போர்ஷே 911 மாடலில் ஹைப்ரிட் வேரியண்ட் விரைவில் அறிமுகம்
போர்ஷே நிறுவனத்தின் அடுத்த ஹைப்ரிட் மாடல், போர்ஷே 911 மாடலாக தான் இருக்கும் என செய்திகள் வெளியாகிறது.
ஜெர்மானிய ஸ்போர்ட்ஸ் கார் உற்பத்தி நிறுவனமான போர்ஷே, 911 மாடல் தங்கள் நிறுவனம் வழங்கும் அடுத்த ஹைப்ரிட் காராக இருக்கும் என ட்விட்டரில் அறிவித்துள்ளது.
இந்த நிறுவனம், முன்னதாக போர்ஷே பனமிரா மற்றும் போர்ஷே கேயனே எஸ்யூவி ஆகிய மாடல்களில் தான் ஹைப்ரிட் வேரியண்ட்டை அறிமுகம் செய்தனர். மேலும், 918 ஸ்பைடர் ஹைப்பர் காரிலும் பிளக்-இன் ஹைப்ரிட் வேரியண்ட்டை அறிமுகம் செய்தனர். ஆனால், போர்ஷே 911 மாடலில் பிளக்-இன் ஹைப்ரிட் வேரியண்ட் அறிமுகம் செய்வது பொருத்தமாக இருக்காது என போர்ஷே கருதியது. இதனால் தான், நிகழ் தலைமுறை போர்ஷே 911 (பழைய பெயர் - 991) மாடலில் ஹைப்ரிட் வேரியண்ட் அறிமுகம் செய்ய வேண்டாம் என போர்ஷே நிறுவனம் முடிவு எடுத்து இருந்தது.

சமீபத்தில், ட்விட்டரில் வெளியிட்ட செய்தியில், தங்கள் நிறுவனத்தின் அடுத்த பிளக்-இன் ஹைப்ரிட் வேரியண்ட்டாக 911 தான் இருக்கும் என அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த அடுத்த தலைமுறை போர்ஷே 911, 2017-ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யபட உள்ளதாக செய்திகள் தெரிவிக்கிறது.
இந்த ஹைப்ரிட் 911 வெளியான உடன், போர்ஷே நிறுவனத்தின் அடுத்த திட்டம் மிஷன் ஈ என்ற எலக்ட்ரிக் மாடலை அறிமுகம் செய்வதாக தான் இருக்கும். இந்த மிஷன் ஈ மாடல், 2020-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யபடும் என எதிர்பார்க்கபடுகிறது.
Outcast: #Porsche will offer a hybrid version in each model line, in the near future even in the 911. #PAGAPC2016 pic.twitter.com/yKUbor2Cq1
— Porsche Newsroom (@PorscheNewsroom) March 11, 2016


Click it and Unblock the Notifications








