போர்ஷே நிறுவனத்தின் அனைத்து மாடல்களிலும், ஹைப்ரிட் வேரியண்ட் விரைவில் அறிமுகம்

Written By:

போர்ஷே நிறுவனம், தங்களின் அனைத்து மாடல்களிலும், ஹைப்ரிட் வேரியண்ட்டை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

ஹைப்ரிட் வேரியண்ட்டை அறிமுகம் செய்ய உள்ள இந்த திட்டம் தொடர்பான கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்வோம்.

ஹைப்ரிட் வேரியண்ட்?

ஹைப்ரிட் வேரியண்ட்?

உலக முழுவதிலும், பல்வேறு நாடுகளில், மாசு உமிழ்வு குறைவாக உள்ள ஹைப்ரிட் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களின் பிரயோகம் அதிகரித்து கொண்டே இருக்கிறது.

இந்த நிலையில், ஜெர்மனியின் ஸ்டுட்கார்ட் என்ற இடத்தை மையமாக கொண்டு இயங்கும் போர்ஷே நிறுவனமும், தங்களின் அனைத்து மாடல்களிலும், ஹைப்ரிட் வேரியண்ட்களை தயாரிக்க முடிவு செய்துள்ளது.

911-ல் ஹைப்ரிட்?

911-ல் ஹைப்ரிட்?

ஸ்போர்ட்ஸ் கார்கள் உற்பத்திக்கு புகழ்பெற்ற போர்ஷே, தங்கள் நிறுவனத்தின் மிகவும் புகழ்வாய்ந்த மாடலான போர்ஷே 911 மாடலிலும், பிளக்-இன் ஹைப்ரிட் மாடலை கொண்டுவர முடிவு செய்துள்ளனர்.

சுமார் 50 கிலோமீட்டர் வரையிலான ரேஞ்ச் கொண்ட இந்த போர்ஷே 911 மாடல், வாகன சந்தைகளுக்கு 2018-ஆம் ஆண்டு இறுதிக்குள் கொண்டுவரப்படும்.

முதலீடு?

முதலீடு?

போர்ஷே நிறுவனத்தின் திட்டங்களுக்காக, சுமார் 1.1 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்யபடுகிறது.

வருங்கால திட்டங்கள்;

வருங்கால திட்டங்கள்;

வருங்கால திட்டங்கள்;

போர்ஷே நிறுவனம் செய்ய உள்ள 1.1 பில்லியன் டாலர் தொகை, அந்நிறுவனத்தின் உற்பத்தி மையத்தின் மிகப்பெரிய உற்பத்தி மையத்தில் முதலீடு செய்யபட உள்ளது.

இந்த மையத்தில் தான், போர்ஷே நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் மாடலான புதிய மிஷன் ஈ, உற்பத்தி செய்யபட உள்ளது.

இந்த மிஷன் ஈ, 600 ஹார்ஸ்பவரும், 500 கிலோமீட்டர் ரேஞ்ச் கொண்டதாக இருக்கும். இது 2020-ஆம் ஆண்டுக்குள் சந்தைகளில் கிடைக்கும் என அறிவிக்கபட்டுள்ளது.

தானியங்கி கார்கள்?

தானியங்கி கார்கள்?

செல்ஃப் டிரைவிங் கார்கள் எனப்படும் தானாக இயங்கும் கார்களை தயாரிக்கும் திட்டம், தங்கள் நிறுவனத்திற்கு இல்லை என போர்ஷே அறிவித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த உயர் அதிகாரி டாக்டர் ஆலிவர் ப்லூம், "போர்ஷே கார்களை இயக்கும் முழு ஆனந்தத்தை பெற, வாடிக்கையாளர்கள் தங்களை கார்களை தாங்களே இயக்க வேண்டும் என தெரிவித்தார்.

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
Porsche has said that, it is planning to introduce Hybrid Variant Across all its models. Stuttgart, Germany based car manufacturer, Porsche, plans to make a plug-in hybrid of its popular 911 model with a range of 50 km will available by end of 2018. Porsche also invests $1.1 billion to build the new Mission E, its first-ever all-electric model.
Story first published: Tuesday, February 23, 2016, 8:30 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark