விலை குறைவான போர்ஷே மசான் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம்!

Written By:

விலை குறைவான போர்ஷே மசான் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தேர்வாக அமையும் என்று கருதப்படுகிறது.

போர்ஷே மசான் ஆர்4 என்ற பெயரில் அறிமுகமாகி இருக்கும், இந்த புதிய மாடலில் இடம்பெற்றும் இருக்கும் சிறப்பம்சங்கள், விலை உள்ளிட்ட விபரங்களை இந்த செய்தியில் தொடர்ந்து காணலாம்.

டிசைன்

ஏற்கனவே இந்தியாவில் விற்பனையில் இருக்கும் இதனைவிட சக்திவாய்ந்த போர்ஷே மசான் எஸ்யூவி மாடல்களுக்கும், இந்த விலை குறைவான புதிய மாடலுக்கும் பெரிய வித்தியாசங்கள் இல்லை. இந்த எஸ்யூவியில் 18 இன்ச் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

இன்டீரியர்

இன்டீரியரிலும் சிறிய மாற்றங்கள்தான். இந்த எஸ்யூவியில் போர்ஷே கம்யூனிகேஷன் மேனேஜ்மென்ட் சிஸ்டம் கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. அட்ஜெஸ்ட் வசதியுடன் கூடிய சொகுசான இருக்கைகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

எஞ்சின்

புதிய போர்ஷே மசான் எஸ்யூவியில் 1,984சிசி டர்போசார்ஜ்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 248 பிஎச்பி பவரையும், 370 என்எம் டார்க்கையும் இந்த எஞ்சின் வெளிப்படுத்தும். இந்த எஸ்யூவியில் 7 ஸ்பீடு பிடிகே ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது.

மைலேஜ்

இந்த கியர்பாக்ஸ் மூலமாக எஞ்சின் சக்தி 4 சக்கரங்களுக்கும் கடத்தப்படுகிறது. இந்த மாடல் லிட்டருக்கு 12.71 கிமீ மைலேஜ் தரும் என்று போர்ஷே தெரிவித்துள்ளது.

பெர்ஃபார்மென்ஸ்

போர்ஷே மசான் ஆர்4 எஸ்யூவி 0- 100 கிமீ வேகத்தை 6.7 வினாடிகளில் எட்டிவிடும். மேலும், ஆப்ஷனலாக வழங்கப்படும் ஸ்போர்ட் க்ரோனோ பேக்கேஜ் கொண்ட மாடல் 0 - 100 கிமீ வேகத்தை 6.5 வினாடிகளிலையே தொட்டுவிடும்.

டாப் ஸ்பீடு

இந்த எஸ்யூவி அதிகபட்சமாக மணிக்கு 229 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டது. 1,770 கிலோ எடை கொண்டது. 500 லிட்டர் பூட்ரூம் இடவசதி உள்ளது.

பாதுகாப்பு வசதிகள்

போர்ஷே மசான் ஆர்4 எஸ்யூவியில் உயிர்காக்கும் காற்றுப் பைகள், பிரேக் பவரை சரிவிகிதத்தில் செலுத்தும் இபிடி நுட்பத்துடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், அதிக தரைப்பிடிப்பை தரும் டிராக்ஷன் கன்ட்ரோல், தடம் மாறுதல் குறித்து எச்சரிக்கும் லேன் டிபார்ச்சர் வார்னிங் சிஸ்டம் போன்ற பாதுகாப்பு வசதிகள் இடம்பெற்று இருக்கின்றன.

விலை விபரம்

பிற போர்ஷே மசான் எஸ்யூவிகளை விட இதற்கு இறக்குமதி வரி குறைவு. ரூ.76.84 லட்சம் மும்பை எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

English summary
The Porsche Macan R4 is the entry-level variant of the Macan in India and will compete with the likes of the Jaguar F-Pace.
Story first published: Tuesday, November 22, 2016, 10:02 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos