிஹெச்பியையும், 370 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

போர்ஷேவின் 2.0 லிட்டர் இஞ்ஜின் கொண்ட மசானின் இஞ்ஜின், 7-ஸ்பீட் பிடிகே ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது.

இதன் மூலம் தான், 4 சக்கரங்களுக்கும் பவர் கடத்தப்படுகிறது.

செயல்திறன்;

செயல்திறன்;

போர்ஷேவின் 2.0 லிட்டர் மசான் எஸ்யூவி, நின்ற நிலையில் இருந்து மணிக்கு 100 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை 6.7 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டுள்ளது.

உச்சபட்ச வேகம்;

உச்சபட்ச வேகம்;

2.0 லிட்டர் போர்ஷே மசான் எஸ்யூவி, உச்சபட்சமாக மணிக்கு 229 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை எட்டும் திறன் உடையதாகும்.

மைலேஜ்;

மைலேஜ்;

2.0 லிட்டர் போர்ஷே மசான் எஸ்யூவி, ஒரு லிட்டருக்கு 13.5 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் வகையிலான எரிபொருள் திறன் கொண்டுள்ளது.

வகைப்படுத்தல்;

வகைப்படுத்தல்;

போர்ஷே மசானின் புதிய வேரியன்ட், தற்போது இந்தியாவில் விற்கபட்டு வரும் மசான் மாடலை காட்டிலும், குறைந்த விலையில் விற்கப்படலாம்.

இது, தற்போது விற்கபட்டு வரும் மசான், கேயேன் எஸ்யூவிக்கு நிகரான விலையிலேயே விற்கப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.

விலை;

விலை;

போர்ஷே 2.0 லிட்டர் மசான் எஸ்யூவி, இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் போது, சுமார் 97-98 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் விற்கப்படலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

அறிமுகம்;

அறிமுகம்;

போர்ஷே 2.0 லிட்டர் மசான் எஸ்யூவி, விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

மசானைவிட விலை குறைவான க்ராஸ்ஓவரை வடிவமைக்கும் போர்ஷே!

500 கிமீ ரேஞ்ச் கொண்ட போர்ஷே எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார்!!

போர்ஷே தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
German luxury carmaker Porsche is planning to launch their entry-level variant of its smaller SUV, the Macan, in India very soon. This miniscule (for a Porsche), with the smallest engine in Porsche range, has 1,984cc, 4-cylinder, turbocharged powerplant. This 2.0-litre Macan can sprint from 0-100km/h in 6.7 seconds. It has Top Speed of 229km/h. To know more, check here...
Story first published: Tuesday, May 31, 2016, 13:06 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark